
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமையான நாளாக இருக்கும். ஆன்மீக வழிபாட்டின் மூலம் மனம் நிம்மதி அடையும். தேவையற்ற சங்கடங்கள் நீங்கும். உறவுகளோடு இருந்து வந்த மன கசப்பு விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலைமை சீராகும். தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் அளவுக்கு வருமானம் பெருகும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். வேலைகளும் வியாபாரத்திலும் பெருசாக டென்ஷன் இருக்காது. நீண்ட தூர பயணங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும்போது கூடுதல் கவனம் இருக்கட்டும்.
மிதுன ராசிக்காரர்கள் இன்று திறமை சாலிகளாக செயல்படுவீர்கள். வேகத்தை விட விவேகம் தான் அதிகமாக இருக்கும். பல நாள் தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கு புத்திசாலித்தனமாக உடனடியாக ஒரு தீர்வை கொடுப்பீர்கள். பாராட்டுகள் கிடைக்கும் நாள். பிரச்சனைகளில் இருந்து நாசுக்காக வெளி வரக்கூடிய நாள். இந்த நாளை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
கடக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சிந்தனை அதிகமாக இருக்கும். போட்டி பொறாமைகளை சந்திக்கக்கூடிய சூழ்நிலை இருக்கும். வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. கவனமாக செயல்படுங்கள். ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம்.
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சாதனை படைக்கக் கூடிய நாளாக இருக்கும். புது வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நீண்ட தூர பயணங்களால் நன்மை உண்டாகும். வீட்டில் இறை வழிபாடு செய்வதன் மூலம் மன நிம்மதி பெருகும்.
கன்னி ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புது முயற்சிகள் வெற்றியைத் தரும். காரிய தடைகள் விலகும். வீட்டில் இறை வழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும். சுப செலவுகள் ஏற்படும். இன்று மாலை குடும்பத்தோடு கோவிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகளும் கைக்கூடி வரும். மனம் மகிழ்ச்சி அடையும்.
துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உற்சாகம் இருக்கும். சுறுசுறுப்பு வெளிப்படும். உங்களுடைய கடமைகளை சரி சரியாக செய்து முடிப்பீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு சரியாகும். நிதிநிலைமை சீராக இருக்கும் கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள்.
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக இருக்க வேண்டும். அவசரப்படக் கூடாது, முன்கோபம் வேண்டாம். தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை நீண்ட தூர பயணங்களை தவிப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல் வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
தனுசு ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று மனம் மகிழ்ச்சியாக இருக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவு ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன் குறையும். ப்ரமோஷனுக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.
மகர ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். தேவையில்லாத டென்ஷனில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். லாபம் உயரும் நாளாகவும் இந்த நாள் அமையும்.
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நிறைய நல்லது நடக்கும். வீட்டில் இறை வழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும். சுப செலவுகள் ஏற்படும். பெண் பிள்ளைகளால் மனம் மகிழ்ச்சி அடையும். தேவையில்லாத டென்ஷன் குறையும். கடன் சுமையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபடுவீர்கள்.
மீன ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பாராட்டு அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். குடும்ப சண்டைகள் சரியாகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை நிலவும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும். வேலையில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். உயர் அதிகாரிகளை கொஞ்சம் அனுசரித்து செல்வது நல்லது.