- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

ரைஸ் வாட்டரை இந்த பொருளுடன் சேர்த்து யூஸ் பண்ணி இருக்கீங்களா? இதுவரைக்கும் பண்ணலைன்னா இப்ப ட்ரை பண்ணி பாருங்க. இவ்வளவு வெள்ளையா கூட ஆக முடியுமான்னு ஆச்சரியப்படுவீங்க.

- Advertisement -

இப்போதெல்லாம் முக அழகிற்காக எவ்வளவோ செலவு செய்து கொண்டிருக்கிறோம். அப்படியெல்லாம் எதையும் செய்யாமல், வீட்டில் நாம் தேவையில்லை என நினைத்து கீழே ஊற்றக் கூடிய ஒரு பொருளை வைத்து எப்படி அழகாக மாறுவது என்பதை தான் இந்த அழகு குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

இந்த பேக்கை தயார் செய்ய ஒரு ஸ்பூன் அரிசியை முதல் நாள் இரவே தண்ணீர் ஊற்றி ஊற வைத்து விடுங்கள். மறுநாள் இந்த அரிசி நன்றாக ஊறி தண்ணீரில் மாவு போல கலந்து இருக்கும். இந்த தண்ணீரை மட்டும் தனியாக எடுத்துக் வைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து ஒரு சின்ன பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் கான் பிளார் மாவை எடுத்து கொள்ளுங்கள். அத்துடன் இரண்டு ஸ்பூன் அரிசி ஊற வைத்த தண்ணீரையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு இரண்டு டீஸ்பூன் ரோஸ் வாட்டரையும் சேர்த்து கலந்து வைத்து விடுங்கள். இது அப்படியே இருக்கட்டும். கான் பிளார் மாவு இல்லாதவர்கள் அரிசி மாவை கூட இந்த பேக்கிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த பேக் போடுவதற்கு முன்பாக முகத்தை சுத்தமாக துடைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அரிசி ஊற வைத்த தண்ணீர் மீதம் இருக்கும் அல்லவா, அந்த தண்ணீரை ஒரு காட்டன் துணி வைத்து நனைத்து உங்கள் முகம் முழுவதும் தேய்த்து விடுங்கள். இந்த தண்ணீர் 15 நிமிடம் வரை உங்கள் முகத்தில் அப்படியே இருக்கட்டும். அதன் பிறகு காட்டன் துணி வைத்து முகத்தை நன்றாக துடைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

முகத்தில் உள்ள ஈரம் முழுவதுமாக காய்ந்த பிறகு நீங்கள் தயார் செய்து வைத்த இந்த பேக்கை முகத்தில் போட்டு 20 நிமிடம் வரை அப்படியே விட்டு விடுங்கள். 20 நிமிடம் கழித்து மறுபடியும் அரிசி களைந்த தண்ணீரை கைகளில் தொட்டு முகத்தை லேசாக மசாஜ் செய்து விடுங்கள். அதன் பிறகு நல்ல சுத்தமான தண்ணீர் கொண்டு முகத்தை துடைத்து விடுங்கள்.

இந்த பேக்கை வாரம் இரண்டு முறை மட்டும் போட்டால் போதும். முகம் பால் போல வெண்மையாக மாறி விடும். அது மட்டுமின்றி இந்த பேக் போடும் சமயங்களில், தினமும் இரவு உறங்க செல்லும் முன் அரிசி ஊற வைத்த தண்ணீரை முகம் முழுவதும் காட்டன் வைத்து ஓற்றி எடுத்து விடுங்கள். இரவு முழுவதும் இந்த தண்ணீர் உங்கள் முகத்தில் அப்படியே இருக்கட்டும். மறுநாள் காலை முகம் அலம்பினால் போதும்.

இதையும் படிக்கலாமே: கொத்து கொத்தா முடி உதிருதா? தலைக்கு குளிக்கிறதுக்கு முன்னாடி இந்த தண்ணீரை தலையில் ஊற வையுங்க! கையில பிடிக்க முடியாத அளவுக்கு முடி அடர்த்தியாக வளரும், ஆண்கள் கூட செய்யலாம்.

இந்த முறையை தொடர்ந்து பயன்படுத்தி பாருங்கள் ஒரு வாரத்தில் நீங்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு முகம் கருந்துட்டுக்கள் எல்லாம் மறைந்து வெண்மையாக மாறி இருக்கும்.

- Advertisement -