- Advertisement -

சொந்தமாக நிலம் வீடு வாங்க வழிபாடு

- Advertisement -

எலி வலையானாலும் தனி வலையே மேல் என்று கூறி கேள்விப்பட்டு இருப்போம். எலிக்கே தனியாக ஒரு வீடு வேண்டும் என்று கூறும் பொழுது நம்மைப் போன்ற மனிதர்களுக்கு சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பான முறையில் இருக்கும் அல்லவா? அப்படி சொந்த வீடு வாங்க வேண்டும் அல்லது சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறோம், அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்கிறோம், இருப்பினும் அந்த முயற்சிகள் நமக்கு வெற்றி அடையாமல் ஏதாவது ஒரு தடைகளோ தடங்களோ வந்து சொந்தமாக வீடு வாங்குவதற்கோ நிலம் வாங்குவதற்கோ பிரச்சினையாக வந்து அமையும் பட்சத்தில் நாம் முருகப் பெருமானையும் வராக மூர்த்தியும் வழிபாடு செய்யலாம். இவர்கள் இருவரையும் எந்த முறையில் வழிபாடு செய்தால் சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டாகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

சொந்தமாக நிலம் வீடு வாங்க வழிபாடு

நிலத்திற்கு காரணமாக திகழக் கூடியவர் செவ்வாய் பகவான். அதனால் செவ்வாய் பகவானுக்குரிய அதிதேவதையான முருகப்பெருமானை நாம் வழிபாடு செய்யும் பொழுது நிலம் தொடர்பான வேண்டுதல்கள் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. அதே போல் தான் பாதாளத்தில் இருக்கக்கூடிய பூமியை காப்பாற்றி அதற்குரிய இடத்தில் கொண்டு வந்து வைத்தவராக தான் வராக மூர்த்தி திகழ்கிறார். அதனால் வராக மூர்த்தியை நாம் வழிபாடு செய்தாலும் நிலம் தொடர்பான வேண்டுதல்கள் நிறைவேறும். இவர்கள் இருவரையும் மிகவும் எளிமையாக வழிபாடு செய்யும் முறையை இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

என்னதான் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்றால் செவ்வாய் பகவானின் அருள் வேண்டும் என்றாலும் குரு பகவானின் அருளும் பரிபூரணமாக இருந்தால் தான் ஒருவரால் சொந்த வீடு வாங்க முடியும். அப்படி செவ்வாய் பகவானுக்குரிய அதிதேவதியான முருகப்பெருமான் குருவாக வீற்றிருக்கக்கூடிய ஸ்தலம் தான் திருச்செந்தூர். நம்மால் இயன்ற சமயம் திருச்செந்தூருக்கு சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபாடு செய்யும்பொழுது அங்கு இருக்கக்கூடிய குரு பகவானுக்கு மஞ்சளால் அர்ச்சனை செய்வது, தாமரை பூ மாலை வாங்கி சாற்றுவது போன்றவற்றை செய்யலாம். இதை செய்வதற்கு முன்பாக கடலில் நாம் நீராடும் வழக்கத்தை வைத்திருப்போம் அல்லவா? அவ்வாறு நீராடி முடித்துவிட்டு கடல் மண்ணை எடுக்க வேண்டும்.

கால் படாத மண்ணாக இருக்க வேண்டும். எப்படி என்றால் கடல் அலை கரை வந்த பிறகு உள்ளே செல்லும் அல்லவா? அப்பொழுது இருக்கக்கூடிய மண்ணை ஒரு கைப்பிடி அளவு முருகப்பெருமானின் நாமத்தைக் கூறி எடுத்து ஒரு மஞ்சள் நிற துணியில் கட்டி வைத்துக் கொள்ளுங்கள். இந்த மண்ணோடு முருகப்பெருமானையும் குரு பகவானையும் வழிபாடு செய்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வரவேண்டும். வீட்டிற்கு வந்ததும் கடலில் இருந்து எடுத்த மண்ணுடன் ஒரு விரலி மஞ்சள் வைத்து ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் முருகப்பெருமானாக பாவித்து வழிபாடு செய்யும்பொழுது சொந்த வீடு அமைவதற்குரிய முயற்சிகள் வெற்றி அடையும்.

- Advertisement -

இதே போல் செவ்வாய்க்கிழமை அன்று பெருமாளின் படத்திற்கு முன்பாக ஒரு சிறிய வாழை இலையை விரித்துக் கொள்ளுங்கள். அதில் அரைத்த சந்தனத்தை எடுத்து வைக்க வேண்டும். பிறகு இட்லி பூவை எடுத்து அந்த சந்தனத்தில் தொட்டு முதலில் பெருமாளுக்கு பொட்டு வைக்க வேண்டும். பிறகு அதே இட்லி பூவை எடுத்து சந்தனத்தில் தொட்டு நம்முடைய நெற்றியிலும் கைகளிலும் தடவி விட்டு பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றி வைத்து பானகத்தை நெய்வேத்தியமாக வைத்து சொந்த வீடு அமைய வேண்டும் என்ற வேண்டுதலை முன் வைத்தால் பெருமாள் வராக மூர்த்தியாக மாறி நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றுவார்.

இதையும் படிக்கலாமே: புரட்டாசி மாதம் புதன்கிழமை பரிகாரம்

தங்களுடைய இஷ்ட தெய்வம் எதுவோ அதற்கு ஏற்றார் போல் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வேண்டுதல் விரைவில் நிறைவேறும் அந்த வகையில் சொந்த வீடு அமைவதற்கு முருகப்பெருமானையும் வராக மூர்த்தியையும் இந்த முறையில் வழிபாடு செய்யலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -