
வெயில் காலம் என்பது பசுமை உலகுக்கு கடினமான பருவம். தீவிரமான வெப்பம், நீரிழப்பு, வாடல் ஆகியவை செடிகளின் வளர்ச்சியை பாதிக்கக்கூடும். ஆனால், சற்று கவனம் செலுத்தினால் உங்கள் வீட்டுப் பூந்தொட்டிகள், சிறு தொட்டி செடிகள் மற்றும் உள்நாட்டு செடிகள் பாதுகாக்கப்படலாம். இந்த தோட்டக்குறிப்பு பகுதியின் மூலம் வெயில் காலத்தில் செடிகளை பாதுகாக்க சிறந்த 6 முறைகளை நாம் விரிவாகப் பார்ப்போம்.
நீரின் முக்கியத்துவம் :
வெயிலில் நீர் இழப்பு நம் வீட்டு செடிகளுக்கு அதிகமாக இருக்கின்றன. அதனால் செடிகளுக்கு தேவையான அளவில் தண்ணீர் கிடைப்பது அவசியம். காலையில் அல்லது மாலை நேரத்தில் தண்ணீர் ஊற்ற வேண்டும். ஒவ்வொரு செடியின் நீர் தேவையும் மாறுபடும் என்பதால், அவற்றின் தன்மையைப் பொறுத்து நீரேற்றம் மறக்காமல் செய்ய வேண்டும். அவ்வப்பொழுது நேரம் கிடைக்கும் பொழுது தண்ணீரை ஸ்ப்ரே செய்தும் விடலாம்.
நேரடி வெயிலிலிருந்து பாதுகாக்க :
சில செடிகளால் நேரடி வெயிலை தாங்க முடியாது. சீக்கிரமே வறண்டு போய்விடும். அதனால் அவற்றை நிழல் வலை போன்றவற்றின் கீழ் வைக்கலாம். வீட்டிற்குள் வளர்க்கும் சில செடிகள் கூட சில நேரங்களில் ஜன்னலின் நேரடி வெயிலால் பாதிக்கப்படலாம். வெயிலுக்கு ஏற்றவாறு இடத்தை மாற்றி அமைக்கலாம்.
மண்ணின் தன்மையை மேம்படுத்துதல் :
நல்ல தாவர வளர்ச்சிக்கு உரிய மண் கட்டாயம் வேண்டும். வாடாத, ஈரப்பதம் நீடிக்கும் மண்ணை பயன்படுத்த வேண்டும். மேலும் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளக்கூடிய தேங்காய் நார் கழிவுகள் கூடிய மண்ணை தேர்ந்தெடுப்பதும் உகந்தது.
உரமும், உயிரணுப் பாதுகாப்பும் :
வெயில் காலத்தில் செடிகள் பலவீனமடைய வாய்ப்பு உள்ளதால், இயற்கை உரங்களைப் பயன்படுத்தி அவற்றின் சக்தியை அதிகரிக்கலாம். பஞ்சகவ்யம், தேமோர் கரைசல் போன்றவை நல்ல தேர்வுகள். உயிரணுப் பூச்சி விரட்டிகளை பயன்படுத்துவதும் பாதுகாப்பிற்கு உதவும்.
செடிகளின் அடிக்கடி பராமரிப்பு :
வாரம் ஒரு முறை செடிகளை சுத்தம் செய்வது, உலர்ந்த இலைகளை அகற்றுவது அவசியம். செடியின் நிலைமையை கவனிக்க வேண்டும். எந்த செடியும் வாட ஆரம்பித்தால், உடனடியாக அதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் கண்டிப்பாக செடி வறண்டு போய் வாடிவிடும்.
நீர் பாய்ச்சுவது, அடிக்கடி செடிகளை கவனித்து காய்ந்த இலைகளை அகற்றி சுத்தம் செய்வது, மண்ணை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்வது, மண்ணுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கிறதா? என்பதை பரிசோதிப்பது, இயற்கை உரக்கழிவுகளை கொடுத்து வெயில் காலத்தில் செடிகளை ஊட்டச்சத்துடன் வைத்துக் கொள்ள உதவுவது போன்றவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும். மேலும் அதிகப்படியான வெயில் படும் இடங்களில் இருந்து சற்று நிழல் தரும் இடங்களாக தேர்ந்தெடுத்து மாற்றி அமைக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே:
சித்திரை அமாவாசை பரிகாரம்
செடிகளுக்கு நிழல் படும்படி வலைகளை அமைக்கலாம். வீட்டில் சமைக்க பயன்படுத்தும் காய்கறிகளை வேக வைக்கும் தண்ணீரை பயன்படுத்தி செடிகளுக்கு ஊட்டச்சத்துடன் வெயில் கால பராமரிப்புக்கும் உதவும் வகையில் உபயோகிக்கலாம். இது போன்ற சிறு சிறு விஷயங்களை செய்வதன் மூலம், நம் வீட்டுச் செடிகள் ரொம்பவும் ஆரோக்கியமாகவும், இந்த வெயில் காலத்தில் பூத்துக் குலுங்கி பசுமை நிறைந்ததாகவும் நிச்சயம் இருக்கும்.