- Advertisement -
- Advertisement -

சிலருக்கு அவர்களின் முகத்தில் ஆங்காங்கே கருமை நிறம் இருக்கும். வாய், மூக்கு, கண்கள், சில பேருக்கு தாடைகளில் கூட கருமை நிறம் ஆங்காங்கே திட்டித் திட்டமாக இருக்கும். இதை தான் சீரற்ற சரும நிறம் என்று கூறுகிறோம். இந்த சீரற்ற நிறத்தை சரி செய்வதற்கு எந்த பொருளை பயன்படுத்த வேண்டும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

முகம் பொலிவாக இருக்க வேண்டும் என்றால் ஆங்காங்கே இருக்கக்கூடிய கருந்துட்டுகள் மறைய வேண்டும். மேலும் முகப்பருக்கள் எதுவும் இல்லாமல் அழகுடன் இருக்க வேண்டும். தழும்புகளும் மறைய வேண்டும். அப்படி இருக்கும் முகம் தான் பொலிவான முகம் என்று கருதப்படுகிறது. அந்த பொலிவான முகத்தை தரும் இயற்கையான ஒரு பொருளை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

இது பொதுவாக கேரளத்தில் இருக்கும் பெண்கள் பயன்படுத்தும் பொருளாக கருதப்படுகிறது. ஆதலால் நீங்கள் கேரளத்து பெண்கள் போல் அழகாக மாற வேண்டும் என்றால் இந்த பொருளை உங்கள் முகத்திற்கு உபயோகப்படுத்தி பாருங்கள். நல்ல மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.

இவ்வளவு சிறப்பு மிகுந்த பொருள்தான் ரத்த சந்தனம். இதை சிவப்பு சந்தானம் என்றும் கூறுவார்கள். ரத்த சந்தனம் முகத்திற்கு பல நல்ல மாற்றங்களை தரக்கூடியது. முகத்தில் இருக்கக்கூடிய நிறமிகளை சீராக மாற்றுகிறது. மேலும் முகப்பருக்கள் வராமல் தடுக்கிறது. வந்த முகப்பருக்களை மறைய செய்கிறது. முகப்பருக்களால் ஏற்பட்ட வடுக்களையும் மறைய செய்கிறது. சூரிய ஒளியால் ஏற்பட்ட கருமை நிறம் மாறி முகத்தை பிரகாசமாக வைக்க உதவுகிறது.

- Advertisement -

இதற்கு ஒரு பவுலை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒன்றிலிருந்து இரண்டு டீஸ்பூன் அளவிற்கு ரத்த சந்தனத்தை போட வேண்டும். பிறகு அதில் புளிக்காத தயிர் இரண்டு ஸ்பூன் ஊற்றி நன்றாக கலந்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வர வேண்டும். பிறகு இதை முகத்தில் அப்படியே தடவி விட வேண்டும். 15 நிமிடம் கழித்து லேசாக மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும்.

எண்ணெய் சரிமம் இருப்பவர்கள் தயிருக்கு பதிலாக பசும்பாலை உபயோகப்படுத்தலாம். அவ்வாறு பசும்பாலை உபயோகப்படுத்தும் பொழுது அது காய்ச்சாத பாலாகவும் இருக்கலாம் அல்லது காய்ச்சிய பாலாகவும் இருக்கலாம். முடிந்த அளவுக்கு பாக்கெட் பாலை தவிர்த்து விட்டு பசும்பாலை உபயோகப்படுத்துவது இன்னும் சிறப்பாக இருக்கும். மேலும் முகப்பரு இருப்பவர்கள் கடைசியாக முகத்தை கழுவும் போது மசாஜ் செய்வதை தவிர்த்து விட்டு கழுவினாலே போதும்.

இதையும் படிக்கலாமே: மூன்றே நாளில் கண் கருவளையம் மறைய முகத்துக்கு போடும் பவுடருடன் இதை மட்டும் சேர்த்து போட்டால் போதும்.

இந்த எளிமையான பேஸ் பேக்கை நாம் தினமும் நம் முகத்தில் உபயோகப்படுத்தலாம். இதனால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது என்பதை குறிப்பிடத்தக்கது. மேலும் முகப்பரு இருப்பவர்கள் இதை தினமும் உபயோகப்படுத்தினால் அந்த முகப்பரு பிரச்சினையில் இருந்து முற்றிலுமாக அவர்கள் விடுபடுவார்கள். மேலும் கருமை நிறம் மாறி பொலிவான சருமத்தையும் பெறுவார்கள்.

- Advertisement -