- Advertisement -
சமையல் குறிப்புகள்

ஹோட்டல்களில் கிடைக்கும் ரூமாலி ரொட்டியை இனி வீட்டிலும் சுலபமாக செய்து விடலாம். அதுக்கு இந்த டிப்ஸ் மட்டும் பாலோவ் பண்ணா போதும் டேஸ்டா ரெடி பண்ணிடலாம்.

- Advertisement -

இந்தியாவில் செய்யப்படும் நாண் போன்ற ஒரு உணவு வகை தான் இந்த ரூமாலி ரொட்டி. இது அதை விட மெல்லிய கைகுட்டை போன்று இருக்கும். இந்த ரொட்டி தந்தூரி வகைகளுடன் சாப்பிட மிகவும் நன்றாகவே இருக்கும். இப்போது ரூமாலி ரொட்டியை நாம் வீட்டில் எப்படி சுலபமாக செய்வது என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

செய்முறை

இந்த ரொட்டி செய்வதற்கு ஒரு பௌலில் ஒரு கப் மைதா மாவு, முக்கால் கப் கோதுமை மாவு, கால் கப் பால் பவுடர், ஒரு டீஸ்பூன் உப்பு, இரண்டு டீஸ்பூன் சர்க்கரை பவுடர், இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்த பிறகு லேசாக தண்ணீர் தெளித்து மாவை பிசைந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த மாவு பூரி மாவுக்கு பிசைவது போல் அதிக கெட்டியாக இல்லாமல், கொஞ்சம் தளர்வாக பிசைந்து கொள்ள வேண்டும். அதை நேரம் மாவை நன்றாக அடித்து பிசைய, இடி உரலில் இருக்கும் அந்த குழவியை வைத்து ஐந்து நிமிடம் இந்த மாவின் மீது அழுத்தி அடித்தால் போதும் மாவு மிருதுவாகி விடும். இல்லையென்றால் மாவை பரோட்டா மாவு பிசைவதை போல் அதிக சிரமப்பட்டு பிசைய வேண்டியிருக்கும்.

பிசைந்த மாவை இரண்டு மணி நேரம் வரை அப்படியே வைத்து விடுங்கள். அதன் பிறகு சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி இதை சப்பாத்தி தேய்க்கும் கட்டையில் வைத்து நல்ல மெலிதான ரொட்டியாக திரட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது திரட்டிய பிறகு நாம் கையில் வைத்து பார்த்தால் கை தெரிய வேண்டும் மெல்லிய துணி பதத்திற்கு இந்த மாவை தேய்க்க வேண்டும்.

- Advertisement -

இந்த ரொட்டி சுட இரும்பு கடாய் அல்லது இண்டாலி கடாய் இரண்டில் ஏதாவது ஒன்றை நன்றாக சுத்தம் செய்து எடுத்து கொள்ளுங்கள். அடுத்தாக அடுப்பை பற்ற வைத்து வெறும் கடாயை வைத்து ஒரு முறை நன்றாக சூடுபடுத்திய பிறகு, கடாயை அடுப்பில் திருப்பி போட்டு விடுங்கள். அதாவது கடாயின் அடிப்புறம் மேலே இருப்பது போல் இருக்க வேண்டும்.

இப்போது ஒரு கிண்ணத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள். இப்போது சூடான கடாயின் மேல் உப்பு தண்ணீரை தெளித்த பிறகு நீங்கள் தேய்த்து வைத்திருக்கும் ரொட்டியை அதன் மேல் போட்டு விடுங்கள். ரொட்டியை போட்ட பிறகு டிஷ்யூ பேப்பர் வைத்து லேசாக மேலே ஒட்டி எடுங்கள். அல்லது காட்டன் துணி இருந்தாலும் வைத்து ஒட்டி எடுங்கள் ரொட்டி லேசாக உப்பி வரும்.

- Advertisement -

ஒரு புறம் நன்றாக வெந்த பிறகு ரொட்டியை எடுத்து மறுபடியும் இன்னொரு முறை திருப்பி போடுங்கள். அதன் பிறகும் இதே போல் துணி வைத்து மேலே லேசாக அழுத்தி விடுங்கள். அவ்வளவு தான் சுவையான ரூமாலி ரொட்டி நாம் வீட்டிலே செய்து விட்டோம்.

இதையும் படிக்கலாமே: பெங்களூரு தட்டு இட்லி

இந்த ரொட்டி முழுவதுமாக மைதா மாவில் தான் செய்வார்கள். ஆனால் கடைகளில் செய்யும்போது அதிக அளவில் அடித்து பிசைந்து செய்வார்கள். வீட்டில் சாப்பிட்டாக வர வேண்டுமென்றால் கொஞ்சம் கோதுமை மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அதே போல ரொட்டி சுட்டு எடுக்கும் போது ஒட்டாமல் வர கல்லில் உப்புத் தண்ணீரை தேய்த்து எடுக்க வேண்டும். இந்த இரண்டை மட்டும் சரியாக செய்தால் போதும் ரூமாலி ரொட்டயை சுவையாக வீட்டில் செய்து விடலாம்.

- Advertisement -