- Advertisement -

பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய சிவன் ஸ்லோகம்

- Advertisement -

நாளைய தினம் 8-6-2025 ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து பிரதோஷமும் வந்திருக்கிறது. இந்த நாளில் சிவனை வழிபாடு செய்வது நம்முடைய கஷ்டங்களை விரைவாக போக்கிவிடும். அதிலும் குறிப்பாக சூரிய திசை நடப்பவர்கள், ஜாதக கட்டத்தில் சூரியனால் ஏதேனும் தோஷம் இருந்தால், அவர்கள் எல்லாம் கட்டாயம் நாளைய தினம் ஈசனை வழிபாடு செய்ய வேண்டும்.

ஜாதக கட்டத்தில் சூரிய கிரகத்தினால் பிரச்சனைகள் இருந்தால், வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் அதிகமாக இருக்கும். வேலை கிடைக்காமல் தேடிக் கொண்டிருப்பவர்கள், வேலையில் சிக்கலில் சிக்கி இருப்பவர்கள் எல்லாம் நாளைய தினம் சிவபெருமான் வழிபாட்டை தவறாமல் மேற்கொள்ள வேண்டும். இருக்கும் வேலையில் முன்னேற்றம் இல்லை என்றாலும் நாளை ஈசனை வழிபடலாம்.

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை ராகுகால நேரம். இதே நேரத்தில் தான் பிரதோஷ வழிபாடும் மேற்கொள்வோம். ராகு கால நேரத்தையும் பிரதோஷ நேரத்தையும் சேர்த்து சிவனை வழிபாடு செய்யும்போது, கஷ்டங்கள் விரைவில் சரியாகும் என்பதும் ஒரு நம்பிக்கை. ஆகவே நாளைய தினத்தை யாரும் பிரதோஷ வழிபாட்டை தவற விடாதீர்கள். நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நம்மில் நிறைய பேருக்கு விடுமுறை இருக்கும். இந்த நாளை பயன்படுத்திக்கொண்டு பிரதோஷ நேரத்தில் கோவிலுக்கு சென்று சிவபெருமானை வழிபடுங்கள்.

சிவபெருமானை வழிபாடு செய்வதற்கு கோடான கோடி வழிகள் இருக்கிறது. உண்மையான பக்தியோடு சிவ சிவ என்று சொல்லி உங்கள் பக்தியை சிவபெருமானிடம் சமர்ப்பணம் செய்தாலே, சிவனின் ஆசி முழுமையாக கிடைத்துவிடும். இருந்தாலும் ஒரு சிறப்பு வழிபாடு உங்களுக்காக. கொஞ்சம் உதிரி புஷ்பம் கொஞ்சம் வில்வ இலைகளை ஒன்றாக கலந்து ஒரு தாம்பல தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு ஈசனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பின் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை சொல்லி சிவபெருமானை உதிரி புஷ்பங்களால் வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தால் சிவபெருமானின் மனம் உடனடியாக குளிர்ந்து, நீங்கள் கேட்ட வரங்களை உடனடியாக உங்களுக்கு கொடுத்து விடுவான் அப்பன ஈசன். சிவனைப் போற்றி பாடக்கூடிய அந்த ஸ்லோகம் இதோ இந்த பதிவில் உங்களுக்காக.

சிவன் சுலோகம்

1. ஓம் சிவசிவ சிவனே சிவபெருமானே போற்றி போற்றி
விரைவினில் வந்தருள் விமலா போற்றி போற்றி

- Advertisement -

2. ஓம் மஹா, ஈசா மகேசா போற்றி போற்றி
மனதினில் நிறைந்திடும் பசுபதியே போற்றி போற்றி

3. ஓம் மூவுலகிற்கதிபதியே முதல்வா போற்றி போற்றி
மூவா இளமையருளும் முக்கண்ணா போற்றி போற்றி

4. ஓம் ஐந்தெழுத்தின் உட்பொருளே போற்றி போற்றி
திரு ஐயாறமர்ந்த குருபரனே போற்றி போற்றி

5. ஓம் சத்தியமே சத்தியத்திற்கோர் திருமுகமே போற்றி போற்றி
ஓம் உமையொருபங்கா போற்றி போற்றி

6. அதற்கு மோர்த்திருமுகமே போற்றி போற்றி

7. ஓம் உலகமே நாயகனே லோக நாயகா போற்றி போற்றி
அகோரத்திற்கோர் திருமுகமே போற்றி போற்றி

8. ஓம் உருத்திர பசுபதியே போற்றி போற்றி

9. ஓம் உருத்திர தாண்டவ சிவனே போற்றி போற்றி

10. ஓம் ஓம் அகோர மூர்த்தியே லிங்கமே போற்றி போற்றி
அதற்கு மோர்திருமுகமே போற்றி போற்றி

11. ஓம் உமையே அம்பிகையே அம்பிகையின்
பாகா போற்றி போற்றி
அம்பிகைக்கோர் முகமே அம்பிகாபதியே போற்றி போற்றி

12. ஓம் பஞ்சாட்சரனே பஞ்சமுகங் கொண்ட
பரமனே போற்றி போற்றி

13. ஓம் சாம்பசிவ சதா சிவனே
சத்குருவே போற்றி போற்றி

14. ஓம் ஜடையுடைய ஜடாதரனே
ஜம்பு நாதா போற்றி போற்றி

15. ஓம் சந்திரனை சூரியனை நெருப்பைக்
கொண்ட முக்கண்ணா போற்றி போற்றி

16. ஓம் கங்காதரனே கங்களா போற்றி போற்றி

17. ஓம் இடபத்தூர்ந்து செல்லும்
இறைவா போற்றி போற்றி
ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ

வீட்டில் சிவலிங்கம் இல்லையென்றாலும் அண்ணாமலையாரின் திருவுருவப்படத்திற்கும் இந்த அர்ச்சனை செய்யலாம். ஏற்றி வைத்திருக்கும் தீபம் தான் ஈசன் என்று நினைத்து இந்த மந்திரத்தை சொல்லலாம் தவறு ஒன்றும் கிடையாது. நீங்கள் கோவிலுக்கு சென்றால் கோவிலில் அமர்ந்து இந்த போற்றி பாடலை நாளை பிரதோஷ நேரத்தில் ஒரே ஒரு முறை படியுங்கள். கோடான கோடி நன்மைகள் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: எதிரிகளை ஒதுக்கி வைக்க சுவிட்ச் வோர்ட்

தீர்க்க முடியாத சிக்கல்கள் சரியாகும். உங்களுடைய மன குழப்பம் தீரும். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். இப்படி பலதரப்பட்ட நன்மைகளை ஈசன் உங்களுக்கு வரமாக கொடுப்பார். தவற விடாதீங்க. இந்த அற்புதமான பாடலை இன்று உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மனமகிழ்ச்சியுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -