- Advertisement -
சமையல் குறிப்புகள்

இப்படி மசாலா அரைத்து வாழைக்காய் பொடிமாஸ் செய்து கொடுத்தால் வேண்டாம் என்று சொல்பவர்களும் தட்டாமல் வாங்கி சாப்பிடுவார்கள்

- Advertisement -

வாழைக்காய் வைத்து செய்யக்கூடிய உணவு என்றால் அவை வாழைக்காய் வறுவல் மற்றும் வாழைக்காய் கூட்டு. இவை இரண்டைத் தான் அனைவரது வீட்டிலும் அடிக்கடி செய்வதுண்டு. ஆனால் வாழைக்காயை பலரும் தவிர்த்து வருகின்றனர். இவற்றை சாப்பிடுவதன் மூலம் சிலருக்கு வாய்வு தொல்லை ஏற்படுவது மற்றும் கைகால் வலி ஏற்படுவதே இதன் காரணமாகும். ஆனால் ஒருமுறை இப்படி மசாலா அரைத்து செய்து சாப்பிட்டு பாருங்கள். இப்படிப்பட்ட வாய்வு பிரச்சனைகள் எதுவும் வந்து விடாது. இதன் சுவையை வாழைக்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இது அருமையான சுவையில் இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
வாழைக்காய் – 3, பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 2, பூண்டு – 3 பல், மிளகு – ஒரு ஸ்பூன், துவரம்பருப்பு – ஒரு ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், சோம்பு – கால் ஸ்பூன், தனியா – அரை ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன், தேங்காய் – 2 சில்லு, உப்பு – முக்கால் ஸ்பூன், எண்ணெய் – 3 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் மூன்று வாழைக்காய்களை காம்பு மற்றும் அதன் அடிப் பகுதியை மட்டும் வெட்டி எடுத்துவிட்டு, ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி, அதனுள் இந்த வாழைக் காய்களை வைத்து, கடாயை அடுப்பின் மீது வைத்து வேக வைக்க வேண்டும். இவை 10 நிமிடம் நன்றாக வெந்ததும் வாழைக்காயை ஆற வைத்து அதன் மேல் உள்ள தோலை மட்டும் நீக்கி வைக்க வேண்டும்.

பின்னர் காய் துருவலை பயன்படுத்தி இந்த வாழைக்காய்களை பொடியாக துருவிக் கொள்ள வேண்டும். அதன் பின் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, அதில் கடலைப்பருப்பு மற்றும் மிளகு சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். பின்னர் இவற்றுடன் சோம்பு, சீரகம், தனியா இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர் ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் வெங்காயம் பூண்டு மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி எண்ணெயில் சேர்த்து வதக்க வேண்டும்.

அதன் பின்னர் துருவி வைத்துள்ள வாழைக்காய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கிய பின் அவற்றுடன் முக்கால் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா பொடியை இவற்றுடன் சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் இறுதியாக இரண்டு சில்லு தேங்காயை நன்றாக துருவி இவற்றுடன் சேர்த்து கலந்து விட்டு அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

- Advertisement -