- Advertisement -

நாளை 23-5-2024 இரவு 7:48க்கு பௌர்ணமி முடிவடைகிறது. இந்த பௌர்ணமி முடிவடிவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக சோடசக்கலை நேரம் ஆரம்பிக்கிறது. சோடச கலை நேரம் என்பது 2 மணி நேரம் இருக்கும். அதனால் பௌர்ணமி முடிந்து அடுத்து வரக்கூடிய பிரதமை திதியிலும் ஒரு மணி நேரம் சோடசக்கலை நேரம் இருக்கும். அதாவது மாலை 6:48 மணியிலிருந்து 8:48 மணி வரை சோடசக்கலை நேரம் இருக்கும். இந்த நேரத்தில் நாம் வேண்டிய வரத்தை நாம் பெறுவதற்கு பச்சரிசி வைத்து எப்படி பரிகாரம் செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சோடச கலை நேரம் என்பது மிகவும் முக்கியமான நேரம். இந்த நேரத்தில் தான் நம்முடைய சித்தர்கள் தங்களுடைய வரங்களையும் சக்திகளையும் பெற்றார்கள் என்று கூறப்படுகிறது. அந்த அளவுக்கு மிகவும் முக்கியத்துவம் மிகுந்ததாக திகழ்கிறது. இந்த சோடச கலை நேரத்தில் நாமும் நாம் வேண்டிய வரத்தை பெற முடியும். அதை எப்படி செய்வது என்று பார்ப்போமா?

- Advertisement -

சோடசக்கலை ஆரம்பிக்கும் நேரத்தில் நாம் வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக நம் கையால் ஒரு கைப்பிடி அளவு பச்சரிசியை எடுத்து ஒரு தாம்பாள தட்டில் வைத்து பரப்பி பூஜை அறையில் வைக்க வேண்டும். பிறகு ஒரு வெள்ளை நிற பேப்பரை எடுத்து அதில் பச்சை நிறம் பேனாவால் நமக்கு என்ன வேண்டுமோ அதை எழுத வேண்டும். நேர்மறையான சொற்களை பயன்படுத்தி மட்டுமே எழுத வேண்டும்.

உதாரணமாக கடன் அடைய வேண்டும் என்று எழுதாமல் பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று எழுத வேண்டும். நோய் சரியாக வேண்டும் என்று எழுதாமல் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று எழுத வேண்டும். பிறகு அந்த பேப்பரை சுருட்டி மஞ்சள் நிற நூலால் கட்டி அந்த பச்சரிசியின் மேல் வைத்து விட வேண்டும். 2 மணி நேரம் பச்சரிசி மேல் அந்த சீட்டு இருக்கட்டும். இரண்டு மணி நேரம் கழித்து அதாவது சோடச கலை நேரம் முடிந்தவுடன் அந்த சீட்டை எடுத்து அதில் பச்சை கற்பூரத்தை வைத்து கொளுத்தி விட வேண்டும்.

- Advertisement -

தாம்பாலத்தில் வைத்த பச்சரிசியை மிக்ஸி ஜாரில் போட்டு ஒன்றிரண்டாக உடைத்து எறும்புகள் இருக்கும் இடத்தில் எறும்புகளுக்கு உணவாக போட்டு விட வேண்டும். வேண்டுதல் எழுதி வைத்த சீட்டை சோடசக்கலை நேரம் முடிந்த உடனேயே எரித்த விட வேண்டும். பச்சரிசியை நம்முடைய நேரத்திற்கு ஏற்றார் போல் நாளையோ அல்லது நாளை மறுதினமும் ஒன்றிரண்டாக உடைத்து எறும்புகளுக்கு போடலாம்.

இந்த இரண்டு மணி நேரத்தில் ஏதோ ஒரு ஐந்து நொடி மட்டும்தான் நமக்கு நாம் வேண்டிய வரம் கிடைக்கும் என்பதால் தான் இந்த இரண்டு மணி நேரமும் அந்த சீட்டை பச்சரிசியின் மேல் வைத்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: பண வரவு அதிகரிக்க பௌர்ணமி பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த தாந்திரீக பரிகாரத்தை நாளை வரக்கூடிய சோடச கலை நேரத்தில் நம்பிக்கையுடன் செய்து வேண்டிய வரத்தை பெறுங்கள்.

- Advertisement -