
ஒரு மனிதனுக்கு ஆணவம் தலைதூக்கக்கூடிய சமயத்தில், அந்த ஆணவத்தை கட்டுப்படுத்த, அவன் செய்ய வேண்டியது இறை வழிபாடு. அதற்கு உதாரணமாக திகழ்பவர்தான் அண்ணாமலையில் இருக்கும், ஜோதி ஸ்வரூபமாக திகழக்கூடிய அண்ணாமலையார். அடிமுடி காண முடியாத அண்ணாமலையார், ஆணவத்தோடு வந்த பிரம்மாவிற்கும், நாராயணருக்கும் பாடத்தை கற்றுக் கொடுத்து, ஆணவத்தை அழித்தவர், நம்முள் இருக்கும் ஆணவத்தை அழிக்க வேண்டும் என்பதற்காக, ஜோதி ஸ்வரூபமாக காட்சித் தரும் அண்ணாமலையானை இந்த கார்த்திகை தீபத்தன்று வணங்கி வழிபாடு செய்ய வேண்டும்.
நெருப்பு என்பது கெட்டதை பொசுக்கக் கூடியது. பெரிய அளவில் இருக்கும் நெருப்பு அழிக்கக்கூடிய தன்மையை கொண்டது. சிறிய அளவில் தீபத்தில் இருக்கும் நெருப்பு நம் மையும், நம் மனதில் ஆணவத்தையும் கெட்ட எண்ணத்தையும் அழிக்கக் கூடியது. இத்தனை சிறப்புமிக்க இந்த கார்த்திகை தீப வழிபாடு ஆனது வரும் வெள்ளிக்கிழமை 13- 12-2024 ஆம் தேதி வரவிருக்கிறது. இந்த நாளில் நம்முடைய வீட்டில் செய்ய வேண்டிய ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
உங்களுடைய வீடு முழுவதும் கார்த்திகை தீபத்தன்று மண் அகல்விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்வது மிக மிக சிறப்பு வாய்ந்த பலனை கொடுக்கும். 27 மண் அகல் விளக்குகள் குறைந்தபட்சம் கார்த்திகை தீபத்தன்று ஏற்றுவது சிறப்பு. அதற்கு மேலே உங்களால் எவ்வளவு தீபம் ஏற்ற முடியுமோ அத்தனை தீபங்களை ஏற்றி வைத்து உங்கள் வீட்டை அலங்கரித்துக் கொள்ளலாம். கார்த்திகை தீபத்தன்று அரசு இலையின் மேல் தீபம் ஏற்றுவது அரச வாழ்வை தரும் என்பது நம்பிக்கை.
முடிந்தவரை 27 அரசமர இலைகள் கிடைத்தால் ரொம்ப ரொம்ப சிறப்பு. அப்படி இல்லை என்றால் குறைந்தபட்சம் ஐந்து அரச இலை எடுக்கலாம். வீடு முழுவதும் அரசை இலைகளை வைத்து அதன் மேலே ஒரு மண் அகல் விளக்கை வைத்து திரி போட்டு தீபம் ஏற்றினால் வீட்டில் இருக்கும் வறுமையானது நிரந்தரமாக விரட்டப்படும். அவ்வளவு இலைகள் எங்களுக்கு கிடைக்காது. ஒரே ஒரு அரச இலை கிடைத்தாலும் போதும். அதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வையுங்கள்.
அதில் மேலே மண் அகல் விளக்கு வைத்து நல்லெண்ணெயோ அல்லது நெய் ஊற்றி பஞ்சுதிரி போட்டு தீபம் ஏற்றி அந்த விளக்குக்கு பக்கத்தில் ஒரு பூ வைத்து பூஜை அறையில் மனம் உருகி அண்ணாமலையாரிடம் வேண்டுதல் வைத்தால், உங்கள் பணம் சம்பந்தப்பட்ட கஷ்டங்கள் தீரும். அது மட்டுமல்லாமல் அரச வாழ்வு வாழ தேவையான அத்தனை வரங்களும் உங்களுக்கு கிடைக்கும்.
அரச இலை தீப வழிபாடு அரசனைப் போல வாழக்கூடிய தகுதியை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 3 நாட்களும் இந்த அரச இலையின் மேல் பூஜை அறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்பவர்களுக்கு நிச்சயம் பண கஷ்டம் தீரும். நாளை ஒரு நாள் முழுவதும் உங்களுக்கு நேரம் இருக்கிறது.
இதையும் படிக்கலாமே: மண் அகல் விளக்கில் எண்ணெய் கசியாமல் இருக்க.
ஆகவே அரச இலையை தேடி கண்டுபிடித்துக் கொண்டு வந்து வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அரசியலை ரொம்பவும் காய்ந்ததாக இருக்கக்கூடாது. செழிப்பாக இருக்கக்கூடிய அரச இலை யாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பச்சை நிறத்தில் இருக்கும் அரச இலையில் தீபம் ஏற்றினால் தான் முழு பலன் கிடைக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.