- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

ஷாம்பு போட்டு தலைக்கு குளிக்கிறவங்க இதையெல்லாம் தெரிஞ்சு வச்சுக்கோங்க. இப்படிப்பட்ட தவறுகளை எல்லாம் நீங்கள் செய்தால் உங்கள் முடி சீக்கிரம் உதிர்ந்து விடும்.

- Advertisement -

இப்போது எல்லாம் நாம் தினமும் தலைக்கு குளித்தால் கூட நல்லது தான். சூழ்நிலை அப்படி மாறிவிட்டது. வெளியில் சிறிது நேரம் சென்று வந்தாலே போதும் ஊரில் உள்ள மொத்த அழுக்கும் நாம் மீது தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் வாரம் இரண்டு முறை தலைக்கு குளிப்பது எல்லாம் சரியாக வராது தான். ஆனாலும் நாம் ஒரு விஷயத்தை மறந்து விட கூடாது. அப்படி நாம் தினமும் தலைக்கு குளிக்கும் போது அதற்காக நாம் பயன்படுத்தும் ஷாம்புவில் எவ்வளவு கெமிக்கல் கலந்து இருக்கும். அதை தினமும் பயன்படுத்தும் போது நம் தலை முடி உதிரத்தானே செய்யும். இப்படி நாம் தொடர்ந்து ஷாம்பு போடுவதால் ஏற்படும் முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்வதற்கான சில வழிமுறைகளை தான் நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

எண்ணெய் தேய்த்து குளிக்கும் வேலைகளில், நாம் அப்படியே ஷாம்பு போடுவதால் தலையில் உள்ள எண்ணெய் பிசக்கு மட்டுமே போகும் ஆனால் அழுக்கு தலையிலே தங்கிவிடும். எனவே நேரடியாக தலையில் ஷாம்பு தேய்க்காமல், சிறிது தண்ணீர் ஊற்றி முடியை அலசிய பிறகு ஷாம்பு போட்டு குளித்தால் அழுக்கு சுத்தமாக போய் விடும். முடியும் அதிகமாக உதிராது.

- Advertisement -

அதே போல் தலை குளிக்கும் முன்பு தலை முடியை நன்றாக சிக்கெடுத்த பிறகு தான் தலை குளிக்க வேண்டும். நாம் அப்படியே தலைக்கு குளிப்பதால் சிக்கு இருக்கும் இடத்தில் உள்ள முடிகள் கொத்தாக வந்து விடும்.

நாம் உபயோகிக்கும் எந்த ஷாம்புவாக இருந்தாலும் நேரடியாக தலையில் அப்ளை செய்யும் போது நீங்கள் எந்த இடத்தில் ஷாம்பை முதலில் அப்ளை செய்கிறீர்களோ, அந்த இடத்தில் உள்ள அழுக்கு மட்டுமே போகும். எனவே ஷாம்பு போட்டு தேய்க்கும் முன் சிறிதளவு தண்ணீரில் கலந்தோ அல்லது சாதம் வடித்த கஞ்சியில் ஷாம்பு கலந்தோ பிறகு உங்கள் தலையில் தேய்க்கலாம். இது போல செய்வதால் முடியும் அதிகமாக உதிராது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: 2 வாரம் ஆனாலும் நீங்கள் வாங்கி கட்டி வைத்த பூ, இப்போதுதான் செடியில் இருந்து பறித்த பூ போல அப்படியே ஃபிரஷா இருக்கும். இப்படி ஸ்டோர் செய்தால்.

நீங்கள் தலைக்கு குளிக்கும் போது அவசர அவசரமாக தேய்த்து வேகமாக தண்ணீர் ஊற்றும் போது நீங்களே உங்கள் முடி உதிர காரணமாகி விடுவீர்கள். மெதுவாக ஷாம்பு போட்டு தேய்த்த பிறகு மெதுவாக தண்ணீர் விட்டு தான் முடியை அலச வேண்டும்.

அதே போல் வாரம் முழுவதும் ஷாம்பு போட்டு குளிக்கும் போது நம் தலையில் உள்ள இயற்கையான எண்ணெய் பசையை நாமே எடுத்து விடுகிறோம். அது போன்று இல்லாமல் வாரத்துக்கு இரண்டு நாள் ஷாம்பு போட்டு குளித்து விட்டு மற்ற நாட்களில் கண்டிஷனர் அல்லது சீயக்காய் கொண்டு முடியை கசக்கலாம் ஷாம்புவை வாரத்தின் அனைத்து நாளும் போட கூடாது. இந்த குறிப்புகளை தெரிந்து கொண்டு உங்களின் முடி உதிர்வை கட்டுப்படுத்துங்கள்.

- Advertisement -