- Advertisement -

செல்வத்தடை நீக்கும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பலவிதமான கஷ்டங்களுக்கு காரணமாக திகழக்கூடிய கர்ம வினைகளை தீர்க்கும் ஒரு அற்புதமான தெய்வமாக இருப்பவர்தான் காலபைரவர். காலபைரவரை ஒருவர் முழுமனதோடு வழிபாடு செய்யும் பொழுது அவர்களுடைய கர்ம வினைகள் தீருவதோடு சனீஸ்வர பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகளும் குறையும். மேலும் எதிரிகள் தொல்லை, கடன் தொடர்பான பிரச்சனைகள் என்று நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் தீரும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட காலபைரவரை தேய்பிறை அஷ்டமி அன்று வீட்டிலேயே எந்த மந்திரத்தை கூறி எப்படி வழிபட்டால் செல்வத்தடை நீங்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கால பைரவருக்கு உகந்த திதியாக திகழ்வது அஷ்டமி திதி. இதில் வளர்பிறை அஷ்டமி தேய்பிறை அஷ்டமி என்று இரண்டு அஷ்டமிகள் வரும். தேய்பிறை அஷ்டமி அன்று நாம் கால பைரவரை வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் நாம் பட்டுக் கொண்டிருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் தேய்ந்து ஒன்றும் இல்லாமல் போய்விடும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் நம்முடைய பிரச்சினைகள் அனைத்திற்கும் காரணமாக திகழக்கூடியது. பணம் தான். பணம் தொடர்பாக இருக்கக்கூடிய எப்பேர்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் அந்த பிரச்சனை தீர்வதற்கு தேய்பிறை அஷ்டமி சமயத்தில் நாம் செய்யக்கூடிய வழிபாட்டை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

- Advertisement -

மார்கழி மாதம் 7ஆம் தேதி டிசம்பர் மாதம் 22ஆம் தேதி மாலை 4:51 மணிக்கு தேய்பிறை அஷ்டமி என்பது ஆரம்பிக்கிறது. அது டிசம்பர் 23ஆம் தேதி மாலை 6:48 வரை இருக்கிறது காலபைரவருக்கு ராகு காலம் என்பது மிகவும் விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது. அந்த வகையில் அஷ்டமி சமயத்தில் வரக்கூடிய ராகு காலம் என்பது திங்கட்கிழமை காலை 7:30 மணியிலிருந்து 9 மணிக்குள் வரும். அந்த நேரத்தில் வீட்டிலேயே எளிமையான முறையில் காலபைரவரை நாம் வழிபாடு செய்யலாம். இதற்கு நமக்கு சொர்ணாகர்ஷண பைரவரின் படம் இருந்தால் அந்த படத்தை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் சிவபெருமானை படத்திற்கு முன்பாகவே இந்த வழிபாட்டை செய்யலாம்.

இதற்கு நல்ல எலுமிச்சம் பழமாக ஒரு எலுமிச்சம் பழமும் நல்ல தேங்காயாக ஒரு தேங்காயும் வேண்டும். அதில் எலுமிச்சம் பழத்தில் இரண்டு தீபங்களும் தேங்காயில் இரண்டு தீபமும் போட வேண்டும். அடுத்ததாக புதிதாக ஒரு அகல் விளக்கை வாங்கி அதிலும் தீபம் போட வேண்டும். சிவபெருமானின் படத்திற்கு செவ்வரளி மாலை சாற்ற வேண்டும். இப்பொழுது இந்த மூன்று தீபங்களையும் பார்த்தவாறு பின்வரும் இந்த மூன்று மந்திரங்களையும் முழு மனதோடு கூற வேண்டும். முதல் இரண்டு மந்திரங்களை 27 முறையும், மூன்றாவதாக இருக்கக்கூடிய பீஜ மந்திரத்தை 108 முறையும் கூற வேண்டும். இப்படி கூறுவதன் மூலம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய செல்வத்தடைகள் அனைத்தும் நீங்குவதோடு செல்வ வளமும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

மந்திரம்

கால காலாய வித்மஹே காலபைரவாய தீமஹி தன்னோ கால பைரவாய ப்ரசோதயத்.

ஒம் ஷ்வானத் வஜாய வித்மஹே !
சூல ஹஸ்தாய தீமஹி !
தன்னோ பைரவ : ப்ரசோதயாத் !!

- Advertisement -

பீஜ மந்திரம்

ஓம் பம் ஸ்வர்ண ஆகர்சன பைரவாய நமஹ

இந்த மந்திரங்களை கூறி முடித்த பிறகு பிஸ்கட்டை பொடியாக நுணுக்கி எறும்புக்கு தூவி விட வேண்டும். அருகில் இருக்கக்கூடிய நாய்களுக்கு பிஸ்கட்டை தானமாக தரவேண்டும். பிறகு அன்று இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக சொர்ண ஆகர்சன பைரவரின் அஷ்டகத்தை ஒருமுறை முழுமனதோடு படித்துவிட்டு உறங்கச் செல்ல வேண்டும்.

பைரவருக்கு ஏற்றிய தீபங்கள் தானாக குளிர வேண்டும். அவ்வாறு குளிந்த பிறகு எலுமிச்சம் பழம் மற்றும் தேங்காயை ஓடுகின்ற தண்ணீரில் போட்டு விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:பானு சப்தமி அன்று ஏற்ற வேண்டிய தீபம்
இந்த முறையில் தேய்பிறை அஷ்டமி அன்று ராகு காலத்தில் நம்முடைய வீட்டிலேயே ஸ்வர்ண ஆகர்ஷன பைரவரை நினைத்து இந்த பூஜையை செய்யும் பொழுது காலபைரவரின் அருளால் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய செல்வ தடைகள் அனைத்தும் விலகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -