- Advertisement -

செய்த பாவங்கள் குறைந்து, செல்வம், ஆரோக்கியம், ஆயுள் ஆகிய முப்பலன்களும் ஒருசேர கிடைக்க சனிக்கிழமையில் இந்த விரதத்தை கடைபிடித்து வந்தால் போதும்.

- Advertisement -

நினைத்த காரியங்கள் நிறைவேற வேண்டும் என்பதற்காகவே விரதங்கள் இருக்கின்றோம். அதிலும் பெரும்பாலும் செல்வம், ஆரோக்கியம், ஆயுள் இவை மூன்றும் தான் வேண்டுதலுக்கான முக்கிய காரணிகளாக இருக்கும். இவை அனைத்தும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க சனிக்கிழமை விரதத்தை கடைபிடிக்க வேண்டும். நவகிரகங்களில் ஒருவரான சனிபகவானே ஆயுள்காரகன் ஆவார். அவரின் ஆதிக்கத்தை பொறுத்தே ஒருவரின் ஆயுட்காலம் நிர்ணயமாகிறது.

ஆனால் சனி கிரகத்தை ஆட்சி செய்யும் பெருமாளே இந்த சனி கிரகத்திற்க்கு அதிபதியாவார். எனவே சனிக்கு அதிபதியான பெருமாளை நினைத்து அவருக்கு உகந்த நாளான சனிக் கிழமைகளில் விரதம் மேற்கொண்டால் நீங்கள் நினைத்த காரியங்கள் நிச்சயம் நிறைவேறும். அதிலும் ஆயுள் பலன் அதிகரிக்க சனி விரதம் ஒன்றே மிகவும் உகந்ததாகும். இவ்வாறான ஐஸ்வர்யங்களை அள்ளி தர உதவும் சனிக்கிழமை விரதத்தினை துவங்க ஒவ்வொரு மாதத்தின் வளர்பிறையில் வரும் சுக்கிலபட்ச முதல் சனிக்கிழமையில் துடங்குவது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.

- Advertisement -

இவ்வாறு தொடங்கும் சனி கிழமை விரதத்தினை 11 வாரங்கள் முதல் 51 வாரங்கள் வரை தொடர்ந்து கடை பிடித்தால், உங்களிடன் பாவ பலன்கள் நீங்கி நல்ல பலன்கள் உண்டாகும். அதிலும் விசேஷமாக பெருமாளுக்கு உரிய புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் விரதங்கள் மேற்கொண்டால் அவை ஒரு வருடத்திற்கான நற்பலன்களை உங்களுக்கு கொடுக்கும்.

சனிக்கிழமை விரதத்தை கடைபிடிக்கும் முறை:
சனிக்கிழமை விரதம் என்பது மிகவும் எளிமையான ஒன்றாகும். காலை எழுந்து, குளித்துவிட்டு பூஜை செய்து,
அதன்பின் காலை மற்றும் மதிய வேளைகளில் எந்த உணவு வகைகளும் உண்ணாமல், பால், பழம், தண்ணீர் மட்டும் குடித்து விரதம் மேற்கொள்ள வேண்டும். பின்னர் மாலையில் சனிபகவானுக்கு எள் எண்ணை தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பிறகு இரவு வேளை மட்டும் ஏதேனும் ஒரு எளிமையான உணவை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம். அதேபோல் சனிக்கிழமை தினங்களில் அசைவத்தை தவிர்த்து விடுதல் என்பது மிகவும் நல்லதாகும்.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் சனிக்கிழமை நாளில் மாலைநேரத்தில் கோவிலுக்கு சென்று, சனிபகவானுக்கு கருப்பு வஸ்திரம் சாத்தி, கருப்பு எள் மற்றும் வேகவைத்த சாதம் இவற்றை படைத்து, தீபமேற்றி வழிபட்டு வந்தாலும் உங்களுக்கு நல்ல நற்பலன்கள் கிடைக்கும்.

சனிக்கிழமை விரதத்தை கடைபிடிக்க வேண்டிய ராசிக்காரர்கள் :
கும்பம் மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு அதிபதியாக இருப்பவர் சனி பகவான். எனவே இவர்கள் நிச்சயமாக சனிக்கிழமை விரதத்தை கடைபிடித்தால் நல்ல பலன் கிடைத்து, வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

ரிஷபம், கன்னி, துலாம் மற்றும் கும்ப ராசிக்காரர்களின் லக்னத்திற்கு யோகாதிபதியாக சனி பகவான் இருக்கிறார். எனவே இவர்களும் சனி கிழமை விரகத்தை தொடர்ந்து கடை பிடித்து வந்தால் இவர்களுக்கும் நல்ல பலன்கள் அதிக அளவில் கிடைக்கின்றன.

மற்றும் மற்ற ராசிக்காரர்களும் சனி கிழமை விரதத்தை கடைப்பிடித்து வர அவர்களிடமிருந்து துன்பம் தரக் கூடிய தீயபலன்கள் விலகி, நல்ல பலன்கள் கிடைக்க பெறுகின்றனர். இவ்வாறு முறையாக சனிக்கிழமை விரதத்தை பின்பற்றி வரும் அனைவருக்கும் செல்வம், ஆரோக்கியம், ஆயுள் ஆகிய முப்பலன்கள் நிச்சயம் கிடைக்கிறது.

- Advertisement -
Published by