- Advertisement -
ஜோதிடம்

சூரிய பகவானால் ஏற்படும் உடல் உபாதைகளும் பரிகாரங்களும்

- Advertisement -

உலகம் சீராக இயங்குவதற்கு சூரியனின் செயல்பாடு மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. சூரியன் இல்லை என்றால் இந்த உலகம் இயங்கவே இயங்காது. எப்படி வாழும் நம் உலகிற்கு சூரியன் முக்கியமோ அதே போல் தான் நவகிரகங்கள் சீராக செயல்படுவதற்கு நவகிரகங்களின் தலைவரான சூரிய பகவான் முக்கியமாக திகழ்கிறார். இந்த ஜோதிடம் குறித்த பதிவில் சூரிய பகவானால் ஏற்படக்கூடிய உடல் உபாதைகள் பற்றியும் அதை சரி செய்வதற்குரிய பரிகாரம் பற்றியும் தான் பார்க்கப் போகிறோம்.

நவகிரகங்களின் தலைவராக திகழக்கூடியவர்தான் சூரிய பகவான். மேலும் சுப கிரகங்களின் வரிசையில் சூரிய பகவானும் இருக்கிறார். பொதுவாக இவர் வேலை தொடர்பான அனைத்து விஷயங்களையும் செய்து கொடுக்கும் வல்லமை படைத்தவராக திகழ்கிறார். அதிலும் குறிப்பாக அதிகாரம் சம்பந்தப்பட்ட வேலைகளில் இவரின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கும்.

- Advertisement -

ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் ராகு, கேது, சனி போன்ற கிரகங்களுடன் சேர்ந்திருக்கும் பொழுது உடல் உபாதைகள் என்பது ஏற்படும். அதிலும் குறிப்பாக ராகுவுடன் சேர்ந்திருந்தால் அப்பா வழியில் இருக்கக்கூடிய பரம்பரை வியாதிகளும், கேதுடன் சேர்ந்திருந்தால் அம்மா வழியில் இருக்கக்கூடிய பரம்பரை வியாதிகளும் ஏற்படுவதற்குரிய வாய்ப்பை சூரிய பகவான் உருவாக்குவார்.

உடல் உறுப்புகளை பொறுத்த வரை சூரிய பகவான் உச்சந்தலை, இதயம், கண் போன்ற பாகங்களுக்கு உரியவராக திகழ்கிறார். மேலும் சூரியன் என்றாலே வெப்பம் என்று அர்த்தம். அதேபோல் உடலில் ஏற்படக்கூடிய வெப்பம் சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்திற்கும் சூரிய பகவான் காரணமாக திகழ்கிறார். அதிலும் மண்டை சூடு என்று சொல்லக்கூடியது மிகவும் குறிப்பிடத்தக்க திகழ்கிறது. கண்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதும் இதயக் குழாயில் அடைப்பு ஏற்படுதல் அல்லது இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுதல் இவை அனைத்திற்கும் சூரிய பகவான் காரணமாக திகழ்கிறார். அது மட்டுமல்லாமல் சத்துக் குறைபாடு ஏற்படுவதற்கும் சூரிய பகவானை காரணமாக திகழ்கிறார்.

- Advertisement -

சூரிய பகவானை ஞாயிற்றுக்கிழமை தோறும் வழிப்பட வேண்டும். மேலும் அவரின் அதி தேவதை ஆக திகழக்கூடிய நாராயணரை தொடர்ந்து வழிபடுவதன் மூலமும் சூரிய பகவானின் பாதிப்பில் இருந்து நம்மால் வெளியில் வர முடியும்.

பரிகாரங்கள் என்று பார்க்கும் பொழுது தினமும் சூரிய பகவானை நம் இரு கண்களால் பார்த்து வழிபட வேண்டும். இது அறிவியல் ரீதியாகவும் நமக்கு பல நன்மைகளைத் தரும். தினமும் செய்ய இயலாதவர்கள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஆவது சூரிய பகவானை நம் கண்களால் பார்த்து வழிப்பட வேண்டும்.

- Advertisement -

சூரிய பகவானுக்குரிய தானியமாக கோதுமை திகழ்கிறது. கோதுமை வெல்லம் இவை இரண்டையும் தானமாக தர வேண்டும். மேலும் இவை இரண்டையும் சேர்த்து உணவு பொருளாக செய்தும் தானம் தரலாம். அது மட்டுமல்லாமல் எந்த அளவுக்கு நம்மால் மரங்களை நட்டு நீரூற்றி பராமரித்து வருகிறோமோ அந்த அளவுக்கு சூரிய பகவானின் பாதிப்பிலிருந்து நம்மால் வெளியில் வர முடியும். மேலும் மரக்கன்றுகளை தானம் செய்வதன் மூலம் நம்முடைய பூர்வ ஜென்ம பாவங்கள், பரம்பரை பாவங்கள் போன்றவற்றையும் சூரிய பகவான் நீக்கி நமக்கு நலமான வாழ்வை அருள்வார்.

இதையும் படிக்கலாமே: குரு பகவானால் ஏற்படும் உடல் உபாதைகளும் பரிகாரமும்

சூரிய பகவானால் ஏற்படக்கூடிய உடல் உபாதைகள் நீங்குவதற்கு மேற் சொன்ன பரிகாரங்களை முறையாக செய்து நலமுடன் வாழ்வோம்.

- Advertisement -