- Advertisement -

கல்வி ஞானம் செல்வம் பெருகப் புரட்டாசி புதன் வழிபாடு

- Advertisement -

ஒரு மனிதனுக்கு கல்வி, அறிவு, பொன் பொருள் எல்லாம் சேர்ந்து இருக்கும் போது தான் அந்த மனிதனுடைய வாழ்க்கை நிறைவடைகிறது. வெறும் செல்வத்தை வைத்து மட்டும் நம்மால் இந்த பூமியில் வாழ்ந்து விட முடியாது. அந்த செல்வத்தை வழி நடத்தித் தர கல்வியும், அறிவும் கொஞ்சம் தேவைப்படும். இந்த புரட்டாசி மாதம் புதன் பகவானின் ஆதிக்கம் அதிகம் நிறைந்த மாதம்.

புதன் பகவானை கலைக்காரகன், கல்விக்குரியவன் என்று சொல்கிறார்கள். இந்த புதன் பகவானோடு சேர்த்து மகாலட்சுமியின் அருள் ஆசியையும் நாம் பெற வேண்டும் என்றால், புரட்டாசி புதன்கிழமை நம்முடைய வீட்டில் என்ன வழிபாட்டை மேற்கொள்வது. எந்த மந்திரத்தை சொல்வது ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

இன்று மாலை முடிந்தவர்கள் இந்த வழிபாட்டை வீட்டில் செய்யலாம். இந்த வாரத்தை தவிர விட்டால் இனி வரக்கூடிய வாரங்களில் வரும் புதன்கிழமைகளில் இந்த வழிபாட்டு முறையை பின்பற்றி பலன் பெறலாம். பூஜை அறையை சுத்தம் செய்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள். பெருமாளுக்கு துளசி இலைகளை சாத்தி விடுங்கள். பெருமாளின் முன்பு ஒரு பஞ்ச பாத்திரத்தில் துளசி இலைகள் போட்டு, தீர்த்தம் வைத்து விட வேண்டும்.

ஒரு தாம்பல தட்டு எடுத்துக்கோங்க. அது பித்தளை தாம்பூல தட்டாக இருப்பது சிறப்பு. அதில் 1 கைப்பிடி மருதாணி இலை, 1 கைப்பிடி மருதாணிப் பூக்களை போட்டு பரப்பி விட்டுக் கொள்ளுங்கள். இந்த தட்டில் 11 ஒரு ரூபாய் நாணயங்கள், அப்படி இல்லை என்றால் உங்கள் வீட்டில் கிடைத்த நாணயங்களை வட்டமாக அடுக்கி வச்சுக்கோங்க. இப்போது தட்டு தயார். 2 மண் அகல் விளக்குகளில், நெய் ஊற்றி, திரி போட்டு இந்த அகல் விளக்கை தயார் செய்து வைத்திருக்கும் தட்டின் மேல் வைத்து விடுங்கள்.

- Advertisement -

மகாலட்சுமியையும் புதன் பகவானையும் பெருமாளையும் மனதார வேண்டிக் கொள்ளுங்கள். எங்கள் வீட்டில் இருக்கும் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும். அவர்களுக்கு கல்வி செல்வம் குறையாமல் கிடைக்க வேண்டும். அதேசமயம் வீட்டில் மகாலட்சுமி கடாட்சமும் பெருக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து ‘ஸ்ரீம் நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை சொல்லி இந்த விளக்கு ஏற்றி பெருமாளையும் தாயாரையும் மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள்‌.

புதன் பகவான் உங்களுக்கு தேவையான அறிவையும் கொடுப்பார். மகாலட்சுமி உங்களுக்கு தேவையான பணம் காசையும் கொடுத்து விடுவார்கள். இந்த மருதாணி பூவுக்கும் மருதாணி இலைக்கும் மகாலட்சுமி வசியம் அதிகமாக உண்டு. இந்த இரண்டு பொருட்களை வைத்து புரட்டாசி மாதம் புதன்கிழமை மேல் சொன்ன முறைப்படி வழிபாடு செய்தால் உங்கள் வீட்டில் கஷ்ட வருவதற்கு வாய்ப்பே இல்லை.

இதையும் படிக்கலாமே: நினைத்த காரியத்தை நிறைவேற்ற வசியம் செய்யும் முறை

புரட்டாசி மாதத்தில் ஏதாவது ஒரு புதன்கிழமையாவது இந்த வழிபாட்டை தவறாமல் செய்து விடுங்கள். நிச்சயம் உங்கள் பிள்ளைகள் புத்திசாலியாக வளர இந்த வழிபாடு வழிவகுக்கும். உங்களுடைய கணவர் செல்வம் ஈட்ட இந்த வழிபாடு வழிவகுக்கும். குடும்பத் தலைவிகள் கையில் தேவைக்கு அதிகமாகவே பணம் பொருளை தொடங்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -