- Advertisement -
- Advertisement -

காலையில் அவசரம் அவசரமாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவும் கணவனை வேலைக்கு அனுப்பவும் பல தாய்மார்கள் போராடிக் கொண்டிருப்பார்கள். அதிலும் குறிப்பாக சமையலறையில் சமைக்கும் பொழுது பல போராட்டங்களை சந்திப்பார்கள். ஒரு சில நேரங்களில் இதனால் சமையலில் கவனம் குறைந்து ஏதாவது ஏடாகூடமாக மாறிவிடும். அப்பொழுது அதை சரி செய்வதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் கஷ்டப்படுவார்கள். அந்த கஷ்டத்தை நீக்குவதற்கும் சமையலை சுவையாக மாற்றுவதற்கும் அதே சமயம் எளிமையாக சமையல் வேலைகளை செய்வதற்கும் உதவக்கூடிய டிப்ஸை பற்றி தான் இந்த வீட்டு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

சாம்பார் வைக்கும் பொழுது சாம்பாரில் புளிப்பு சுவை சில நேரங்களில் அதிகமாகிவிடும். அவ்வாறு அதிகமாகிவிட்டால் அதை குறைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா? சிறிது அளவு வெல்லத்தை எடுத்து அதை சாம்பாரில் போட்டு விட்டு ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். அவ்வாறு கொதிக்க விட்டால் புளிப்பு சுவையானது எடுக்கப்பட்டு சாம்பார் நன்றாக இருக்கும்.

- Advertisement -

சாம்பார் நன்றாக மணமாகவும் சுவையாகவும் இருப்பதற்கு நன்கு கொதித்த பிறகு இறக்கி விடுவதற்கு முன்பாக ஒரு ஸ்பூன் பட்டர் அல்லது நெய் சேர்த்து மூடி வைக்கவும். பிறகு சாப்பிடும் பொழுது பரிமாறினால் சாம்பார் மணமாகவும் மிகவும் சுவையாகவும் இருக்கும்.

தேங்காயை கீறுவது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது. நன்கு பழகியவர்கள் தான் அதை வேகமாக எடுக்க முடியும். காலையில் அவசரத்திற்கு சமையல் செய்து கொண்டிருக்கும் பொழுது தேங்காயை எடுப்பதற்கு சிரமப்பட வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அதற்கு அரை மூடி தேங்காயை உடைத்து கேஸ் அடுப்பில் வைத்துவிட்டு கேஸ் ஸ்லோவாக வைத்து இரண்டு அல்லது மூன்று நிமிஷம் அப்படியே வைத்து விட வேண்டும். பிறகு தேங்காயை நன்றாக கழுவி எடுத்துப் பார்த்தால் தேங்காய் ஆனது சுலபமாக எடுக்க வரும்.

- Advertisement -

பூண்டு பற்களை உரிப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கும். எரிச்சல் ஆக கூட தோன்றும். அதற்கு எளிமையாக்க ஒரே வழி. பூண்டு பற்களை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு தண்ணீரை நன்கு சூடாக்கி அந்த பூண்டு பற்கள் உள்ள பாத்திரத்தில் ஊற்றி விட வேண்டும். இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும். பிறகு எடுத்து பார்த்தால் பூண்டு தோல் ஆனது எளிமையாகவும் சுலபமாகவும் உரிக்க வரும்.

டீ ஆனது நம் வீட்டில் போடும் பொழுது கொஞ்சம் சுமாராக தான் இருக்கும். கடைகளில் போடும் டீ போல ஸ்டிராங்காக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? உங்களுக்கு பிடித்த எந்த டீத்தூள் ஆக இருந்தாலும் அதில் ஒரு ஸ்பூன் இன்ஸ்டன்ட் காபி தூளை சேர்த்து டீ போடும்பொழுது கடைகளில் உள்ளது போல சுவையாகவும் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே வீட்டை விரைவில் சுத்தம் செய்ய டிப்ஸ்

இந்த எளிமையான குறிப்புகளை நினைவில் வைத்துக் கொண்டு எப்பொழுது எல்லாம் நமக்கு உபயோகப்படுமோ அப்பொழுதெல்லாம் பயன்படுத்தி சமையலின் ராணியாக மாறலாம்.

- Advertisement -