- Advertisement -
ஜோதிடம்

சனி பகவானால் யோகம் பெரும் ராசிகள்

நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக் கூடியவர் சனி பகவான் ஜோதிட சாஸ்திரத்தில் இவருடைய பெயர்ச்சியானது மிகவும் முக்கிய காரணமானதாக கருதப்படுகிறது. இவர் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தன்னுடைய இடத்தை மாற்றிக் கொள்ளக் கூடியவர். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்று விட்டால் அந்த ராசிக்காரர்களுக்கு நன்மை மற்றும் தீமைகளை பகுந்தளிக்க கூடியவர்.

கர்மநாயகனாக விளங்கக் கூடிய சனிபகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இவர் இதே ராசியில் இருந்தாலும் வரும் ஜூன் மாதம் 30 ஆம் தேதி அந்த ராசியில் வக்கிர நிலை அடைகிறார். இதன் பிறகு 139 நாட்கள் இதே நிலையில் பயணம் செய்ய உள்ளார். இதனால் சில ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்க போகிறது. யார் அந்த ராசிக்காரர்கள் என்று தெரிந்து ஜோதிடம் குறித்த இந்த பதிவில் கொள்ளலாம் வாங்க.

- Advertisement -

சனியின் வக்கிர நிலையால் யோகம் பெறும் ராசிகள்

கன்னி ராசி

சனியின் இந்த வக்கிர நிலையால் உங்களுக்கு பல அபரிதமான யோகங்கள் வரப் போகிறது. வேலை செய்யும் இடத்தில் இடம் மாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு என அனைத்தும் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவும், உறவுகளின் ஆதரவும் உங்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும். பணவரவில் எந்த தடுமாற்றமும் இல்லாமல் நிதிநிலை பல மடங்கு முன்னேற்றமாக இருக்கும்.

துலாம் ராசி

சனி பகவானின் இந்த மாற்றமானது உங்களுக்கும் பெரிய அளவில் யோகத்தை கொடுக்கப் போகிறது. கை விட்டுப் போன அனைத்து செல்வங்களும் உங்களை தேடி வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த வேலைகள் முடியும். சிக்கல்கள் குறையும் வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பணவரவு அதிக குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அதிர்ஷ்டங்கள் தேடி வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -

மீன ராசி

சனியின் இந்த வக்கிர பெயர்ச்சியால் உங்களுக்கும் பல யோகங்கள் உண்டு. வாழ்க்கை துணையின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட காரியங்கள் நடக்கும். வியாபாரம் துறையில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் இது வரை இருந்து வந்து மந்தமான சூழ்நிலை மாறி லாபம் அதிகரிக்கும். பணவரவில் இருந்து வந்த சிக்கல்கள் குறையும். நிதி நிலைமை சீராகும். வேலைவாய்ப்பில் புதிய நல்ல மாற்றங்கள் உருவாகும்.

இதையும் படிக்கலாமே: குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

இது ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துகளின் தகவலின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை தான். இதிலும் சிறுசிறு மாற்றங்களுக்கு வாய்ப்புண்டு என்ற கருத்தினை கொண்டு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -