ஜோதிடம் : உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் மட்டும் இங்கு இருந்தால் சிறப்பான வாழ்கை தான்

sukran

ஒருவரின் ஜாதகத்தில் இருக்கும் 12 கட்டங்களில் லக்னம் எனப்படும் முதல் வீடு அல்லது ராசியை அடிப்படையாக கொண்டே அந்த ஜாதகருக்கு பல விடயங்களுக்கான பலன்கள் கூறப்படுகிறது. பலருக்கும் லக்னம் எனப்படும் முதல் வீட்டிலேயே கிரகங்கள் அமைவதுண்டு. அந்த வகையில் லக்னத்தில் சுக்கிரன் கிரகம் இருப்பதால் ஏற்படும் பலன்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Sukran mantra in tamil

வாழ்க்கை என்பதே சுகங்கள் அனுபவிக்க தான் என்கிற எண்ணம் பலரிடம் இருக்கிறது. ஒரு மனிதன் தனது வாழ்வில் எத்தகைய சுகங்களை அனுபவிக்க வேண்டும் என்றாலும், அவனது ஜாதகத்தில் சுகங்களை அள்ளி வழங்கும் கிரகமாகிய சுக்கிரன் நல்ல நிலையில் இருக்க வேண்டும். இதில் முதல் வீடான லக்னத்தில் சுக்கிரன் இருந்தால் கீழ்கண்ட பலன்கள் ஜாதகர் வாழ்வில் ஏற்படும்.

ஒரு நபரின் ஜாதகத்தில் லக்னம் எனப்படும் முதல் வீட்டிலேயே சுக்கிரன் இருந்தால் அந்த ஜாதகர் கலாரசனை மிகுந்தவராக இருப்பார். லக்னம் ஒரு மனிதனின் தலை பகுதியை பற்றி கூறும் வீடு என்பதால் இந்த வீட்டில் சுக்கிரன் கிரகம் இருக்க பிறந்தவர்கள் பிறரை கவர்ந்திழுக்கும் அழகிய முக அமைப்பை கொண்டவர்களாக இருப்பார்கள். நகைச்சுவையான பேச்சையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இசை, நடனம் போன்றவற்றில் ஆர்வமும், ஒரு சில கலைகளில் தேர்ச்சியும், நிபுணத்துவமும் கொண்டிருப்பார்கள். அடிக்கடி உல்லாச பயணங்களை மேற்கொள்வார்கள்.

sukran

இந்த ஜாதகர்களுக்கு காதல் விடயங்களில் வெற்றி உண்டாகும். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புபவர்கள் ஆவர். புது விதமான ஆடைகள், ஆபரணங்கள் அணிந்து கொள்ளும் விருப்பம் அதிகம் இருக்கும். அழகான வாழ்க்கை துணை அமையப்பெறுவர்கள். அவர்கள் மூலம் இவர்களுக்கு தனலாபம் ஏற்படும். சிலருக்கு ஆடம்பர வீடு கட்டி யோகம் ஏற்படும். சொகுசான வாகனம் யோகம் அமைய பெறுவார்கள். பெண்கள் சம்பாந்தமான பொருட்கள், வாசனை திரவியங்கள் போன்ற தொழில்களில் மிகுந்த லாபம் பெறுவார்கள்.

இதையும் படிக்கலாமே:
சூரிய கிரக தோஷம் போக்கும் பரிகாரம்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Lagnathil sukran in Tamil. It is also called as Lagnathil sukran palangal in Tamil or Sukran palan in Tamil or Jathaga palan in Tamil or Sukkiran graga palan in Tamil.