- Advertisement -
சமையல் குறிப்புகள்

அய்யய்யே! முள்ளங்கி சாம்பாரா? எனக்கு அந்த வாசனையே பிடிக்காது! அப்படின்னு சொல்றவங்களுக்கு கூட இந்த முள்ளங்கி ஃப்ரை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

- Advertisement -

நிறைய பேருக்கு முள்ளங்கியை சாம்பார் அல்லது வேறு வகையில் சமைத்துக் கொடுத்தாலும் பிடிக்காது. அதிலிருந்து வரும் வாசத்தை சிலபேர் சுத்தமாக விரும்பமாட்டார்கள். ஆனால் முற்றிலும் வித்தியாசமான முறையில், சுலபமாக செய்யக்கூடிய ஒரு முள்ளங்கி ஃப்ரை ரெசிபியை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மிஸ் பண்ணாமல் கட்டாயம் ஒரு வாட்டி இதை உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

முதலில் 200 கிராம் அளவு முள்ளங்கியை எடுத்து தோல் சீவி, கழுவி வட்ட வடிவில் வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இது அப்படியே இருக்கட்டும். 5 லிருந்து 6 பல் பூண்டை தோலுரித்து ஒன்றும் இரண்டுமாக இடித்து வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

ஒரு கடாயை அடுப்பில் வைத்து 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அது சூடானதும் சோம்பு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/4 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, சின்ன வெங்காயம் – 10, பொடியாக நறுக்கியது, இவைகளை சேர்த்து வதக்கவேண்டும். வெங்காயம் வதங்கியவுடன் மீடியம் சைஸ் தக்காளி – 1, பொடியாக நறுக்கி போட்டு வெங்காயம் தக்காளி இரண்டும் சேர்ந்து முற்றிலும் வதங்கிவிட வேண்டும்.

அடுத்தபடியாக நறுக்கி வைத்திருக்கும் முள்ளங்கியை கடாயில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு நிமிடம் வரை இந்த முள்ளங்கி கடாயில் இருக்கும் எண்ணெயில் வதங்க வேண்டும். நன்றாக கரண்டியை வைத்து கிளறிக் கொண்டே இருங்கள். அடுத்தபடியாக மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன், மிளகாய்தூள் – 1ஸ்பூன், மல்லித் தூள் – 1/2 ஸ்பூன், கரம் மசாலா – 1/4 ஸ்பூன், தேவையான அளவு உப்பு, பொடித்து வைத்திருக்கும் பூண்டு இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.

- Advertisement -

இறுதியாக 2 டேபிள்ஸ்பூன் அளவு தண்ணீரைத் தெளித்து, ஒரு மூடி போட்டு முள்ளங்கி பாதி அளவு வெந்தவுடன் மூடியை எடுத்துவிட்டு நன்றாக எண்ணெயில் வதக்கி எடுத்தால் கமகம வாசத்தோடு முள்ளங்கி ஃப்ரை தயார்.

இறுதியாக கருவேப்பிலை கொத்தமல்லி தழைகளைத் தூவி சுடச்சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டாலும் சூப்பராக இருக்கும். தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு சைட் டிஷ் ஆகவும் சூப்பராக இருக்கும். கரம் மசாலா வாசம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதைத் தவிர்த்துக் கொள்ளலாம். மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. முள்ளங்கி பிடிக்காதவர்களும் இந்த முள்ளங்கி ஃப்ரை ரெசிபியை விரும்பி சாப்பிடுவாங்க.

- Advertisement -