- Advertisement -

செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிக்கிறார்களா? கடமைக்கென்றே ஒரு வாழ்க்கையா? கடன் சுமை தாண்டவமாடுகிறதா? அப்படின்னா நீங்க செய்ய வேண்டியது என்ன?

செய்த தவறுக்கே பலருக்கும் தண்டனைகள் கிடைப்பது இல்லை! என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது, செய்யாத தவறுக்கு வாழ்நாள் முழுவதும் சிலர் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். நமக்கு ஒரு தீங்கு இழைக்கப்படுகிறது என்று தெரிந்தும் அதை நம்மால் தட்டிக்கேட்க முடியாத சூழ்நிலையில் கட்டப்பட்டு இருப்போம். தடைகளை உடைத்து எரியவும் முடியாமல், அதனை ஏற்றுக் கொண்டு வாழவும் முடியாமல் கடமைக்கு என்றே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு வாழ்க்கை இருக்கும். அப்படின்னா அதற்கு என்னதான் காரணம்? தீராத கடன் சுமைக்கு எளிதான ஒரு பரிகாரம் என்ன? இதனைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம் வாருங்கள் பதிவுக்குள் போகலாம்.

ஒரு மனிதன் தன் சுயத்தை இழந்து தனக்கு நேரும் அநியாயத்தை கூட தட்டிக்கேட்க முடியாத சூழ்நிலையில் சில சமயங்களில் காட்டப்படுகிறான். தவறு என்று தெரிந்தும் அந்த தண்டனையை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள் என்றால் உங்கள் கர்ம வினை அங்கு விளையாடிக் கொண்டிருக்கிறது என்று தான் அர்த்தமாகிறது. ஒரு மனிதன் வேறு வழியில்லாமல் கட்டப்பட்டு ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தால், அதற்கு கேது பகவான் காரணகர்த்தாவாக இருக்கிறார்.

- Advertisement -

முன் ஜென்மத்தில் நீங்கள் செய்த பாவ வினைகளுக்கு இந்த ஜென்மத்தில் உங்களுக்கு கேது பகவான் அசுப பலன்களை கொடுக்கிறார். அதனை நீங்கள் பிடித்தாலும், பிடிக்கவில்லை என்றாலும் ஏற்றுத் தான் ஆக வேண்டிய சூழ்நிலை இருக்கும். இந்த வகையில் கடன் என்பதற்கும் இதுவே காரணமாக அமைந்து விடுகிறது.

பிடிக்காத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பது, உங்கள் தரப்பு நியாயங்களை கூட மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியாமல் தவிப்பது, ஒரு பந்தத்தில் இருந்து விடுபட முடியாமல் இருப்பது, உங்களை நீங்களே இழந்து வேறு ஒருவருக்காக வாழ்வது, போதிய உழைப்பு உங்களிடம் இருந்தும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையில் இருப்பது போன்ற விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு நடந்து கொண்டிருந்தால் கேது பகவானின் அருள் உங்களுக்கு இல்லை என்பது அர்த்தம் ஆகிறது. இதனால் நீங்கள் ராகு, கேது வழிபாடு செய்வதும், கேது பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபடுவதம் சிறந்த பலன்களை கொடுக்கும்.

- Advertisement -

ஜாதக ரீதியாக ஒருவர் மற்றவர்களுடைய சுய உழைப்பை தட்டிப் பறித்து இன்பம் காண்பவர்கள் ஆக இருந்தால் அதற்கு ராகு பகவான் காரணமாக அமைகிறார். ஒருவர் தீயவராகவே இருந்தாலும், அவர் செய்த பூர்வ புண்ணிய அடிப்படையில் அவருக்கு ராகு பகவான் சுபத்துவம் பெற்ற கிரகங்களுடன் சேர்ந்து மற்றவர்களுடைய உழைப்பையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வகையில் பலன்களைக் கொடுக்கிறார். இதனால் இறைபக்தி இல்லாவிட்டாலும் அடுத்தவர்களுடைய சுய உழைப்பில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தாலும் சுக போகமாக வாழ்வதற்கு கிரக அமைப்புகள் காரணமாக அமைகிறது.

எனவே அவரவர் செய்யும் கர்ம வினைக்கு ஏற்ப தான் பலன்களும் கிடைக்கப் பெறுகிறது என்பது தான் இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் ஆகும். அதிகமான கடன் சுமையால் அவதிப்படுபவர்கள் மலை மீது இருக்கும் முருகப் பெருமானை வழிபட்டால் பட்ட துன்பம் எல்லாம் பஞ்சாய் பறக்கும். பழனி முருகனை தரிசித்தால் கடன் தொல்லைகளிலிருந்து விடுபடலாம். அங்குள்ள மலை வாழ் குரங்குகளுக்கு வாழை பழம் கொடுப்பது, யானைகளுக்கு கரும்பு வாங்கிக் கொடுப்பது போன்றவை செய்து வந்தால் கர்மாவின் சுமை குறைந்து நற்பலன்களைப் பெறலாம்.

- Advertisement -
Published by