- Advertisement -

ஒவ்வொரு நாளும் வாழ்க்கையே போராட்டமாக நகர்கிறது. எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை, நன்மைகள் எதுவும் நடைபெறவில்லை, விபத்துகள் ஏற்படுகிறது, இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாகிறோம் என்று பலரும் பல விதங்களில் வருத்தப்பட்டு கொண்டு இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய ஜாதகத்தில் சனி செவ்வாய் சேர்க்கை எப்படி இருக்கிறது என்று ஒரு முறை ஜோதிடரிடம் கலந்து ஆலோசித்துக் கொள்ள வேண்டும்.

சனியும் செவ்வாயும் ஒன்றாக சேர்ந்து இருக்கும் பட்சத்திலோ அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் பட்சத்திலோ இது போன்ற சங்கடங்களுக்கு நாம் ஆளாக நேரிடும். இந்த சங்கடங்களை தவிர்ப்பதற்கு முருகப்பெருமானுக்கு எந்த பொருளை தானமாக வழங்க வேண்டும் என்னென்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

நவகிரகங்களும் ஒருவருடன் ஒருவர் சேர்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் சூழ்நிலையும் உண்டாகும். அப்படி சேர்வதன் மூலமும் பார்த்துக் கொள்வதன் மூலமும் நம்முடைய வாழ்க்கையில் பலவித மாற்றங்கள் ஏற்படும். அது நல்ல மாற்றங்கள் ஆகவும் இருக்கலாம். தீய மாற்றங்கள் ஆகவும் இருக்கலாம்.

நம்முடைய வாழ்க்கையை திருப்பி போடும் அளவிற்கு மிகவும் கஷ்டமான ஒரு சூழ்நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய கிரக சேர்க்கை என்பது சனி செவ்வாய் சேர்க்கை. இப்படி சனி செவ்வாய் சேர்க்கை ஏற்பட்டு விட்டால் நம்முடைய வாழ்க்கையே ஒரு போராட்டம் போல் மாறி விடும். விபத்துகள் ஏற்படக் கூடும். பிரச்சனைக்கு மேல் பிரச்சினை வந்து கொண்டே இருக்கும்.

- Advertisement -

தேவையற்ற வம்பு வழக்குகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஜான் ஏறினால் முழம் சறுக்கியது என்று சொல்வார்கள் அல்லவா.அந்த நிலைமைக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்து மாறுவதற்கு செய்யக் கூடிய பரிகாரங்களையும் வழிபாட்டு முறைகளையும் பற்றி பார்ப்போம்.

இந்த சேர்க்கையால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுடைய ஜென்ம நட்சத்திர நாள் அன்று ரத்த தானம் செய்ய வேண்டும். இப்படி ரத்த தானம் செய்வதன் மூலம் அவர்களுக்கு ஏற்படக்கூடிய கண்டம் அல்லது விபத்துகளில் இருந்து அவர்கள் தப்பித்துக் கொள்ள முடியும். மேலும் வாரத்தில் இரண்டு நாட்களாவது நல்லெண்ணெய் வைத்து குளிப்பதன் மூலம் சனி பகவானின் ஆதிக்கம் குறைய ஆரம்பிக்கும்.

- Advertisement -

இதோடு மட்டுமல்லாமல் செவ்வாய் பகவானுக்குரிய அதிபதியான முருகப்பெருமானுக்கு சனிபகவானுக்குரிய நல்லெண்ணையை வாங்கி தானமாக தருவதன் மூலமும் இந்த சனி செவ்வாய் சேர்க்கையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறையும். இந்த சேர்க்கையால் பாதிப்பிற்கு உள்ளானவர்கள் ஸ்ரீ வாஞ்சியம் மற்றும் திருவிடைக்கழி ஆலயத்திற்கு சென்று வழிபாடு மேற்கொள்வது நல்லது.

இதோடு மட்டுமல்லாமல் ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு சாற்றி வழிபட வேண்டும். இதே போல் முனீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று முனீஸ்வரருக்கு ஏதாவது ஒரு இரும்பால் செய்யப்பட்ட ஆயுதத்தை வழங்கி படையல் போட்டு வழிபடுவதன் மூலமும் இந்த செயற்கையால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை நம்மால் குறைத்துக் கொள்ள முடியும்.

இதையும் படிக்கலாமே: சனி பகவானால் யோகம் பெரும் ராசிகள்

இந்த எளிமையான பரிகாரம் மற்றும் வழிபாட்டில் நம்பிக்கை இருப்பவர்கள் முழு மனதுடன் இதை மேற்கொண்டு சனி செவ்வாயின் சேர்க்கையால் ஏற்படக்கூடிய பாதிப்பில் இருந்து விடுபடலாம் என்று சொல்லப்படுகிறது இந்த வழிபாட்டு முறைகளில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறுங்கள்.

- Advertisement -