- Advertisement -
ஜோதிடம்

செப்டம்பர் மாதம் சிறப்பாக அமைய பரிகாரம்

- Advertisement -

ஒவ்வொரு மாதமும் தொடங்கும் பொழுது இந்த மாதம் நமக்கு நல்ல மாதமாக அமையாதா? நமக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகாதா? நாம் செய்யும் காரியங்கள் வெற்றி அடையாதா? என்று பல கனவுகளுடன் தான் அந்த மாதத்தை நாம் எதிர் நோக்குவோம். அது அனைத்தும் நாம் நினைத்தது போல் நேர்மறையாக செயல்படுவதற்கு சில பரிகாரங்களும், வழிபாட்டு முறைகளும் இருக்கின்றன. அந்த வகையில் இந்த ஜோதிடம் குறித்த பதிவில் செப்டம்பர் மாதம் சிறப்பாக அமைவதற்கு செய்ய வேண்டிய தானம் மற்றும் வழிப்பாட்டு முறைகளை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

செப்டம்பர் மாதம் சிறப்பாக அமைய பரிகாரம்

மேஷ ராசிக்காரர்கள் துவரம் பருப்பை தானமாக தர வேண்டும். அதேபோல் தினமும் காலையில் சூரியனை தரிசனம் செய்து சூரிய வணக்கம் செய்ய வேண்டும். அதோடு இயலும் சமயம் எல்லாம் முருகப்பெருமானின் ஆலயத்திற்கு சென்று அவரை வழிபாட்டு செய்ய வேண்டும். ரிஷப ராசிக்காரர்கள் மொச்சையை தானமாக தர வேண்டும். ஆஞ்சநேயர், பெருமாள், குலதெய்வம் போன்ற தெய்வங்களின் ஆலயத்திற்கு சென்று அவர்களை வழிபாடு செய்வது என்பது சிறப்பு.

- Advertisement -

மிதுன ராசிக்காரர்கள் பச்சைப் பயிறை தானமாக தர வேண்டும். குலதெய்வ வழிபாடு என்பது சிறப்புக்குரிய வழிப்பாடாக திகழ்கிறது. இதோடு பெருமாள் மற்றும் ஆஞ்சநேயரையும் தொடர்ச்சியாக வழிபாடு செய்யும்பொழுது தொட்ட காரியங்கள் வெற்றிகரமாக நடைபெறும். கடக ராசிக்காரர்கள் பச்சரிசியை தானமாக தரவேண்டும். இதே போல் தினமும் இரவில் சந்திர தரிசனம் செய்வது சிறப்பு. மேலும் சூரியன் அஸ்தமனமான பிறகு அதாவது மாலையில் ஆறு மணிக்கு மேல் அருகில் இருக்கும் பெண் தெய்வ ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது நன்மையை தரும்.

சிம்ம ராசிக்காரர்கள் கோதுமையை தானமாக தர வேண்டும். இவர்கள் தினமும் சூரியனை வழிபாடு செய்வது என்பது சிறப்பு. அதோடு மட்டுமல்லாமல் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய நவகிரகங்களில் வீற்றிருக்கும் சூரிய பகவானை வழிபாடு செய்ய வேண்டும். கன்னி ராசிக்காரர்கள் பச்சைப் பயிறை தானமாக தர வேண்டும். இவர்கள் புதன்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமை போன்ற கிழமைகளில் பெருமாள் ஆலயத்திற்கு சென்று பெரும்பாளையும் ஆஞ்சநேயரையும் வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

துலாம் ராசிக்காரர்கள் மொச்சையை தானமாக தர வேண்டும். வெள்ளிக்கிழமை தோறும் அருகில் இருக்கும் பெண் தெய்வ ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது அவர்களின் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும். விருச்சிக ராசிக்காரர்கள் துவரம் பருப்பை தானமாக தர வேண்டும். அதிலும் குறிப்பாக பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு சென்று தங்களால் இயன்ற ன்ற பொருட்களை தானமாக தருவதோடு குலதெய்வத்தையும் வழிபாடு செய்வதன் மூலம் தொட்ட காரியங்கள் வெற்றி அடையும்.

தனுசு ராசிக்காரர்கள் கொண்டைக்கடலையை தானமாக தர வேண்டும். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் நவகிரகங்களில் வீற்றிருக்கும் குரு பகவானை வழிபாடு செய்வது வாழ்க்கையில் சந்தோஷத்தை உண்டாக்கும். மகர ராசிக்காரர்கள் எள் தானம் செய்ய வேண்டும். அதிலேம் குறிப்பாக ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஏதாவது ஒரு ரூபத்தில் எள்ளை தானமாக தருவதன் மூலம் நல்ல காலம் பிறக்கும். பெருமாள் மற்றும் குலதெய்வ வழிபாடு நன்மைகளை உண்டாக்கும்.

- Advertisement -

கும்ப ராசிக்காரர்கள் எள் தானம் செய்ய வேண்டும். அருகில் இருக்கும் வன்னி மரத்தை தங்களால் இயலும் நாட்களில் மூன்று முறை வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும். அதோடு சனிக்கிழமை சனிபகவானை வழிபாடு செய்வதும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. மீன ராசிக்காரர்கள் கொண்டைக்கடலையை தானமாக தர வேண்டும். அரச மர வழிபாடு உயர் பதவியை தரும். வியாழக்கிழமை தோறும் வீட்டில் நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்ய நன்மைகள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:இன்றைய ராசிபலன் – 02 செப்டம்பர் 2024

மேற்சொன்ன தானம் செய்யக்கூடிய பொருட்களை அப்படியே வாங்கி ஆலயத்தில் அன்னதானம் நடைபெறும் இடத்தில் கொடுக்கலாம் அல்லது ஏதாவது ஒரு உணவு பொருளாக செய்து ஏழை எளியவர்களுக்கும் தரலாம். முழுமனதோடு இந்த தானத்தை செய்து தெய்வத்தை வழிபாடு செய்வதன் மூலம் செப்டம்பர் மாதம் சிறப்பு மிகுந்த மாதமாக அமையும்.

- Advertisement -