மூன்றே நாளில் கண் கருவளையம் மறைய முகத்துக்கு போடும் பவுடருடன் இதை மட்டும் சேர்த்து போட்டால் போதும்.

kan karuvalaiyam
- Advertisement -

முகத்தின் அழகை எடுத்துக்காட்டுவதில் கண்களுக்கு நிகரானது வேறு எதுவும் இல்லை என்றே சொல்லலாம். ஆகையால் எப்போதும் கண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பராமரிப்பது அவசியம். இந்த அளவிற்கு முக்கியத்துவத்தை கொடுக்கும் கண்களை சுற்றி கருவளையம் வந்து விட்டால் பார்க்கவே அசிங்கமாகி விடுவதோடு முகத்தின் அழகையே இது கெடுத்து விடும்.

இப்போதுள்ள சூழ்நிலையில் அனைவரும் மொபைல் பார்ப்பது, டிவியை அதிக நேரம் பார்ப்பது, இரவில் வெகு நேரம் கண் விழித்திருப்பது அது மட்டும் இன்றி அதிக மன அழுத்தம். தண்ணீர் போதுமான அளவு எடுத்துக் கொள்ளாதது போன்றவை கூட இந்த கருவளையத்திற்கு முக்கியமான காரணமாக உள்ளது.

- Advertisement -

மூன்றே நாளில் கண் கருவளையம் மறைய

இந்த அழகு குறிப்பு பதிவில் கண் கருவளையம் நீங்க ஒரு எளிமையான குறிப்பை பற்றி இப்போது தெரிந்து கொள்ள போகிறோம். இதற்கு நாம் முகத்திற்கு பயன்படுத்தும் எந்த பவுடராக இருந்தாலும் அதை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பௌலில் ஒரு ஸ்பூன் பவுடரை சேர்த்து அத்துடன் சுத்தமான செக்கிலாட்டிய தேங்காய் எண்ணெயை சேர்த்து பேஸ்ட் போல குழைத்துக் கொள்ளுங்கள்.

இதை நன்றாக குழைத்த பிறகு உங்கள் கண்களை சுற்றி பேக் போல போட்டு ஐந்து நிமிடம் வரை அப்படியே மசாஜ் செய்ய வேண்டும். இதை கண்களை சுற்றி போட்ட பிறகு 10 நிமிடம் வரை அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு தண்ணீர் கொண்டு அலம்பாமல் முதலில் டிஷ்யூ பேப்பர் அல்லது காட்டன் துணி வைத்து துடைத்து எடுங்கள். காட்டன் வைத்து துடைத்த பிறகு தண்ணீர் போட்டு கழுவாமல் அப்படியே தூங்கி விடுங்கள்.

- Advertisement -

இந்த முறையை இரவு உறங்கும் முன்பு செய்வது நல்லது. மறுநாள் காலையில் எழுந்த பிறகு முகத்தை அலம்பினால் போதும். மூன்று நாட்கள் இதைத் தொடர்ந்து போட்டாலே கண்களை சுற்றி உள்ள கருவளையங்கள் முற்றிலுமாக மறந்து விடும். ஒரு வேளை உங்களுக்கு நாள்பட்ட கருவளையம் இருந்தால் ஒரு வாரம் தொடர்ந்து போடுவது போல இருக்கும்.

இதையும் படிக்கலாமே: வீட்ல இருக்கிற இந்த பொருட்களை வைத்து ஸ்ட்ரைட்னிங் கிரீம் தயார் செஞ்சு தடவி பாருங்க

இந்த குறிப்பு மிகவும் எளிமையான ஒன்று தான் ஆனால் பயன்படுத்தும் போது மட்டும் கொஞ்சம் கவனமாக கண்களில் படாதவாறு போட்டுக் கொள்ளுங்கள். இதற்கென கடைகளில் விற்கும் கெமிக்கல் கலந்த மருந்துகளை பயன்படுத்துவதை காட்டிலும் இது சிறந்தது இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -