
வீட்டிற்கு உப்பு வாங்குவது குறித்து சில பாரம்பரிய நம்பிக்கைகள் உள்ளன. பொதுவாக, இந்த நம்பிக்கைகள் லட்சுமி கடாட்சம் மற்றும் செல்வத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. உப்பு வாங்க கூடாத நாட்கள் மற்றும் எந்தெந்த நபர்கள்? எப்போது வாங்க கூடாது? என்னும் சாஸ்திரங்கள் பாரம்பரியமாக கடைபிடிக்கப்படுகிறது. உப்பு சாஸ்திரத்தை நாமும் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் முழுமையாக அறிந்து கொள்வோம் வாருங்கள்.
உப்பு வாங்கக்கூடாத நாட்கள் :
சனிக்கிழமைகளில் உப்பு வாங்குவது தொழிலில் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், சனி பகவானுடன் தொடர்புடைய சில பொருட்கள், சனிக்கிழமைகளில் வாங்கப்படக்கூடாது என்பதில் உப்பும் அடங்கும். திருமணமாகி பிறந்த வீட்டிலிருந்து செல்லும் மகள், உப்பு எடுத்துச் செல்லக்கூடாது. திருமணமாகி கணவர் வீட்டிற்குச் செல்லும் மகள், தனது தாய் வீட்டிலிருந்து உப்பை எடுத்துச் செல்வது, தாய் வீட்டிற்கு தரித்திரத்தை (வறுமையை) ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. மகள் லட்சுமிக்கு சமம் என்பதால், அவள் உப்பை எடுத்துச் சென்றால், லட்சுமியே வீட்டை விட்டு வெளியேறுவது போலாகும் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது.
உப்பு வாங்கக்கூடாத நபர்கள் :
உப்பு என்பது லட்சுமியின் அம்சம் என்பதால், உப்பை யாருக்கும் கடனாகக் கொடுப்பதும், வாங்குவதும் கூடாது என்று நம்பப்படுகிறது. இது செல்வம் குறைவதற்கு வழிவகுக்கும் என்று சொல்வார்கள். வெள்ளிக்கிழமை உப்பு வாங்குவது மிகவும் சுபமாக கருதப்படுகிறது. இது வீட்டில் லட்சுமி கடாட்சத்தை அதிகரிக்கும். சுக்கிர ஹோரை, அட்சய திருதியை போன்ற சுப தினங்களில் உப்பு வாங்குவது குறிப்பாக இந்துப்பு வாங்குவது எதிர்மறை சக்திகளை நீக்கி, வீட்டில் நல்ல ஆற்றலை கொண்டு வரும் என்றும், செல்வத்தை ஈர்க்கும் என்றும் நம்பப்படுகிறது.
உப்பை ஒரு கையிலிருந்து இன்னொரு கைக்கு நேரடியாக மாற்றுவதை தவிர்க்க வேண்டும். உப்பு பாத்திரத்தை கீழே வைத்து, தேவைப்படுபவர்கள் எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். வீட்டை சுத்தம் செய்ய உப்பு நீர் பயன்படுத்துவது எதிர்மறை சக்திகளை நீக்கும் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை. ஆனால், வியாழக்கிழமைகளில் உப்பு நீரால் துடைப்பதைத் தவிர்க்க வேண்டும். உப்பு எப்பொழுதும் குறையாமல் வீட்டில் இருக்க வேண்டும், இதனால் மகாலட்சுமி வாசம் நிறைந்து இருக்கும் என்பது நம்பிக்கை.
உப்பை யார் வாங்க கூடாது? என்றால், மாதவிடாய் சமயங்களில் பெண்கள், அவர்களுடைய கைகளால் உப்பை வீட்டிற்கு வாங்கி வரக்கூடாது. இறப்பு தீட்டு உள்ளவர்கள் வீட்டில் உப்பு வாங்கக் கூடாது. வீட்டிற்கு விருந்தாளியாக வந்த நபர்களை உப்பு வாங்கி வர சொல்ல கூடாது. உப்பு என்பது தெய்வ அம்சம் பொருந்தியது, இதனை அதிகம் தூளாக பயன்படுத்துவதை காட்டிலும், கல் உப்பாக பயன்படுத்துவது தான் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
இதையும் படிக்கலாமே:
பண வசியம் உண்டாக
மேலும் கடன் வாங்குவதற்காகவோ அல்லது நகையை அடமானம் வைப்பதற்காகவோ செல்லும் பொழுது திரும்பி வருகையில் உப்பு வாங்கி வரக்கூடாது. அசுப ஓரையில் உப்பு வாங்க கூடாது. சம்பளம் வாங்கிய முதல் நாள் சம்பளம் வாங்கிய நபர் அவருடைய கையால், சுப ஹோரையில் முதன் முதலில் உப்பு வாங்கி வருவது குடும்பத்திற்கு ரொம்பவும் நல்லது. உப்பு பாற்கடலில் இருந்து பிறந்த மகாலட்சுமியின் அம்சமாக இருந்தாலும், அதனை எவ்வளவு தேவையோ, அவ்வளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிகம் பயன்படுத்தினால் துரதிர்ஷ்டம் வரும், ஆரோக்கியமும் சீர்கெடும். இந்த நம்பிக்கைகள் அனைத்தும் பாரம்பரிய வழக்கங்கள் மற்றும் நம்பிக்கை சார்ந்தவை.