- Advertisement -
பொது பலன்

செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

சிவப்பு நிறம் ரத்தத்தை குறிக்கிறது. இந்த ரத்தம் புரட்சி, போராட்டங்களின் போது மனிதர்கள் உடலில் இருந்து சிந்துகிறது. ரத்தம், போர், உடலின் வீரிய தன்மை ஆகிய அனைத்திற்கும் காரகனாக நவகிரகங்களில் செவ்வாய் பகவான் இருக்கிறார். இந்த செவ்வாய் பகவான் மார்ச் மாதம் 22 ஆம் தேதி அன்று மாலை 3.30 மணிக்கு “மேஷம்” ராசியிலிருந்து “ரிஷபம்” ராசிக்கு பெயர்ச்சியாடைந்தார். இதனால் 12 ராசியினருக்கும் ஏற்படும் பலன்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்:

- Advertisement -

மேஷ ராசிக்கு 2 ஆம் இடமான ரிஷபத்திற்கு செவ்வாய் பெயர்ச்சியாகியிருப்பதால் திருமண முயற்சிகள் காலதாமதம் ஆகும். தேவைகளுக்காக கடன் வாங்கும் சூழல் உண்டாகும். குழந்தைகள் கல்வியில் பின்தங்கும் நிலை ஏற்படும். குடும்பத்தில் சற்று நிம்மதியின்மை ஏற்படும். பணிபுரிபவர்கள் தாங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள், ஊதிய உயர்வுகள் சற்று தாமதமாகும். வெளிநாடுகள் செல்லும் முயற்சிகளில் தடைகளுக்கு பின் வெற்றி உண்டாகும்.

ரிஷபம்:

- Advertisement -

ரிஷப ராசிக்கு அதன் சொந்த ராசியிலேயே செவ்வாய் பெயர்ச்சியாகியிருப்பதால் குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். திருமணம் போன்ற சுப காரியங்கள் தாமதம் ஆகும். உடலாரோக்கியம் அவ்வப் போது பாதிக்கபடும். பிறருடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. தன வரவுகள் சராசரியாக இருக்கும். பணி புரிபவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்புண்டு.

மிதுனம்:

- Advertisement -

மிதுன ராசிக்கு 12 ஆம் இடமான ரிஷப ராசிக்கு செவ்வாய் உற்றார் உறவினரிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பணம் கொடுக்கல் வாங்கலில் வர வேண்டிய பணம் வந்து சேரும். புதிய முயற்சிகளை சற்று ஒத்தி வைப்பது நலம். மாணவர்கள் கல்வியில் சற்று சிறந்த நிலையை அடைவார்கள். பண வரவு செலவுகளில் சற்று கவனம் அவசியம். தொலைதூரப் பயணங்களால் உடல் மற்றும் மன சோர்வு உண்டாகும். உடல்நலம் நன்றாக இருக்கும்.

கடகம்:

கடக ராசிக்கு 11 ஆம் இடமாகிய ரிஷப ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாகியிருப்பதால் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் புதிதாக தொடங்கும் எத்தகைய முயற்சிகளிலும் சற்று தாமத்திற்க்கு பின்பே வெற்றி கிட்டும். குடும்பத்திலுள்ள பெரியவர்களுடன் மனக்கசப்புகள் ஏற்படலாம். பெண்களின் உடல்நிலை சிறிது பாதிக்கபடக்கூடும். அடிக்கடி பயணங்களும் தீர்த்த யாத்திரைகளையும் மேற்கொள்வீர்கள்.

சிம்மம்:

சிம்ம ராசிக்கு 10 ஆம் இடமாகிய ரிஷப ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாகியிருப்பதால் பெயர்ச்சியாகியிருப்பதால் வேலை தேடி அலைந்தவர்களுக்கு சற்று தடை, தாமதத்திற்கு பின்பு வேலை கிடைக்கும். வீட்டிலும் வெளியிடத்திலும் வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்மை பயக்கும். தொழில் மற்றும் வியாபாரங்களில் சுமாரான நிகர லாபம் இருக்கும். அரசியலிலிருப்பவர்கள் அனைத்திலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். உடல்நலக் குறைபாடுகளும் அவ்வப்போது ஏற்பட்டு விலகும்.

கன்னி:

கன்னி ராசிக்கு 9 ஆம் இடமாகிய ரிஷப ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாகியிருப்பதால் உங்களுக்கு வரவேண்டிய பண வரவுகள் தாமதமாகும். உங்கள் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். வாங்கிய கடன்கள் அனைத்தையும் முழுமையாக அடைத்து மனநிம்மதி பெறலாம்.நேரடி மற்றும் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். சகோதரர்களால் நன்மையுண்டாகும்.

துலாம்:

துலாம் ராசிக்கு 8 ஆம் இடமாகிய ரிஷப ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாகியிருப்பதால் உடலாரோக்கியம் அடிக்கடி பாதிக்கப்படும். கொடுக்கல் வாங்கல் நன்றாக இருக்கும். குடும்பத்தில் சிறு சண்டைகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரங்கள் சராசரியான நிலையில் இருக்கும். எந்த ஒரு விடயமும் சற்று தாமதத்திற்கு பின்பே நிறைவேறும். பெண்கள் வழியில் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சிகம்:

விருச்சிகம் ராசிக்கு 7 ஆம் இடமாகிய ரிஷப ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாகியிருப்பதால் உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். உங்களின் தொழில் வியாபாரகளில் நல்ல லாபம் கிடைக்கும் . பெண்களுக்கு நல்ல வரன்கள் அமையும். சிலருக்கு புத்திர பேறு கிட்டும். உடல்நலம் மிக சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும்.

தனுசு:

தனுசு ராசிக்கு 6 ஆம் இடமாகிய ரிஷப ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாகியிருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். உறவினர்கள், நண்பர்களோடு வம்பு வழக்குகள் ஏற்படலாம். உங்களுக்கு உடலில் நரம்பு சம்பந்தமான குறைபாடுகள் உண்டாகும். வீட்டின் பெண்கள் உடல் நிலை சற்று பாதிப்படையும். நீங்கள் எடுக்கும் அத்தனை முயற்சிகளும் சற்று தாமதத்திற்கு பின்பு வெற்றி பெறும். அரசியலில் இருப்பவர்கள் எதிலும் எச்சரிக்கையோடு இருப்பது அவசியம்.

மகரம்:

மகர ராசிக்கு 5 ஆம் ராசியான ரிஷப ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாகியிருப்பதால் செவ்வாய் பெயர்ச்சியாகியிருப்பதால் உறவினர்கள் மற்றும் வெளியாட்களிடம் மதிப்பும் மரியாதையும் மிகும். தம்பதிகளிடம் ஒற்றுமை மேலோங்கும். புதிய ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை உண்டாகும். தொழில்களில் நல்ல லாபம் ஏற்படும். கலைஞர்களுக்கு வெளிநாடுகள் செல்லும் யோகம் உண்டாகும். விவசாயம் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.

கும்பம்:

கும்ப ராசிக்கு 4 ஆம் இடமாகிய ரிஷப ராசிக்கு அரசிலியலிலிருப்பவர்கள் எதிலும் சற்று பொறுமையோடு இருக்க வேண்டும். எல்லாவற்றிலும் தடைகளும், தாமதங்களும் ஏற்படும். உங்களுக்கு வரவேண்டிய பணவரவுகள் சரியாக வந்து சேரா நிலை இருக்கும். ஒரு உடல்நலத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படலாம். தீக்காயங்கள், ஆயுதங்களால் காயம் ஏற்படுவது போன்றவை ஏற்படலாம் என்பதால் எதிலும் எச்சரிக்கை அவசியம்.

மீனம்:

மீனம் ராசிக்கு 3 ஆம் இடமாகிய ரிஷப ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாகியிருப்பதால் அரசியல்வாதிகள் எதிலும் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நலம். பெண்களால் சிலர் சங்கடங்களை சந்திக்கும் சூழல் ஏற்படும். உடலாரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இம்மாதம் முழுவதும் சாற்று நிம்மதியற்ற நிலை நீடிக்கும். சிலருக்கு கடன்கள் வாங்கும் நிலை உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் இங்கே இருந்தால் என்ன பலன் தெரியுமா?

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sevvai peyarchi palangal march 2019 in Tamil. It is also called as chevvai peyarchi palangal in Tamil.

- Advertisement -
Published by