- Advertisement -

தெய்வ வழிபாட்டை மேற்கொள்பவர்கள் அனைவருமே அந்த தெய்வத்திற்கு இணையாக இருக்கக்கூடிய மரங்களையும் வழிபாடு செய்வார்கள். அதிலும் குறிப்பாக மரங்கள் அனைத்திற்கும் அரசனாக திகழக்கூடிய அரச மரத்தை வழிபடாத நபர்களையே இருக்க மாட்டார்கள். அதனால் தான் அன்றைய காலத்தில் அரச மரத்தை அனைவரும் வழிபட வேண்டும் என்பதற்காகவே அரச மரத்தடியில் விநாயகரை வைத்திருந்தார்கள் நம்முடைய முன்னோர்கள்.

அரச மரத்தை நாம் வழிபடுவதன் மூலம் பல தெய்வங்களின் அருள் நமக்கு கிடைத்தாலும் உடல் நலமும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதுதான் நம் முன்னோர்களின் கருத்து. அப்படிப்பட்ட அரச மரத்தடியில் எந்த பாடலை பாடினால் மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

அரச மர வழிபாடு

அரச மரத்தில் அனைத்து விதமான தெய்வங்களும் வீற்றிருக்கிறார்கள் என்றும் முப்பத்து முக்கோடி தேவர்களும் இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. ஒவ்வொரு கிழமையிலும் அரச மரத்தை எந்தெந்த முறையில் நாம் வழிபட்டால் நமக்கு நன்மைகள் நடக்கும் என்று பல பதிவுகளில் நாம் பார்த்திருப்போம். குறிப்பாக மார்கழி மாதத்தில் பலரும் அரச மரத்தடி விநாயகருக்கு தண்ணீர் ஊற்றி அந்த அரச மரத்தை வலம் வருகிறது.

பல மருத்துவ குணம் மிகுந்த இந்த அரச மரத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சுற்றி வரும் பொழுது அவர்களுக்கு விரைவிலேயே குழந்தை பாக்கியம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்ட ஒன்றாகவே திகழ்கிறது. சரி இப்பொழுது அரச மரத்தடியில் எந்த பாடலை பாட வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை சனிக்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். சனிக்கிழமை அன்று சூரிய உதயம் ஆகும் நேரத்தில் பக்கத்தில் இருக்கக்கூடிய அரச மரத்தடிக்கு செல்ல வேண்டும். அங்கு இருக்கக்கூடிய அரச மரத்தின் அடியில் இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக தங்களிடம் இருக்கக்கூடிய வாசனை மிகுந்த உதிரி பூக்களை எடுத்துக் கொண்டு போய் அரச மரத்தடியில் வைத்து விட வேண்டும்.

அடுத்ததாக அரசமரத்தை ஒன்று, மூன்று 11, 21 இப்படி தங்களால் இயன்ற அளவு 108 என்ற எண்ணிக்கை வரை சுற்றலாம். இப்படி சுற்றி முடித்த விட்டு அரச மரத்தடி நிழலில் அமர்ந்து மகாலட்சுமியின் பாடலான கனகதாரா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். அந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யத் தெரியாது என்பவர்கள் அந்த மரத்தடியின் நிழலிலேயே அமர்ந்து கொண்டு யூடூப்பில் ஒலிக்கச் செய்து கேட்க வேண்டும்.

- Advertisement -

இப்படி வாராவாரம் சனிக்கிழமை தோறும் அரச மரத்தை வளம் வந்து கனகதாரா ஸ்தோத்திரத்தை உச்சரிப்பவர்களுக்கோ அல்லது கேட்பவர்களுக்கு மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது பரிபூரணமாக கிடைக்கும். இப்படி நாம் தொடர்ந்து 16 சனிக்கிழமைகள் செய்யும் பொழுது நம் வீட்டில் இருக்கக்கூடிய வறுமை நிலை முற்றிலும் நீங்கி செல்வநிலை உயரும்..

இதையும் படிக்கலாமே: செல்வம் பெருக ஜூலை மாத மந்திரம்

மிகவும் எளிமையான இந்த வழிபாட்டை முறையாக செய்பவர்களுடைய வாழ்க்கையில் மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -