- Advertisement -
பொது பலன்

ஜோதிடம் : ஆகஸ்ட் மாத சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள் – 2019

நவகிரகங்களில் முழுமையான சுப கிரகமான குரு பகவானுக்கு அடுத்தபடியாக முக்கால் பங்கு சுப கிரகமாக கருதப்படுபவர் “சுக்கிர பகவான்” ஆவார். இந்த சுக்கிர பகவான் ஆகஸ்ட் மாதம் 16 ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 08.52 மணியளவில் “கடக” ராசியிலிருந்து “சிம்ம” ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். இந்த பெயர்ச்சியால் 12 ராசியினருக்கும் ஏற்படக்கூடிய பலன்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்:

- Advertisement -

மேஷ ராசிக்கு ஐந்தாம் வீடான சிம்ம ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சியாகியிருப்பதால் உங்களுக்கு வரவேண்டிய பண வரவுகள் தாமதமாகும். உங்கள் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். வாங்கிய கடன்கள் அனைத்தையும் முழுமையாக அடைத்து மனநிம்மதி பெறலாம். கணவன் மனைவி இடையே சிறிய மனஸ்தாபங்கள் எழலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சமுதாயத்தால் மதிக்கப்படும் நிலை உண்டாகும்.

ரிஷபம்:

- Advertisement -

ரிஷப ராசிக்கு 4 ஆம் வீடான ஆம் இடமான சிம்ம ராசிக்கு சுக்கிரன் உற்றார், உறவினரிடம் மதிப்பு ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் வர வேண்டிய பணம் வந்து சேரும். புதிய முயற்சிகளை சற்று ஒத்தி வைப்பது நலம். மாணவர்கள் கல்வியில் சற்று மந்த நிலையை அடைவார்கள். பண வரவு செலவுகளில் சற்று கவனம் அவசியம். தொலைதூரப் பயணங்களால் வெற்றி உண்டாகும். உடல்நலம் நன்றாக இருக்கும்

மிதுனம்:

- Advertisement -

மிதுன ராசிக்கு 3 ஆம் இடமான சிம்ம ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சியாகியிருப்பதால் உங்களின் தொழில் வியாபாரகளில் நல்ல லாபம் கிடைக்கும். சகோதர உறவுகளால் லாபங்கள் ஏற்படும். பெண்களுக்கு நல்ல வரன்கள் அமையும். குடும்பத்தில் பல மங்கல நிகழ்வுகள் நடக்கும். சிலருக்கு புத்திர பேறு கிட்டும். உடல்நலம் மிக சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும்.

கடகம்:

கடக ராசிக்கு இரண்டாம் வீடான சிம்ம ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சியாகியிருப்பதால் உடல் ஆரோக்கியம் அவ்வப்போது பாதிக்கபடும். தம்பதிகளிடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். பணவரவிற்கு குறையேதும் ஏற்படாது. அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். தொழில், வியாபாரங்களில் சராசரியான வருமானம் இருக்கும். பணியில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வுகள் சற்று தாமதத்திற்கு பிறகு கிடைக்கும்.

சிம்மம்:

சிம்ம ராசியிலேயே சுக்கிரன் பெயர்ச்சியாகியிருப்பதால் அவ்வப்போது உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். திருமணம், கோயில் திருவிழா போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். புதிய முயற்சிகளில் சிறிது தடங்கல்கள் ஏற்படும். கலைஞர்களுக்கு வெளிநாடுகள் செல்லும் யோகம் உண்டாகும். விவசாயம் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.

கன்னி:

கன்னி ராசிக்கு 12 ஆம் இடமாகிய சிம்ம ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சியாகியிருப்பதால் உடல் மற்றும் மனம் மிகுந்த உற்சாகமாக இருக்கும். வர வேண்டிய பழைய பாக்கிகள் அனைத்தும் வந்து சேரும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் பலருக்கு உண்டாகும். நீதிமன்ற வழக்குகள், பூர்வீக சொத்து பஞ்சாயத்துகளில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். காதல் சம்பாந்தமான விடயங்களில் வெற்றி கிட்டும். ஒரு சிலருக்கு தொலைதூர பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

துலாம்:

துலாம் ராசிக்கு 11 ஆம் இடமாகிய சிம்ம ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சியாகியிருப்பதால் உடல் நலம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலை நீடிக்கும். உறவினர்களிடம் மதிப்பு உண்டாகும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். ஒரு சிலருக்கு வெளிநாடுகள் செல்லும் அமைப்பு உருவாகும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு மிகுந்த லாபங்கள் உண்டாகும். மறைமுக எதிரிகள் தொல்லை ஒழியும். பெண்களுக்கு பொன், புத்தாடைகள் சேர்க்கை உண்டாகும்.

விருச்சிகம்:

விருச்சிகம் ராசிக்கு 10 ஆம் இடமாகிய சிம்ம ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சியாகியிருப்பதால் உடல் ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும். எதிரிகளை வெல்லும் அமைப்பு உருவாகும். எல்லாவற்றிலும் தடைகளும், தாமதங்களும் ஏற்படும். உங்களுக்கு வரவேண்டிய பணவரவுகள் சரியாக வந்து சேரா நிலை இருக்கும். பணியிடங்களில் பிறரின் சூழ்ச்சிகளுக்கு ஆளாக நேரும். விவசாயிகளுக்கு சற்று குறைவான லாபங்கள் மட்டுமே கிடைக்கும்.

தனுசு:

தனுசு ராசிக்கு 9 ஆம் இடமாகிய சிம்ம ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சியாகியிருப்பதால் நீங்கள் புதிதாக தொடங்கும் எத்தகைய முயற்சிகளிலும் சற்று தாமத்திற்கு பின்பே வெற்றி கிட்டும். குடும்பத்திலுள்ள பெரியவர்களுடன் இணக்கம் உண்டாகும். பெண்களின் உடல்நிலை சிறிது பாதிக்கபடக்கூடும். அடிக்கடி பயணங்களும் தீர்த்த யாத்திரைகளையும் மேற்கொள்வீர்கள். கலைஞர்கள் கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திகொள்ள வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மகரம்:

மகர ராசிக்கு 8 ஆம் சிம்ம ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சியாகியிருப்பதால் வேலை தேடி அலைந்தவர்களுக்கு சற்று தடை, தாமதத்திற்கு பின்பு வேலை கிடைக்கும். வீட்டிலும் வெளியிடத்திலும் வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்மை பயக்கும். தொழில் மற்றும் வியாபாரங்களில் சுமாரான நிகர லாபம் இருக்கும். அரசியலிலிருப்பவர்கள் அனைத்திலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். உடல்நலக் குறைபாடுகளும் அவ்வப்போது ஏற்பட்டு விலகும்.

கும்பம்:

கும்ப ராசிக்கு 7 சிம்ம ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சியாகியிருப்பதால் சிலருக்கு வயிறு சம்பந்தமான நோய்கள் ஏற்படும். சிலர் ஆன்மீக பயணங்களை மேற்கொள்வார்கள். புதிய முயற்சிகளை சிறிது காலம் தள்ளி வைப்பது நல்லது. தொழில், வியாபாரங்களில் சுமாரான லாபங்களே இருக்கும். கடன்களை அடைப்பதில் சிறிது தாமதம் உண்டாகும். வீட்டில் சுப காரியங்களுக்கான செலவுகள் ஏற்படும்.

மீனம்:

மீனம் ராசிக்கு 6 ஆம் இடமாகிய சிம்ம ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சியாகியிருப்பதால் உடலாரோக்கியம் அடிக்கடி பாதிக்கப்படும். கொடுக்கல் வாங்கல் நன்றாக இருக்கும். குடும்பத்தில் சிறு சண்டைகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரங்கள் சராசரியான நிலையில் இருக்கும். எந்த ஒரு விடயமும் சற்று தாமதத்திற்கு பின்பே நிறைவேறும். பெண்கள் வழியில் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
கடக ராசி, லக்னத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டங்கள் பெற வழிகள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sukran peyarchi palangal august 2019 in Tamil. It is also called as Sukran palan in Tamil.

- Advertisement -
Published by