பாண்டியா ஐ.பி.எல் போட்டிகளிகளில் அணி பஸ்ஸில் ஏறினாள் நான் என் மனைவி மற்றும் குழந்தையுடன் செல்லமாட்டேன் – பிரபல வீரர்

hardik

பெண்களை பற்றிய தவறான சர்ச்சையான கருத்துகளை கூறி சமீபத்தில் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார் இந்திய அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா. மேலும் நியூசிலாந்து தொடரில் இருந்தும் நீக்கப்பட்டார். உலகக்கோப்பை போட்டிகளிலும் அவரது இடம் நிலைக்குமா என்று தெரியவில்லை இது குறித்து அணி நிர்வாகம் மட்டுமே முடிவு எடுக்கும்.

pandiya

இந்த வருடம் ஐ.பி.எல் போட்டிகள் மார்ச் மாதம் துவங்குகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்து விளையாடிவரும் ஹார்டிக் பாண்டியா அந்த அணியின் முக்கிய வீரராக திகழ்வார் என்று நம்பலாம். இந்நிலையில் அவரின் சமீபத்திய கருத்தால் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் அவரை தாக்கி பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய ஹர்பஜன் : இனி நான் பாண்டியாவுடன் பேசமாட்டேன் என்றும் மேலும், பாண்டியா போட்டிகளை இடையே அணிகளின் வீரர்கள் பேருந்தில் பாண்டியா ஏறினால் நான் என் மனைவி மற்றும் பெண் குழந்தையை அழைத்து செல்லமாட்டேன் என்று தெரிவித்தார்.

harbajan

மேலும் இனிமேல் எந்த வெளிநிகழ்ச்சிகளிலும் அவருடன் கலந்து கொள்வதை தவிர்ப்பேன். அவருடைய செயல்களில் எனக்கு முரண்பாடு உள்ளது. இதை கூற எனக்கு சிறிது கூட தயக்கமில்லை என்று பாண்டியா குறித்து தன கருத்தினை தெரிவித்தார் ஹர்பஜன்.

இதையும் படிக்கலாமே :

ராகுல் மற்றும் பாண்டியா-க்கு பதிலாக ஆஸ்திரேலிய பறந்த இரண்டு வீரர்கள் இவர்கள்தான்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்