
பிறந்த நேரமும் தேதியும் தெரிந்தவர்கள் அனைவருக்கும் ஜாதகம் என்ற ஒன்று கண்டிப்பாக இருக்கும். நாம் பிறந்த நேரத்தை பொறுத்து கிரகங்களின் அமைப்பு எப்படி இருக்கும் என்பதை கணித்து கூறுவது ஜாதகம். இந்த கிரகங்களின் அமைப்பு எப்படி இருக்கிறதோ அதை பொறுத்துதான் நம்முடைய வாழ்க்கையும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதனால் தான் எந்த ஒரு நல்ல காரியத்தை செய்வதாக இருந்தாலும் அதற்கு முன்பாக ஜாதகம் பார்த்து பிறகுதான் செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட ஜாதகங்களில் யோகமான ஜாதகம் என்றும் இருக்கும். சாபம் பெற்ற ஜாதகம் என்றும் இருக்கும். கிரக நிலைகள் சரியில்லாத ஜாதகமும் இருக்கும் என்று கூறிக் கொண்டே செல்லலாம். அந்த வகையில் நம்முடைய ஜாதகம் எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும் அதை யோகமாக மாற்றுவதற்கு செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
அனைத்து கிரகங்களும் சாதகமான சூழ்நிலையில் இருக்கக்கூடிய ஒரு ஜாதகத்தை தான் யோகமான ஜாதகம் என்று கூறுவோம். அப்படிப்பட்டவர்கள் செய்யக்கூடிய எந்த காரியமாக இருந்தாலும் அதில் வெற்றிகள் உண்டாகும். அவர்களுக்கு எந்தவித தடைகளுமே ஏற்படாது. சுப நிகழ்ச்சிகள் தடையில்லாமல் நடைபெறும். எந்த ஒரு காரியத்தை செய்யும் பொழுதும் அதனால் எந்த வித பாதிப்புகளும் ஏற்படாது. அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து விதமான செல்வங்களும் அவர்களுடைய தேவைக்கேற்றார் போல் கிடைக்கும் என்றே கூறலாம். அப்படிப்பட்ட யோகமான ஜாதகமாக நம்முடைய ஜாதகமும் மாற செய்ய வேண்டிய பரிகாரம்.
இந்த பரிகாரத்தை வைகாசி மாதம் முதல் நாள் மே மாதத்தின் 15ஆம் தேதி வியாழக்கிழமை அன்று மாலை 6:30 மணியிலிருந்து இரவு 11 மணிக்குள் செய்ய வேண்டும். இந்த நேரத்தில் எந்த நேரம் தங்களுடைய வசதிக்கேற்ற நேரமோ அந்த நேரத்தில் வீட்டு பூஜை அறையில் மூன்று அகல் விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி வடக்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு தங்களுடைய குடும்பத்தில் இருக்கக்கூடிய அனைத்து உறுப்பினர்களின் ஜாதகத்தையும் எடுத்து பூஜையறையில் வைக்க வேண்டும். எந்த இடத்தில் வேண்டுமானாலும் வைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக இதற்கு வெள்ளை பட்டு துணி வேண்டும். அந்த பட்டு துணியை எடுத்து அதில் நவதானியங்களை கொட்டி வெள்ளை நிற நூலால் மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த மூட்டையை ஜாதகத்தின் மேல் வைக்க வேண்டும். அனைத்து ஜாதகத்திற்கு மேல் இந்த மூட்டை இருப்பது போல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெள்ளை பட்டு துணி கிடைக்காத பட்சத்தில் சுத்தமான வெள்ளை துணியிலும் நவதானியங்களை வைத்து மூட்டையாக கட்டலாம். அன்று இரவு முழுவதும் இந்த ஜாதகமும் நவதானிய மூட்டையும் அப்படியே பூஜை அறையில் இருக்கட்டும்.
மறுநாள் காலையில் சுத்தமாக குளித்து முடித்து விட்டு வீட்டு பூஜை அறையில் தீபமேற்றி சாம்ராணி தூபம் அனைத்தும் காட்டி முடித்த பிறகு பயபக்தியோடு ஜாதகத்தை எடுத்து எங்கு வைப்போமோ அங்கு வைத்து விட வேண்டும். நவதானியத்தை பறவைகளுக்கு தானமாக தர வேண்டும். துணியை ஓடுகின்ற நீரில் போட்டு விட வேண்டும். இந்த முறையில் மூல நட்சத்திரமும் திருதியை திதியும் சேர்ந்து வரக்கூடிய நாளில் ஜாதகத்தை வைத்து பரிகாரம் செய்யும் பொழுது அந்த ஜாதகத்தில் இருக்கக்கூடிய கிரக அமைப்புகள் அனைத்தும் மாறி யோகமான ஜாதகமாக மாறும்.
இதையும் படிக்கலாமே:ஐஸ்வர்யம் பெருக விஷ்ணுபதி புண்ணிய கால பரிகாரம்
வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் உண்டாவதற்கும், சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறுவதற்கும், அனைத்து விதமான செல்வங்களையும் பெற்று சிறப்பாக வாழ்வதற்கும் நம்முடைய ஜாதகத்தை யோகமான ஜாதகமாக மாற்ற இந்த பரிகாரத்தை முழுமனதோடு செய்யலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.