
இந்த உலகத்தை படைத்து, காத்து, அழிக்கக்கூடிய தெய்வங்களாக திகழக் கூடியவர்கள் தான் முப்பெரும் தேவர்கள், மும்மூர்த்திகள் என்று கூறக்கூடிய பிரம்மா, விஷ்ணு, சிவன். இவர்களுக்கு பக்கபலமாக திகழக் கூடியவர்கள் தான் முப்பெரும் தேவியர்களான பார்வதி, லட்சுமி, சரஸ்வதி. இவர்கள் அனைவரின் அருளும் நமக்கு கிடைத்துவிட்டால் முப்பத்து முக்கோடி தேவர்களின் அருளும் கிடைத்துவிடும் என்று கூறப்படுகிறது. அப்படி இவர்கள் அனைவரின் அருளைப் பெற்றாலே நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் அல்லவா? கஷ்டங்களை தீர்த்து இந்த தெய்வங்களின் அருளை பெறுவதற்கு செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சிவபெருமானை வழிபாடு செய்வதற்கென்று ஒரு வழிமுறை இருக்கிறது. அதே போல் தான் மகாவிஷ்ணுவை வழிபாடு செய்வதற்கும் ஒரு வழிமுறை இருக்கிறது. பிரம்ம தேவரை வழிபாடு செய்வதற்கு என்று தனியாக வழிமுறைகள் இல்லை என்றாலும் சிவபெருமானின் ஆலயத்திற்கு செல்லும் பொழுது அங்கு இருக்கக்கூடிய பிரம்மதேவரை பார்த்து வணங்கும் வழக்கத்தையும் நாம் வைத்திருப்போம்.
இப்படி இவர்களை எப்படி தனித்தனியாக நாம் வழிபாடு செய்கிறோமோ அதே போல் தான் இவர்களுக்கு துணையாக இருக்கக்கூடிய பார்வதி, லட்சுமி, சரஸ்வதி என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வழிபாட்டை நாம் மேற்கொள்வோம். அந்த வழிபாட்டை நாம் மேற்கொள்ளும் பொழுது அந்த தெய்வத்திற்குரிய அருளை மட்டும் தான் நம்மால் பெற முடியும். ஆனால் இந்த பதிவில் ஒரே ஒரு நாமத்தை நாம் கூறுவதன் மூலம் அனைத்து தெய்வங்களின் அருளையும் நம்மால் பெற முடியும் என்று கூறப்படுகிறது. அந்த நாமத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த நாமத்தை நாம் தினமும் கூற வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் நமக்கு ஏற்படக்கூடிய எப்பேற்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் அல்லது எவ்வளவு சிறிய பிரச்சினையாக இருந்தாலும் அது தீர வேண்டும் என்றுதான் நினைப்போம். அப்படி அந்தப் பிரச்சினை தீர வேண்டும் என்று நினைக்கும் பொழுது அந்த பிரச்சினைக்குரிய கடவுளை வழிபாடு செய்ய வேண்டும். இந்த ஒரு நாமத்தை கண்ணை மூடி நிறுத்தி நிதானத்துடன் பொறுமையாக கூறி எந்த பிரச்சினை தீர வேண்டும் என்று நினைத்து கூறுகிறோமோ அந்தப் பிரச்சினை விரைவிலேயே தீர்ந்துவிடும் என்று பலரும் அனுபவபூர்வமாக கூறுகிறார்கள்.
காலையில் கண்டிப்பான முறையில் அனைவரும் எழுந்து குளித்து முடித்துவிட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்வோம். ஒரு நிமிடமாவது பூஜை அறையில் தெய்வத்திற்கு முன்பாக நின்று வழிபாடு செய்யும் வழக்கம் என்பது அனைவருக்கும் இருக்கும். அவ்வாறு வழிபாடு செய்யும்பொழுது “கேசவா” என்னும் இந்த ஒரு நாமத்தை கண்களை மூடி எந்த பிரச்சினை தீர வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த பிரச்சினையை நினைத்துக் கொண்டு நிறுத்தி நிதானத்துடன் ஒன்பது முறை கூறவேண்டும். அவ்வளவுதான் வழிபாடு.
ஒருவேளை காலையில் கூற இயலவில்லை என்பவர்கள் மாலையில் கூறலாம். உடல்நலம் சரியில்லை பூஜை அறையில் தீபம் ஏற்ற முடியாது என்று நினைப்பவர்கள் பூஜை அறைக்கு செல்லாமல், இருக்கும் இடத்திலிருந்து கொண்டு இந்த நாமத்தை உச்சரிக்கலாம். பெண்கள் தங்களுக்கு ஏற்படக்கூடிய தீட்டுக்காலத்தில் மனதிற்குள்ளேயே இந்த நாமத்தை உச்சரிக்கலாம். எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அந்த பிரச்சினை தீர வேண்டும் என்று இந்த ஒரு நாமத்தை கூறும்பொழுது முப்பெரும் தேவர்கள், தேவியர்கள், முப்பத்துமுக்கோடி தெய்வங்கள் என்று அனைவரின் அருளாலும் அந்த பிரச்சனை தீர்ந்துவிடும்.
இதையும் படிக்கலாமே:தைப்பூசம் ஆறு நாள் விரதம் இருக்கும் முறை
முழு நம்பிக்கையுடன் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு செயலாக இருந்தாலும் அந்த செயலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் என்பது முழுக்க முழுக்க உண்மை. அதன் அடிப்படையில் இந்த ஒரு நாமத்தை முழுமனதோடு சொல்லி சகல தெய்வங்களின் அருளை பெற்று கஷ்டங்களை தீர்த்துக் கொள்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.