- Advertisement -
சமையல் குறிப்புகள்

முட்டைகோசுடன் இப்படி மசாலா சேர்த்து சுவையான வறுவல் செய்து கொடுத்து பாருங்கள். இதை பிடிக்காதவர்கள் கூட கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்

- Advertisement -

பொதுவாகவே முட்டைகோஸில் துவரம்பருப்பு சேர்த்துக் கூட்டு அல்லது பொரியல் செய்வது தான் வழக்கமாக இருக்கும். இப்படி செய்யும் முட்டை கோஸில் ஒருவித பச்சை வாசனை இருக்கும். எனவே பலருக்கும் இதன் சுவை பிடிப்பதில்லை. ஆனால் இதில் உடலுக்குத் தேவையான நீர்ச் சத்து அதிகம் இருக்கிறது. உடல் ஆரோக்கியத்திற்கு பலவித நன்மைகளை கொடுக்கிறது. எனவே வாரத்திற்கு ஒரு முறையாவது முட்டைகொஸை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். முட்டை கோஸை எப்படி சமைத்தாலும் அதில் உள்ள பச்சை வாசனை காரணமாக பலரும் இதனை தவிர்த்து வருகின்றனர். எனவே இதனுடன் மசாலாக்கள் சேர்த்து சுவையான வறுவல் செய்து கொடுத்து பாருங்கள். இந்த வருவல் மிகவும் ருசியாகவும், சுவையாகவும் இருக்கும். இதனை முட்டைகோஸில் செய்தது என்று எவரும் கண்டு பிடிக்க முடியாது. வாருங்கள் இப்படி அசத்தலான முட்டைகோஸ் வருவலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
முட்டைகோஸ் – அரை கிலோ, கடலை மாவு – அரை கப், அரிசி மாவு – கால் கப், இஞ்சி பூண்டு விழுது – அரை ஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன், ஒரு தனி மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், எலுமிச்சை பழம் – ஒன்று, எண்ணெய் – கால் லிட்டர்.

- Advertisement -

செய்முறை:
முதலில் முட்டைகோஸை பொடியாக நறுக்கி, சுடு தண்ணீரில் சேர்த்து, அலசி வைக்க வேண்டும். பின்னர் ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாயகன்ற பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் வெட்டி வைத்துள்ள முட்டை கோஸை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள் மற்றும் முக்கால் ஸ்பூன் உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக பிசைந்து கொள்ளவேண்டும். பின்னர் இதனுடன் அரை ஸ்பூன் கரம் மசாலாத்தூள் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இவற்றுடன் ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக அரிந்து, சாறு பிழிந்து, அதனையும் சேர்த்து கலந்து விடவேண்டும். பிறகு இதனுடன் லேசாக தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு தட்டு போட்டு மூடி 20 நிமிடத்திற்கு இந்த கலவையை அப்படியே ஊறவிட வேண்டும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, கால் லிட்டர் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள முட்டை கோஸ் கலவையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து எண்ணெயில் உதிரியாக சேர்க்கவேண்டும். சிறிது நேரத்தில் இவை நன்றாக சிவந்ததும் திருப்பிப் போட்டு எண்ணெயை வடிகட்டி முட்டை கோஸை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -