
பெருமாளை எப்படி கும்பிட்டால் கடன் இல்லாமல் வாழலாம், வீண் விரைய செலவை குறைக்கலாம், கட்டு கட்டாக பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசை கொண்டவர்கள், பெருமாள் வழிபாட்டை எப்படி செய்வது, இதுதானே எல்லோருடைய கேள்வியாகவும் இருக்கிறது, உங்கள் வீட்டில் இருக்கும் பெருமாளின் திருவுருவப்படத்திற்கு முன்பு இந்த பொருட்களை வைத்து வேண்டுதல் வையுங்கள்.
இந்த புரட்டாசி மாதம் முடிவதற்குள், கட்டுக்கடங்காத செலவு கட்டுப்பாட்டிற்குள் வரும். அடைக்க முடியாத கடனை அடைக்கலாம். சேர்க்கமுடியும் முடியாத பணத்தை சேர்த்துக் காட்டலாம். வாங்கவே முடியாத சொத்து சுகத்தை வாங்கிக் காட்டலாம். நம்மை குபேரராக மாற்றப் போகும் அந்த வழிபாட்டை பற்றிய தகவலை இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.
பெருமாள் என்றாலே அவர் பச்சை நிறத்திற்கு உரியவர். புதன் கிரகத்துக்கு உரிய தெய்வம் பெருமாள். ஆகவே அவருக்கு பச்சை நிற துளசி, பச்சை நிறத்தில் இருக்கும் மருவு போன்ற வாசனைப் பொருட்களை வாங்கி இந்த புரட்டாசி மாதத்தில் அலங்காரம் செய்வது ரொம்ப ரொம்ப நல்லது. தினமும் இந்த துளசி இலைகள், தினமும் மருவு (மருவு என்பது பச்சை நிறத்தில் இலை போலவே இருக்கும் வாசமாக இருக்கும். பூக்கடைக்காரர்களிடம் கேட்டால் கொடுப்பார்கள்) கிடைத்தால் கூட வாங்கி பெருமாளுக்கு சூட்டுங்கள். உங்கள் பணக்கஷ்டம் அடியோடு நீங்கும்.
புதுசாக ஒரு மண் உண்டியல் வாங்கி பூஜை அறையில் வையுங்கள். அதில் முதலில் ஒரு ரூபாயை போட்டு பெருமாளே உன்னுடைய கடனை அடைக்க நான் உதவி செய்கின்றேன் என்று ஒரு வேண்டுகோள் வைத்து, இந்த உண்டியலில் பணம் சேருங்கள். ஒவ்வொரு ரூபாயாக போட்டாலும் போதும். இந்த பணம் பெருமாள் கோவிலில் உண்டியலில் சேர்க்கப்பட வேண்டும். இந்த உண்டியல் பரிகாரத்தை செய்து விட்டு பிறகு உங்களுடைய கடன் பிரச்சனை தீர உங்களுக்கு தேவையான பணத்தை சேர்க்க தொடங்கி பாருங்கள். அந்த பணம் சீக்கிரம் சேர தொடங்கும்.
பிறகு ஒரு படி அல்லது அறை படி உங்களுடைய வீட்டில் எது இருக்கிறதோ, அதை எடுத்து பெருமாள் முன்பு வைத்து அதை நிரம்ப பச்சரிசி நெல், அப்படி இல்லை என்றால் பச்சரிசி வைத்து அதன் மேலே ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து பெருமாள் முன்பு வைக்க வேண்டும். உங்கள் வீண் செலவை குறைக்கப் போவது இந்த படி தான். பெருமாள் முன்பு படி வைத்து வழிபாடு செய்தால் வீண் செலவுகள் குறையும் வருமானம் பெருகும். அரிசி பருப்பு அளப்பதற்கு பயன்படுத்தும் படி.
இதைதான் படியை அளந்து பெருமாளை வழிபாடு செய்வது என்று சொல்லுவார்கள். இந்த படி நிரம்ப எப்படி நெற்குவியல் இருக்கிறதோ, அதுபோல உங்களுடைய வீட்டில் செல்வ கடாட்சம் குவியும். இந்த முறையில் பெருமாளை புரட்டாசி மாதத்தில், வீட்டில் வழிபாடு செய்து, வேண்டிக் கொண்டால் வீண் விரைய செலவுகள் குறைந்து வருமானம் பெருகி கடன் இல்லாத வாழ்வை வாழலாம். புரட்டாசி மாதம் முழுவதும் இந்த படியில் இருக்கும் நெல் அல்லது பச்சரிசி அப்படியே இருக்கட்டும்.
இதையும் படிக்கலாமே: பொன்னும், பொருளும் குவிய குபேர நைவேத்தியம்.
புரட்டாசி மாதம் முடிந்த பிறகு அதை எடுத்து சமைத்து அன்னதானம் செய்துவிடலாம். இரண்டு பேருக்கு சாப்பாடாக போடுங்கள். நெல் வைத்திருந்தீர்கள் என்றால் அதை இடித்து அரிசியை, தனியாக பிரித்து எடுத்து சமைத்துக் கொள்ளலாம். முடியாதவர்கள் அப்படியே இதை பறவைகளுக்கு இரையாக போட்டாலும் தவறு கிடையாது. மேலே சொன்ன இந்த பரிகாரத்தை புரட்டாசி மாதத்தில் செய்பவர்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.