- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்வீட்டை விரைவில் சுத்தம் செய்ய டிப்ஸ்

வீட்டை விரைவில் சுத்தம் செய்ய டிப்ஸ்

- Advertisement -

வீட்டை சுத்தம் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதிலும் அடிக்கடி தூசி படிந்து கொண்டே இருந்தால், எப்பொழுதும் சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டியிருக்கும். குழந்தைகள் இருக்கும் வீட்டில் தூசி படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது. வீட்டில் படியும் தூசியால் ஆஸ்துமா, சுவாச கோளாறுகள், கண்களில் நீர் வடிதல் அடிக்கடி சுவாச தொற்றுக்கள் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே உங்கள் வீட்டை எளிமையான முறையில் எப்படி தூசி இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம் என்பதற்கான சில டிப்ஸை பற்றி தான் இந்த வீட்டு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்றால் அதற்காக மணிக்கணக்கில் நாள் கணக்கில் பலரும் கஷ்டப்பட்டு வேலை செய்வார்கள். அப்படி அவர்களால் செய்ய முடியவில்லை என்றால் சம்பளத்திற்காக ஆள் வைத்து சுத்தம் செய்வார்கள். இப்படி சுத்தம் செய்வதற்கு பதிலாக வாரத்திற்கு ஒரு முறையோ மாதத்திற்கு ஒரு முறையோ நாமே நம்முடைய வீட்டை சுத்தம் செய்து கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் வீடு சுத்தமாக இருப்பதற்கு என்னென்ன வழிமுறைகளை பின்பற்றலாம் என்று யோசித்து அதை செய்யலாம்.அந்த வழிமுறைகளை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

படுக்கை அறையில் தண்ணீரின் அளவை குறைக்க வேண்டும். டிஹைமிடிஃபையர் அறையின் ஈரப்பதத்தை குறைக்க உதவுகிறது. வீட்டின் ஈரப்பதத்தை குறைப்பது தூசிகள் அதிகமாக படிவதை தடுக்கிறது. இதன் மூலம் தூசிகள் மற்றும் பூச்சிகளை எளிதாக கட்டுப்படுத்த முடியும். எனவே அறையின் ஈரப்பதத்தை குறைக்க பல்வேறு வகையான டிஹைமிடிஃபையர் கிடைக்கிறது. அதை வாங்கி நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.

வீட்டில் உள்ள அனைத்து தூசிகளையும் போக்கவும் அடிக்கடி சுத்தம் செய்யவும் வாக்யூம் க்ளீனரை பயன்படுத்தி வரலாம். வாக்யூம் க்ளீனர்கள் எளிதாக காற்றில் இருந்து வரும் 99.9% மகரந்தம் துகள்கள் , விலங்குகளின் முடிகள் மற்றும் பாக்டீரியாக்களை அகற்றும் அதிக திறன் கொண்டது. இதன் மூலம் மூலை முடுக்குகளையும் நீங்கள் எளிதாக சுத்தம் செய்ய முடியும்.

- Advertisement -

வீட்டிற்குள் தூசி படிவதில் காற்றுகள் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. எனவே காற்று வீசும் காலங்களில் ஜன்னல்களை மூடி வையுங்கள். இதன் மூலம் அறைக்குள் தூசி நுழைவதை தடுக்க முடியும். காற்று சுத்திகரிப்பான் மூலம் ஜன்னல்களுக்கு அருகில் உள்ள தூசிகளை எளிதாக போக்க முடியும். இது காற்றில் உள்ள தூசிகள் மற்றும் அழுக்குகள் அறைக்குள் நுழைவதை தடுக்கிறது.

இந்த முறையில் நாம் இந்த முறையை நாம் பின்பற்றி வந்தோம் என்றால் நம் வீட்டில் வீடு என்றுமே புத்தம் புதிது போல் இருக்கும் மேலும் வீட்டில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு முதியவர்களுக்கும் எந்தவித தொற்று நோயும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும்

இதையும் படிக்கலாமே வெள்ளிப் பொருட்களை ஈசியா சுத்தம் செய்ய

மேற் சொன்ன அனைத்து குறிப்புகளையும் பின்பற்றி நம்முடைய வீட்டை சுத்தமாகவும் சுகாதாரத்துடனும் பேணி காப்பதோடு நம் வீட்டில் இருக்கக்கூடிய நபர்களின் ஆரோக்கியத்தையும் நம்மால் பாதுகாக்க முடியும் முயற்சி செய்து பார்ப்போம்.

சற்று முன்