- Advertisement -
சமையல் குறிப்புகள்

இந்த ஸ்நாக் பாக்கும்போதே சாப்பிடணும்னு தோணுதுல! உங்க வீட்ல ரவை இருந்தா போதும். 10 நிமிஷத்துல இந்த ஸ்னாக்ஸ் செஞ்சிடலாம்.

- Advertisement -

ஒரே மாதிரி ஸ்நாக்ஸை எத்தனை நாட்கள் தான் சாப்பிடுவது. ஒரு வித்தியாசம் வேண்டாமா. சுலபமான முறையில் உங்கள் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே இந்த கிரிஸ்பி பாலை எப்படி செய்வது என்பதை பற்றி தான் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த ஸ்நாக் செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க. யம்மி ஸ்னாக்ஸ் செய்வது எப்படி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ஒரு மீடியம் சைஸ் உருளைக்கிழங்கை தண்ணீரில் போட்டு, உப்பு போட்டு, வேகவைத்து தோலுரித்து மசித்து தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். அல்லது கடாயும் வைத்துக் கொள்ளலாம். அதில் 1 கப் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவேண்டும். அந்த தண்ணீரில் உப்பு தேவையான அளவு, மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன், எண்ணெய் – 1/2 ஸ்பூன் சேர்த்து முதலில் நன்றாக கொதிக்க விட்டு விட வேண்டும். 1 – கப் ரவைக்கு, 1 – கப் தண்ணீர் சரியான அளவு.

தண்ணீர் நன்றாக கொதித்து வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளுங்கள். 1 கப் ரவையை இந்த தண்ணீரில் கொஞ்சம் கொஞ்சமாக கொட்டிக் கொண்டே, ஒரு கையில் ரவையை கட்டி படாமல் கிளறிவிட வேண்டும். ரவை தண்ணீரை முழுவதும் உறிஞ்சிய உடன், அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, இரண்டு நிமிடங்கள் கரண்டியை வைத்து ரவையை கலந்து விடுங்கள். அதன் பின்பு அடுப்பை அணைத்து விட்டு, ஒரு மூடி போட்டு அப்படியே ரவையை அந்த சூட்டிலேயே வைத்து விடுங்கள்.

- Advertisement -

ஐந்து நிமிடங்கள் பொறுத்து ரவை நன்றாக ஆறியதும், கை பொறுக்கும் சூடு வந்தவுடன், வேக வைத்து தயாராக வைத்திருக்கும், உருளைக்கிழங்கை இந்த ரவையோடு சேர்த்து, உங்கள் கையை வைத்து இந்த மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

உருளைக் கிழங்கு சேர்த்து பிசைந்து தயாரான இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு, இந்த உருண்டைகளை எண்ணெயில் போட்டு பக்குவமாக பொன்னிறம் வரும் வரை பொரித்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது ரவை பால்ஸ் தயார். இது அப்படியே இருக்கட்டும்.

ஒரு சிறிய கிண்ணத்தில் 1/2 ஸ்பூன் மிளகாய்த் தூள், 1/4 ஸ்பூன் உப்பு, 1/2 ஸ்பூன் சாட் மசாலா, போட்டு இந்த மூன்று பொடியையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த மசாலா பொடியை பொரித்து வைத்திருக்கும் ரவை பாலின் மேலே தூவி, நன்றாக கலந்து விட்டு அப்படியே பரிமாறினால் சூப்பரான ஸ்நேக் தயார். அதாவது மசாலா பொருட்கள் சேர்த்த ‘கிரிஸ்பியான ரவை பால்ஸ்’ உங்களுக்கு கிடைத்திருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். ட்ரை பண்ணி பாருங்க.

பின்குறிப்பு: தண்ணீரை கொதிக்க வைக்கும் போது ரவைக்கு தேவையான உப்பை சரியான அளவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தண்ணீரில் மிளகாய் தூளுக்கு பதிலாக, மிளகு தூளை சேர்த்தும் கொதிக்க வைத்துக் கொள்ளலாம். ரவை வெந்தவுடன் உருளைக்கிழங்கை சேர்த்து மாவு பிசையும்போது, அதில் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை, வெங்காயம், இவைகளையும் சேர்த்து கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம் தான்.

- Advertisement -