- Advertisement -

பணம் சம்பந்தப்பட்ட சங்கடங்கள் தீர்க்கும் பரிகாரம்

- Advertisement -

நாளை சனிக்கிழமையோடு சேர்ந்து வரவிருக்கும் சங்கடஹர சதுர்த்தி. பணம் சம்பந்தப்பட்ட சங்கடங்கள் உங்களுக்கு இருந்தால் அதிலிருந்து விடுபட வேண்டும் என்று, பிரார்த்தனை செய்து கொண்டு, நாளைய தினம் மாலை விநாயகர் கோவிலுக்கு சென்று இந்த விளக்கை மட்டும் ஏற்றிப் பாருங்கள். எவ்வளவு பெரிய பணம் சார்ந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்வு கிடைக்கும்.

சில பேர் பணத்தை கைநீட்டி கடனாக வாங்கிவிட்டு அதை திருப்பி தர முடியாமல் கஷ்டப்பட்டு வரலாம். சில பேருக்கு பணம் தேவைப்படலாம். அவசர தேவைக்கு குறிப்பிட்ட தொகை பணம் தேவைப்படும். பிள்ளைக்கு பள்ளிக்கூட ஃபீஸ் கட்ட காசு வேண்டும். அல்லது வீட்டின் ஏதோ ஒரு அத்தியாவசியமான தேவைக்கு குறிப்பிட்ட தொகை பணம் வேண்டும், பிள்ளைகளுடைய திருமணம் அல்லது ஏதோ ஒரு அத்தியாவசிய செல்வுக்கு பணம் இன்றியமையாத ஒன்று.

- Advertisement -

பணதை தயார் செய்ய வெளியில் நிறைய முயற்சிகளை மேற்கொள்வார்கள். சில பேர் லோன் அப்ளை செய்துவிட்டு, லோன் சேங்ஷன் ஆக வேண்டும் என்பதற்காக காத்துக் கொண்டிருப்பார்கள். இப்படி பணம் சம்பந்தப்பட்ட வகையில் எந்த தடைகள் உங்களுக்கு இருந்தாலும், அந்தத் தடைகள் தகர்க்கப்பட்டு பணம் உங்கள் கையில் வந்து சேர, நாளை இந்த விளக்கை விநாயகர் கோவிலில் ஏற்றுங்கள். முடியாதவர்கள் வீட்டிலேயும் இந்த விளக்கை ஏற்றி விநாயகரை வேண்டிக் கொள்ளலாம். அது என்ன விளக்கு என்பதை பற்றிய தகவலை தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

சங்கடகர சதுர்த்தி தீப வழிபாடு

இந்த வழிபாட்டிற்கு முக்கியமாக தேவைப்படக்கூடிய பொருள் வெட்டிவேர். இது நல்லவற்றை வசியம் செய்யக்கூடியது. வெற்றியை கொடுக்கக் கூடியது. பண வசியம் செய்யக்கூடியது. விநாயகருக்கு ரொம்ப ரொம்ப உகந்தது. மஞ்சள் நிற திரியோடு இந்த வெட்டிவேரை சேர்த்து, நன்றாக சுருட்டி தயார் செய்து கொள்ளுங்கள். மஞ்சள் நீற திரியும் இந்த வெட்டிவேரும் இரண்டும் பின்னிப்பிணைந்து ஒன்றாக இருக்க வேண்டும். உள்ளங்கைகளில் வைத்து திரி தயார் செய்வது போல தேய்த்துக் கொடுத்தால், வெட்டிவேரும் திரியும் ஒன்றாக இணைந்து வரும்.

- Advertisement -

வெள்ளை திரியை மஞ்சள் கலந்த கலவையில் போட்டு எடுத்து நிழலிலேயே உலர வைத்தால், மஞ்சள் நிற விளக்கு திரியும் உங்களுக்கு கிடைத்துவிடும். மஞ்சள் நிற திரியோடு வெட்டிவேரை சேர்த்து தான் விநாயகருக்கு நெய் தீபம் போட வேண்டும்.

சுத்தமான தேங்காய் எண்ணெயை மண் அகல் விளக்கின் ஊற்றி, இந்த திரியை போட்டு தீபம் ஏற்றினால் சிறப்பு. சுத்தமான நெய் கிடைத்தாலும் இந்த தீபத்தை ஏற்றலாம். உடனடியாக பலன் கொடுக்கக்கூடிய இந்த விளக்கை நாளை மாலை 6:30 மணிக்கு மேல் இரவு 9:00 மணிக்குள் வீட்டின் அருகில் இருக்கும் விநாயகர் கோவிலில் ஏற்றி வைத்துவிட்டு, விநாயகரை மனமுருக பிரார்த்தனை செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே: நாளை 14-06-2025 சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். தேவையான பணம் கையை வந்து சேரும். கடன் தொல்லையில் சிக்கி இருப்பவர்கள் கடனிலிருந்து விடுபடுவீர்கள். இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -