- Advertisement -
கிரிக்கெட்

கோலியை பின்னுக்கு தள்ளினார் ரோஹித். இப்படி ஒரு சாதனையா?

இந்திய அணியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் கேப்டனாக தற்போது இருப்பவர் விராட் கோலி அதேபோன்று துணைக்கேப்டனாக இருப்பவர் ரோஹித் சர்மா. இவர்கள் இருவரும் சில ஆண்டுகளாக அணிக்காக சிறப்பாக விளையாடிவருகின்றனர். ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியலில் பேட்ஸ்மேன் தரவரிசையில் கோலி முதலிடத்திலும், ரோஹித் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இருப்பினும் தன்னால் முடிந்தவரை போராடி சதமடித்தார் ரோஹித் அவர் 133 ரன்களை குவித்தார். இந்த சதத்தின் மூலம் கேப்டன் கோலியின் சாதனை ஒன்றினை அவர் முறியடித்துள்ளார்.

- Advertisement -

அந்த சாதனை யாதெனில் இந்திய அணி சார்பாக ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை 125+ ரன்களை அடித்தவர் என்ற பெருமையினை வைத்திருந்தவர்(தற்போது உள்ள அணி) விராட் கோலி 13 முறை அவர் ஒரு நாள் போட்டியில் 125+ ரன்களை அடித்துள்ளார். அதனை சிட்னி போட்டியில் அடித்த 133 மூலம் கடந்துள்ளார் ரோஹித்.

அவர் தனது சர்வதேச கிரிக்கெட்டில் 14 முறை 125+ ரன்களை அடித்துள்ளார். ரோஹித் சர்மாவின் ஒருநாள் போட்டியின் அதிகபட்ச ரன்குவிப்பு 264 என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மூன்று முறை அவர் 200 ரன்களை அடித்த ஒரே வீரர் ஆவார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

பாண்டியா ஐ.பி.எல் போட்டிகளிகளில் அணி பஸ்ஸில் ஏறினாள் நான் என் மனைவி மற்றும் குழந்தையுடன் செல்லமாட்டேன் – பிரபல வீரர்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -
Published by