
அஷ்டமி என்றதும் நம் நினைவிற்கு வரக்கூடிய தெய்வம் காலபைரவர் தான். இவர் காலங்களுக்கு அதிபதியாகவும், எட்டு திங்குகளுக்கும் அதிபதியாகவும் திகழக்கூடியவர். மேலும் நம்முடைய கர்ம வினைகளை பொறுத்து நமக்கு பலன்களை தரக்கூடிய கிரகமான சனி பகவானின் குருவாக திகழக் கூடியவர். அப்படிப்பட்ட காலபைரவரை வழிபாடு செய்வதற்கு உகந்த திதி ஆக தான் அஷ்டமி திதி திகழ்கிறது. அஷ்டமி திதி அன்று கால பைரவரை நாம் வழிபாடு செய்யும்பொழுது சனீஸ்வர பகவானின் அருளோடு நமக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான தடைகளும் விலகும். அந்த வகையில் செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரும் அஷ்டமி தினத்தன்று செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம்குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
செவ்வாய்க்கிழமை என்பது நம்முடைய கடன் பிரச்சினை தீர்வதற்குரிய நாளாக திகழ்கிறது. செவ்வாய்க்கிழமையில் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு வழிபாடும் பரிகாரமும் நம்முடைய கடன்களையும் தீர்க்க உதவும். அந்த வகையில் அன்றைய தினத்தில் வரக்கூடிய அஷ்டமி அன்று நாம் கால பைரவரை வழிபாடு செய்யும்பொழுது கால பைரவரின் அருளால் மேற்சொன்ன அனைத்து கடன் பிரச்சினைகளும் தீரும். அதோடு 27 நட்சத்திரங்களாலும் கிரகங்களாலும் ஏற்படக்கூடிய தோஷங்களும் விலகும்.
இந்த வழிபாட்டை மே மாதம் 20ஆம் தேதி செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய அஷ்டமி தினத்தன்று தான் செய்ய வேண்டும். அதுவும் அன்றைய தினத்தில் வரக்கூடிய ராகுகாலமான 3 மணியிலிருந்து 4:30 மணிக்கு செய்ய வேண்டும். இதற்கு அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய காலபைரவரின் சன்னதிக்கும் முன்பாக ஒரு பூசணிக்காயை எடுத்து பாதியாக நறுக்கி அந்த பூசணிக்காயில் மஞ்சள் குங்குமம் வைத்து அதில் சுத்தமான நல்ல எண்ணெய் ஊற்ற வேண்டும். பிறகு சிவப்பு நிற துணியை எடுத்த அதில் 27 மிளகுகளை போட்டு மூட்டையாக கட்டி அந்த பூசணிக்காயில் போட்டு காலபைரவரை பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும்.
இப்படி தீபம் ஏற்றி முடித்துப் பிறகு காலபைரவர் மந்திரங்களில் எது தெரியுமோ அதை முழு மனதோடு கூறலாம் அல்லது “ஓம் கால காலாய வித்மஹே கால ஹஸ்தாய தீமஹி தந்நோ பைரவ ப்ரசோதயாத்” என்னும் மந்திரத்தையும் முழுமனதோடு கூறி காலபைரவரை வழிபாடு செய்யலாம். இப்படி காலபைரவரை வழிபாடு செய்வதன் மூலம் கடன் பிரச்சினை முற்றிலும் தீர்வதோடு கிரக தோஷங்களும் நட்சத்திர தோஷங்களும், விலகும்.
இதையும் படிக்கலாமே:வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்பட
காலபைரவருக்குரிய வழிபாடுகள் பல இருந்தாலும் இந்த எளிமையான தீப வழிபாட்டை செய்து காலபைரவரின் மந்திரத்தை கூறுவதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கிரக தோஷங்களும் விலகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.