- Advertisement -
- Advertisement -

வெயில் காலம் வந்துவிட்டது. தகிக்கும் இந்த கோடையில் அதிக வெப்பம், உலர்ச்சி, அதிகப்படியான அனல் காற்று போன்றவை நமது சருமத்திற்கு சவாலாக மாறுகின்றன. சருமம் கறுத்து போதல், உலர்ச்சி, அரிப்பு, சூரியக் கதிர்களால் வெண்புள்ளிகள், கருப்புப்புள்ளிகள் தோன்றுவது மற்றும் சருமத்தில் ஈரப்பதம் குறைவது போன்ற பிரச்சனைகள் வெயில் காலத்தில் அதிகமாகக் காணப்படுகின்றன. இதைத் தடுக்க எளிய, பயனுள்ள பராமரிப்பு முறைகளை இந்த அழகு குறிப்பு சார்ந்த பதிவின் மூலம் பகிர்கிறோம்.

1. சருமம் ஏன் வெயில் காலத்தில் சேதமடைகிறது?
வெயில் காலத்தில் UV கதிர்கள் அதிகமாக இருக்கும். இது சருமத்தின் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேல் சரும அடுக்கு (epidermis) களைந்துவிட்டு, உலர்ச்சி மற்றும் கருமை ஏற்படச் செய்கிறது. சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருந்தால், பிளவுகள் மற்றும் முன்கூட்டியே தோல் முதிர்ச்சியும் ஏற்படலாம்.

- Advertisement -

2. சரியான சுத்தம் – முதற்கட்ட பராமரிப்பு
தினமும் இரண்டு முறை முகம் கழுவுவது முக்கியம். வெயில் காலத்தில் அதிக சுரப்பிகளால் எண்ணெய் வெளியேறும், இதன் காரணமாக கரும்புள்ளிகள் உருவாகும். சோப்பிற்கு பதிலாக முகத்திற்கு மட்டும் வெயில் காலத்தில் தினமும் ஹெர்பல் அல்லது நன்கு ஈரப்பதம் வழங்கும் ஃபேஸ் வாஷ்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.

3. ஈரப்பதம் – சருமத்தின் நண்பன்
சருமம் உலர்ந்துவிடும் நேரங்களில், சிறந்த moisturizer பயன்படுத்துவது அவசியம். ஹயாலூரானிக் ஆசிட், ஆலோவேரா அல்லது சந்தனம் போன்ற இயற்கை பொருட்கள் அடங்கிய ஈரப்பதம் வழங்கும் தயாரிப்புகளை தேர்வு செய்யவும். இதனால் சருமம் வறண்டு போகாமல் எப்பொழுதும் ஈரப்பதத்துடன் மென்மையாக பாதுகாக்கப்படும்.

- Advertisement -

4. சன்ஸ்கிரீன் – அன்றாட கவசம்
SPF 30 அல்லது அதற்கு மேற்பட்ட சன்ஸ்கிரீனை வீட்டிலிருந்து வெளியேறும் 20 நிமிடங்களுக்கு முன் பயன்படுத்துங்கள். வியர்வை வரும் போது சன் ஸ்கிரீனை மீண்டும் பயன்படுத்துவது சருமத்தைக் UV கதிர்களிலிருந்து பாதுகாக்க உதவும். சன் ஸ்கிரீன் இல்லாமல் வெளியில் டிராவல் செய்யாதீர்கள்.

5. உணவு மற்றும் நீர் – உள்புற பராமரிப்பு
பளிச்சிடும் சருமத்திற்கு நீர் மிக முக்கியம். ஒரு நாளைக்கு குறைந்தது 8 கிளாஸ் நீர் குடிக்க வேண்டும். கேரட், தக்காளி, வெள்ளரிக்காய், ஆரஞ்சு போன்றவைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். நீர் சத்து நிறைந்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை அன்றாடம் எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் அதிகம் குடிக்க முடியாதவர்கள், எலுமிச்சை ஜூஸ், தர்பூசணி ஜூஸ், கிர்ணி ஜூஸ், சாத்துக்குடி ஜூஸ், இளநீர், மோர் போன்ற எளிமையான ஜூஸ் வகைகளை குடிக்கலாம்.

இதையும் படிக்கலாமே:
ராகு கேது பெயர்ச்சி 2025

6. இயற்கை முகக் கவசங்கள் – வீட்டிலேயே பாதுகாப்பு
ஆலோவேரா ஜெல், தேன், தயிர், எலுமிச்சை போன்றவை முகத்தில் மாசுகளை நீக்குவதிலும், வெப்பத்திலிருந்து பாதுகாப்பதிலும் நமக்கு ரொம்பவே உதவும். இந்த நான்கு பொருட்களையும் ஒன்றாக கலந்து பேஸ்ட் போல செய்து கொள்ளுங்கள். பின்னர் இதை முகத்தில் தடவி ஒரு நிமிடம் மசாஜ்க்கு பின்னர், நன்கு உலர விடுங்கள். உலர்ந்து காய்ந்ததும், குளிர்ந்த நீரினால் முகத்தை அலம்புங்கள். வீட்டில் இருக்கும் பொழுது இதை செய்து வந்தால் கோடை கால பிரச்சனைகளிலிருந்து, நம் சருமத்தை எளிதான முறையில் ஆரோக்கியமாக பாதுகாக்கலாம்.

- Advertisement -