
2025 ஆம் ஆண்டு குரோதி வருடம் முடியும் நிலையில் இம்மாதம் 29ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம் பெயர இருக்கிறார். சனிபகவான் இடப்பெயர்ச்சி நடக்கும் பொழுது பொதுவாகவே சில ராசிகள் அவரின் பிடியிலிருந்து விடுபட்டு நற்பலன்களையும், சில ராசிகள் அவரின் பிடியில் அகப்பட்டு கெடுபலன்களையும் அனுபவிக்க கூடிய ஆண்டாக இருக்கிறது. அந்த வகையில் எந்தெந்த ராசிக்காரர்கள் என்ன மாதிரியான பலன்களை அனுபவிக்க காத்திருக்கின்றனர்? என்னும் ஜோதிடம் சார்ந்த தகவல்களை தொடர்ந்து இப்பதிவில் அறிவோம் வாருங்கள்.
விரைய சனி – மேஷ ராசி
பாத சனி – கும்ப ராசி
ஜென்ம சனி – மீன ராசி
அர்த்தாஷ்டம சனி – தனுசு ராசி
அஷ்டம சனி – சிம்ம ராசி
கண்டக சனி – கன்னி ராசி
லாப சனி – ரிஷப ராசி
கர்ம சனி – மிதுன ராசி
பாக்கிய சனி – கடக ராசி
பஞ்சம சனி – விருச்சிக ராசி
ரோக சனி – துலாம் ராசி
சகாய சனி – மகர ராசி
மேஷம், கும்பம், மீனம், தனுசு, சிம்மம், கன்னி ஆகிய ஆறு ராசிக்காரர்களுக்கு சனி பகவான் கெடு பலன்களை உங்கள் ராசியின் படி கொடுக்க ஆரம்பித்து விடுவார். எனவே நீங்கள் சற்று ஜாக்கிரதையுடனும், நேர்வழியிலும் நடப்பது நல்லது. மற்ற ஆறு ராசிக்காரர்களும் ஓரளவுக்கு சனியின் பிடியில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அனுபவிக்க இருக்கிறீர்கள்.
இம்மாதம் சனி பெயர்ச்சி ஆனதற்கு பிறகு சற்றே நீங்கள் ஆசுவாசம் கொள்ளலாம். இதுநாள் வரையிலும் அனுபவித்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்க போகிறது. உங்கள் ராசிக்குரிய பலன்களை சனிபகவான் நீங்கள் கேட்காமலேயே அள்ளி அள்ளி வழங்கப் போகிறார். இதில் சிம்மம் மற்றும் மீன ராசிக்காரர்கள் கவனமுடன் இருக்க வேண்டிய ராசிகள் ஆகும். ரிஷப ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறது. மகரம், மிதுனம், துலாம், மேஷம் ஆகிய நான்கு ராசிக்காரர்கள் இதுவரை அனுபவித்து வந்த இன்னல்கள் மறைந்து வசந்த காலம் உங்களுக்கு வீச இருக்கிறது. உங்கள் வாழ்வில் நடப்பதெல்லாம் இனி நன்மையாக நடக்கும்.
பொருளாதார ரீதியான மாற்றங்கள் நிகழும். எண்ணி எண்ணி செலவு செய்த காலம் போய், மனம் நிறைய செலவு செய்யக்கூடிய காலம் வரப்போகிறது. தொழில் மாற்றம், இடமாற்றம் போன்றவை உங்களுக்கு நிகழ இருக்கிறது. குழந்தை இல்லையே என்று பல வருடங்களாக ஏங்குபவர்களுக்கு சனியின் அருளால் சீக்கிரமே நல்ல செய்தி காத்திருக்கிறது. சிம்மம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் சனியின் பிடியில் சிக்கி இருந்தாலும், அவ்வப்பொழுது உங்களுக்கு சனி பகவானுடைய கடைக்கண் பார்வை நற்பலன்களையும் கொடுக்கும் எனவே கவலை கொள்ள தேவையில்லை.
இதையும் படிக்கலாமே:
சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் 2025
சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை வருட காலம் தங்குகிறார். அடுத்த இரண்டரை வருட காலத்திற்கு மேற் சொன்னபடி குறுக்கு வழியில் எதையும் செய்யாமல், நேர்வழியிலும், நல்ல எண்ணங்களுடனும் இருந்தால் வரக்கூடிய கஷ்டங்கள் குறையும். சனிபகவானை போல கொடுப்பவரும் எவரும் இல்லை, கெடுப்பவரும் எவரும் இல்லை. அது போல சனி பகவான் நியாயத்தின் பக்கம் நிற்பவர். உங்கள் பக்கம் நியாயம் இருந்தால் எவ்வளவு பெரிய பிரச்சனைகள் உங்களுக்கு வந்தாலும், அதிலிருந்து சுலபமாக விடுபட்டு விடுவீர்கள். அநியாயமாக நடந்து கொண்டால் அதற்குரிய கர்ம பலன்களை சனிபகவான் உங்களுக்கு கொடூரமான வழியில் கொடுக்க காத்திருக்கிறார் எனவே கவனமுடன் இருங்கள்.