கடக ராசி, லக்னத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டங்களை பெற இவற்றை செய்யுங்கள்

kadagam

உலகில் இருக்கும் உயிர்களில் மனிதனுக்கு மட்டுமே மனம் என்கிற ஒரு அற்புதமான விடயம் இருக்கிறது. அந்த மனதை அதன் போக்கிற்கு விட்டு விடுபவர்கள் பல துன்பங்களை அனுபவிக்க நேரிடும். அந்த மனதை செம்மை படுத்தி உயர்வான சிந்தனைகள் மற்றும் செயல்களுக்கு பயன்படுத்துபவர்கள் சகல நன்மைகளையும் பெறுகின்றனர். மனிதர்களின் மனதை ஆளும் கிரகம் சந்திரன். அந்த சந்திரனுக்குரிய ராசியாக இருப்பது கடக ராசியாகும். அப்படி அந்தக் கடக ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்கள் தங்களின் ஜாதகத்தில் ஒன்பதாவது இட அதிபதியால் மிகுந்த அதிர்ஷ்டங்களையும், யோகங்களும் பெறுவதற்கான வழிமுறைகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Kadagam

12 ராசிகளில் நான்காவதாக வருகிற ராசி கடகம் ராசி ஆகும். இந்த கடக ராசியின் அதிபதி சந்திர பகவானாவார். இந்த கடக ராசிக்கு 9 ஆவது ராசியாக வருவது மீன ராசி. இந்த மீன ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். குரு பகவானுக்கு சந்திரன் நட்புக் கிரகம் என்பதால் கடக ராசிக்கு ஒன்பதாம் இடமான மீன ராசியால் நன்மையான பலன்களே அதிகம் ஏற்படும். எனினும் குரு பகவானின் நல்லருளைப் பெற்று மிகச் சிறந்த பலன்களை பெற கீழ்க்கண்ட பரிகாரங்களை செய்து வருவது நன்மை பயக்கும்.

சந்திர பகவானுக்குரிய ராசி கடகம். கடகம் என்பது நீர்நிலையில் வாழ்கின்ற நண்டு உயிரினத்தை குறிப்பதாகும். அந்த கடக ராசிக்கு 9 வது ராசியாக ஒருவர் மீன ராசியும் நீர் நிலை சார்ந்த ஒரு ராசியாகவே இருக்கிறது. எனவே கடக ராசி மற்றும் லக்னத்தில் பிறந்த ஜாதகர்கள் கடல்வாழ் உயிர்கள் மற்றும் ஆறு, கோவில் குளங்களில் இருக்கும் மீன்களுக்கு உங்களால் இயன்ற போதெல்லாம் உணவு வழங்குவதால் உங்களின் தோஷங்களைப் போக்கி மிகுந்த அதிர்ஷ்டங்களை உண்டாகச் செய்யும். கோடைக் காலங்களில் மனிதர்கள் மற்றும் பிற உயிர்களின் தாகத்தை தீர்ப்பதற்கு நீர் பந்தல் அமைத்தல், தண்ணீர் தொட்டியில் நீர் நிரப்பி வைத்தல் போன்றவற்றை செய்வதால் உங்களின் கர்மவினைகள் வாழ்வில் மேன்மையான பலன்கள் ஏற்படும்.

feeding fish

பொன், வேதம், ஆன்மிகம் தொடர்புடைய அனைத்திற்கும் காரகத்துவம் வகிப்பவராக குரு பகவான் இருக்கிறார். அங்கு குரு பகவானின் முழுமையான அருளைப் பெற வேதமறிந்து முறைப்படி ஹோமங்கள் செய்யும் அந்தணர்களுக்கு ஆடைகள், மருந்துகள் போன்றவற்றை தானம் செய்வதால் குரு பகவான் மனம் குளிர்ந்து அவரின் முழுமையான நல்லருளை உங்களுக்கு கிடைக்கச் செய்யும். இந்தப் பரிகாரம் செய்வதால் அதிர்ஷ்ட தேவதை என்றென்றும் உங்களுடன் இருக்க செய்வார் குரு பகவான். மேலும் வயல்வெளிகள், கடற்கரை பகுதிகளை தூய்மை செய்வது, அந்த இடங்களை சீர் செய்வது போன்றவற்றை செய்வதும் கடக ராசி மற்றும் லக்னத்திற்கு மிகுந்த நன்மைகளை ஏற்படுத்தக்கூடிய பரிகாரங்களாக இருக்கிறது.

இதையும் படிக்கலாமே:
எந்த திதியில் என்ன செய்தால் யோகங்களை பெறலாம்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Kadaga lagnam yogam in Tamil. It is also called as Kadaga rasi in Tamil or Rasi pariharam in Tamil or Jothida pariharam in Tamil or Kadaga rasi pariharam in Tamil.