- Advertisement -
சமையல் குறிப்புகள்

இப்படிக்கூட ஈஸியா ருசியா குழம்பு வைக்கலாமா? இத்தனை நாட்களாக இந்த ரெசிபி தெரியாமல் போச்சே.

- Advertisement -

சமையல் என்பது ஒரு கலை. அதை ரசித்து ஆர்வமாக பக்குவமாக செய்தால், நிச்சயமாக நாம் செய்யக்கூடிய சமையல் எல்லோருக்கும் பிடிக்கும். சமையலில் உப்பு காரம் சேர்ப்பது எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு ஆர்வத்துடன் சமைக்க வேண்டும் என்பதும் முக்கியமான ஒரு விஷயம் தான். உங்கள் சமையலும் ருசிக்க வேண்டுமென்றால், ஆர்வத்தோடு பாசத்த்தை சேர்ந்து சமைத்து பாருங்கள். சரி இப்போது சுலபமாக வைக்கக்கூடிய ஒரு குழம்பு ரெசிபியை தெரிஞ்சுக்கோங்க. ஆர்வத்துடன் பாசத்துடன் உங்க வீட்ல இருக்கிறவங்களுக்கு சமைச்சுக் கொடுத்துப் பாருங்க. நிச்சயம் ருசியா தான் இருக்கும்.

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தோலுரித்த சின்ன வெங்காயம் 10 பல், பூண்டு தோலுரித்து – 4 பல், வரமிளகாய் – 3, சாம்பார் பொடி – 2 ஸ்பூன், இந்த பொருட்களை சேர்த்து தண்ணீர் எதுவும் ஊற்றாமல் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து அந்த விழுதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளவேண்டும். அதில் 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, போட்டு தாளித்து மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை இந்த எண்ணெயில் போட்டு பச்சை வாடை போக வதக்கி விட வேண்டும்.

அதன்பின்பு குழம்புக்கு தேவையான அளவு தண்ணீரை கடாயில் ஊற்றி மசாலா பொருட்களை தண்ணீரில் கரைத்து விட்டு, தேவையான அளவு உப்பு போட்டு, கலந்து விட்டு கொள்ளுங்கள். 1 ஸ்பூன் அளவு புளியை தண்ணீரில் போட்டு கரைத்து புளி கரைசல் தண்ணீரை இந்த குழம்பில் ஊற்றி பச்சை வாடை போக கொதிக்க வைக்கவேண்டும்.

புளித் தண்ணீர் நிறைய சேர்க்கக்கூடாது. லேசான புளிப்பு சுவை இருந்தால் மட்டும் போதும். கொதித்து எண்ணெய் பிரிந்து, குழம்பு சுண்டி வரும் வரை இந்த குழம்பை கொதிக்க விட்டு, அடுப்பை அணைத்துவிட்டு இட்லி தோசைக்கு சுட சுட சாதம் எதற்கு வேண்டுமென்றாலும் பரிமாறிக்கொள்ளலாம். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா உங்க வீட்ல மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -