
இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் தாங்கள் என்றுமே இளமையாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். ஆசைப்பட்டால் மட்டும் போதுமா அதற்குரிய செயல்களிலும் ஈடுபட வேண்டும் அல்லவா? அப்படி நம்முடைய இளமையை தக்க வைத்துக் கொள்வதற்கும் முகத்தை பொலிவுடன் பார்த்துக் கொள்வதற்கும் செம்பருத்திப் பூவை பயன்படுத்தி எப்படி ஃபேஸ் பேக் செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
நம் முகத்தை இளமையோடு வைத்துக் கொள்வதற்கு பல அற்புதமான மூலிகைகள் நம்மிடம் இருக்கின்றது அதை முறையாக நாம் பயன்படுத்திக் கொண்டோம் என்றால் என்றுமே இளமையுடன் இருக்க முடியும்.
செம்பருத்திப்பூ ஃபேஸ் பேக் செய்வதற்கு நமக்கு ஒற்றை செம்பருத்தி தேவைப்படும். இதில் இருக்கும் இதழ்களை மட்டும் நாம் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பூவை பயன்படுத்தி இரண்டு விதங்களில் நாம் ஃபேஸ் பேக் செய்யலாம்.
முதல் முறை:
மூன்று செம்பருத்தி பூக்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் இருக்கும் இதழ்களை மட்டும் தனியாக பிரித்து தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் இந்த இதழ்களை போட்டு அரை டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி குறைந்த தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும். செம்பருத்தி பூவின் நிறங்கள் அனைத்தும் அந்த தண்ணீரில் இறங்கிய பிறகு அதை இறக்கி விட்டு நன்றாக ஆற வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது நாம் சாதாரணமாக முகத்திற்கு பயன்படுத்தக்கூடிய கடலை மாவு அல்லது முல்தானி மெட்டி பேக்கில் பன்னீரோ அல்லது தண்ணீரோ கலப்பதற்கு பதிலாக இந்த செம்பருத்திப் பூ தண்ணீரை கலந்து முகத்திற்கு தடவலாம்.
இரண்டாவது முறை:
செம்பருத்தி பூ இதழ்களை மட்டும் சுத்தம் செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதை நிழலில் உலர்த்தி நன்றாக காய வைத்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது செம்பருத்தி பூ பொடியில் இருந்து ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்து ஒரு பவுலில் சேர்த்து விட வேண்டும். அடுத்ததாக கடலை மாவு அல்லது முல்தானி மெட்டி ஒரு ஸ்பூன் எடுத்து போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு அதில் தேவையான அளவு பன்னீரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அரை ஸ்பூன் அளவிற்கு தேனையும் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் நன்றாக காய வைத்து விட வேண்டும். காய்ந்த பிறகு முகத்தை சாதாரண குளிர்ந்த நீரால் கழுவி வேண்டும்.
இதையும் படிக்கலாமே: கருமையான அடர்த்தியான முடியை பெற உதவும் எண்ணெய்.
இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை நாம் செம்பருத்தி பூவால் ஃபேஸ் பேக் செய்வதன் மூலம் நம் முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் அனைத்தும் நீங்கி முகம் இளமையுடன் தென்படும். அது மட்டும் அல்லாமல் முகத்தில் இருக்கக்கூடிய கருந்திட்டுகள் அனைத்தும் மறைந்து முகம் பொலிவுடன் திகழும்.