- Advertisement -

சொந்தமாக இடம் வாங்க வேண்டும், வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு செவ்வாய் பகவானின் அருள் என்பது பரிபூரணமாக வேண்டும். அப்படி செவ்வாய் பகவானின் அருளை பெற வேண்டும் என்றால் செவ்வாய்க்கிழமை அன்று வழிபாடு செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை அன்று முருகப்பெருமானை எப்படி சொந்த வீடு கட்டுவதற்காக நாம் வழிபடுவோமோ அதே போல் செவ்வாய்க்கிழமை அன்று வாராகி அம்மனை எந்த முறையில் வழிபட்டால் சொந்த வீடு கட்ட முடியும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பார்ப்பதற்கு ஆக்ரோஷமான தெய்வமாக திகழக்கூடிய வாராகி அம்மனை முழு மனதோடு நம்பி வழிபட ஆரம்பித்தோம் என்றால் நம்மை குழந்தை போல பார்த்துக் கொள்ளும் தெய்வமாக தான் அவள் திகழ்வாள். முழு நம்பிக்கையுடன் யாருக்கும் எந்த தீங்கும் விளைவிக்காமல் இருப்பவர்களுக்கு வராகி அம்மன் ஒரு குழந்தையாகவே திகழ்வாள். அப்படிப்பட்ட வாராகி அம்மனை வீட்டு பூஜை அறையிலோ அல்லது கோவிலிலோ எப்படி வழிபட்டால் சொந்த வீடு குடியேறும் யோகம் உண்டாகும் என்று பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். மாலை 6:00 மணிக்கு தான் செய்ய வேண்டும். வீட்டில் வராகி அம்மனின் படம் இருந்தால் அந்த படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அப்படி படம் இல்லாத பட்சத்தில் ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபமேற்றி அதில் வாராகி அம்மனை ஆவாகனம் செய்து கொள்ளலாம். யார் இந்த பூஜையை செய்கிறார்களோ அவர்கள் தங்களுடைய நெற்றியில் அரகஜாவை வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு வாராகி அம்மனுக்கு நெய்வேத்தியமாக பூமிக்கு அடியில் கிடைக்கும் கிழங்கு வகைகளில் ஏதாவது ஒன்றை வைக்கலாம் அல்லது மாதுளம் பழ முத்துகளில் தேனூற்றி வைக்கலாம் அல்லது பானகம் வைக்கலாம். இவற்றில் ஏதாவது ஒன்றை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். வாராகி அம்மனுக்கு சிவப்பு நிற மலர்களைக் கொண்டு அலங்காரம், அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு வாராகி அம்மனுக்குரிய மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

மந்திரம்

ஓம் குண்டலினி புரவாசினி,
சண்ட முண்ட விநாசினி,
பண்டிதஸ்ய மனோன்மணி,
வாராஹீ நமோஸ்துதே!
அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி,
அஷ்டதாரித்ரய நாசினி,
இஷ்ட காமப்ரதாயினி,
வாராஹீ நமோஸ்துதே!

இந்த மந்திரத்தை மூன்று முறை கூறிவிட்டு வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். பிறகு நெய்வேத்தியமாக வைத்த பொருட்களை பிரசாதமாக வழங்கலாம். இதே முறையில் கோவிலில் இருக்கும் வராகி அம்மனுக்கு தீபம் ஏற்றி வைத்துவிட்டு நெய்வேத்தியம் வைத்து இந்த மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்க வேண்டும். பிறகு அந்த நெய்வேத்தியத்தை கோவிலுக்கு வருபவர்களுக்கு பிரசாதமாக தந்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: மகாலட்சுமி வீட்டிற்கு வர பரிகாரம்

இந்த வழிபாட்டை தொடர்ந்து ஒன்பது செவ்வாய்க்கிழமைகள் செய்துவர சொந்த வீடு அமைவதில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கி விரைவிலேயே சொந்த வீட்டில் குடியேறும் யோகம் உண்டாகும்என்று சொல்ல படுகிறது. நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறுங்கள்.

- Advertisement -