- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

விரதம் இருப்பதற்குப் பின் ஒளிந்துள்ள அறிவியல் உண்மை

விரதம் இருப்பது மூடநம்பிக்கை….இல்லையில்லை அது மத நம்பிக்கை என இருவேறு கருத்துக்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால், உண்மையில் விரதத்திற்கு பின்னால் இருக்கிறது மிகப்பெரிய விஞ்ஞானம். அதை கொஞ்சம் தெரிந்துக்கொள்ளலாமே!

விரதம் இருப்பது ஏன்…?

- Advertisement -

‘அன்னத்தை அடக்கியவன் ஐந்தை (கண், காது, மூக்கு, வாய், உடல்) யும் அடக்குவான்’ என்பார்கள். இவைகளை கட்டுப்படுத்தும்போது, நம் மனம் ஞானத்தை தேடி செல்கிறது என்பதை அத்தனை தத்துவ ஞானிகளும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

நமது வயிறு 15 நாட்களுக்கு ஒருமுறையாவது காலியாக இருக்க வேண்டும். இதனையொட்டித்தான் அமாவாசை, பெளர்ணமி என விரதங்கள் எல்லாம் வரையறுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. விரதமிருப்பதால் வயிறு சுத்தமாகிறது. ஜீரண உறுப்புகள் சீராகிறது என்கிறார்கள் சித்த மருத்துவர்கள். இந்த அடிப்படையில்தான் எல்லா மதங்களுமே விரத்தை தூக்கிபிடிக்கின்றன.

- Advertisement -

எந்தவொரு விஷயத்தையும் 48 நாட்கள் அதாவது ஒரு மண்டல காலத்துக்கு தொடர்ந்து செய்யும்போது, இயல்பாகவே அதற்கு நம் மனமும், உடலும் பழக்கப்பட்டுவிடுகின்றன என்பது நிரூபிக்கப்பட்ட உளவியல் உண்மை. இதன் அடிப்படையிலேயே இந்துக்கள் சபரிமலைக்கு செல்ல 48 நாட்கள் விரதமிருக்கிறார்கள்.

நாம் முன்னோர்கள் சொல்லிக்கொடுத்த முறைப்படி நாம் விரதம் இருந்து சரியான உணவை உண்டால் ஆரோக்கியமான உடலையும் நீண்ட ஆயுளையும் பெறலாம் என்பது உறுதி. அறிவியலாளர்களும் இதை ஒப்புக்கொள்ளவே செய்கின்றனர்.

- Advertisement -