பஞ்சு போல பெங்களூரு தட்டு இட்லி செய்ய பக்காவா மாவு அரைக்கிற டிப்ஸ் உங்களுக்கு வேணுமா? யோசிக்காம சட்டுன்னு இந்த ரெசிபியை படிச்சிருங்க.

idli
- Advertisement -

பெங்களூரில் பிரபல்யமாக கிடைக்கும் தட்டு இட்லி நம்முடைய ஊர்களிலும் இப்போது சில இடங்களில் கிடைக்கிறது. தட்டு இட்லி என்றால் ஹோட்டலுக்கு சென்று விருப்பமாக சாப்பிடுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஹோட்டல்களில் கிடைக்கும் பஞ்சு போல தட்டு இட்லியை, நம்முடைய வீட்டில் எப்படி செய்வது. அதற்கு பக்குவமாக மாவு அரைக்க எந்தெந்த பொருட்களை எந்தெந்த அளவுகளில் சேர்ப்பது. தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆர்வமாக உள்ளதா. பெங்களூரு ஸ்பெஷல் தட்டி இட்லிக்கு மாவு அரைப்பது எப்படி. ரெசிபி இதோ உங்களுக்காக.

இட்லி மாவு அரைக்கும் முறை

முதலில் இந்த இட்லி செய்ய தேவையான பொருட்களை பார்த்து விடுவோம். இட்லி அரிசி – 4 கப், உளுந்து – 1 கப், அவல் – 1/2 கப், ஜவ்வரிசி – 1/2 கப் வெந்தயம் – 1 ஸ்பூன், அவ்வளவுதான். (இட்லி அரிசியை எந்த கப்பில் அளக்கிறீர்களோ, அதே கப்பில் மற்ற பொருட்களையும் அளந்து கொள்ளுங்கள்.)

- Advertisement -

எல்லா பொருட்களையும், தனித்தனியாக கிண்ணத்தில் போட்டு நன்றாக கழுவி விடுங்கள். பிறகு நல்ல தண்ணீரை ஊற்றி ஊற வைத்து விடுங்கள். இட்லி அரிசி குறைந்தது 5 மணி நேரமாவது தண்ணீரில் ஊற வேண்டும். மற்றபடி உளுந்து, அவல், ஜவ்வரிசி, வெந்தயம் இந்த நான்கு பொருட்களும் ஒன்றிலிருந்து இரண்டு மணி நேரம் வரை தண்ணீரில் ஊறினால் போதும்.

கிரைண்டரில் நாம் ஊற வைத்த எல்லா பொருட்களையும் ஒன்றாக போட்டு மாவு அரைத்துக் கொண்டாலும் சரிதான். அப்படி இல்லை என்றால் மிக்ஸி ஜாரில் ஊற வைத்த உளுந்து, அவல், ஜவ்வரிசி, வெந்தயம், போட்டு திக்காக அரைத்து எடுத்துக்கொண்டு, அடுத்து ஊற வைத்த இட்லி அரிசியை போட்டு நைசாக அரைத்து, எல்லா மாவையும் ஒன்றாக ஒரே கிண்ணத்தில் ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு, உங்கள் கையை கொண்டு கரைத்து வைக்கலாம்.

- Advertisement -

எப்படியோ மாவை பொங்க பொங்க ஆட்டி எடுக்கணும். இந்த மாவு கொரகொரப்பாக ஆட்ட கூடாது. மாவு மொழு மொழு என்று நைஸ் ஆக தான் ஆட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டி உப்பு போட்ட கரைத்த மாவை மூடி போட்டு 8 மணி நேரம் புளிக்க வைத்து விடுங்கள்.

செய்முறை

உங்கள் ஊரில் ஆறு மணி நேரத்தில் மாவு புளிக்கும் என்றாலும் சரிதான். புளித்த மாவை ஒரு கரண்டியை வைத்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். தட்டு இட்லி வார்ப்பதற்கு, தட்டும் அதற்கான ஸ்டாண்டும் எப்போது கடைகளில் விற்கிறது. அந்த தட்டை வாங்கி, இட்லி வார்க்க வேண்டும்.

- Advertisement -

தட்டில் எண்ணெய் தடவி, அதன் மேலே முக்கால் பாகம் கரைத்து வைத்திருக்கும் இட்லி மாவை ஊற்றி, வழக்கம் போல இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, இந்த இட்லி தட்டை இட்லி பானைக்குள் வைத்து மூடி, 12 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைத்து எடுத்தால், சூப்பரான தட்டு இட்லி தயாராகி இருக்கும்.

தட்டு இட்லி வார்க்க இட்லி மாவு ரொம்பவும் கட்டியாக இருக்கக் கூடாது. அதேசமயம் ரொம்பவும் தண்ணீர் ஆகவும் இருக்கக்கூடாது. அந்த பக்குவத்தை பார்த்துக் கொள்ளுங்கள். இந்த மாவில் தட்டு இட்லி தான் வார்க்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. இதே மாவில் நீங்கள் சாதாரணமாக இட்லி தட்டில் கூட இட்லி வார்த்து சாப்பிடலாம். இட்லி பஞ்சு போல கிடைக்கும். சாதாரணமாக நாம் செய்யும் இட்லியை விட இந்த இட்லி வெள்ளையாகவும் அதிக சாஃப்ட் ஆகவும் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: வெள்ளை அப்பம் செய்முறை

வேக வைத்த இட்லியை வாழை இலையில் போட்டு, மேலே நெய் ஊற்றி அதன் மேலே இட்லி மிளகாய் பொடியை தூவி சுட சுட சாப்பிட்டால் வேற லெவல் டேஸ்ட் இருக்குங்க. வழக்கம் போல சாம்பார் சட்னி தொட்டும் சாப்பிடலாம் அதுவும் நம் விருப்பம்தான். பெங்களூரில் இது ரொம்ப ரொம்ப பிரபல்யம். நம்ம வீட்லயும் ட்ரை பண்ணி தான் பார்ப்போமே. ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -