- Advertisement -
சமையல் குறிப்புகள்

சக்கர வள்ளி கிழங்கு குலோப் ஜாமுன் செய்யும் முறை

- Advertisement -

தீபாவளி வந்துவிட்டது பலரும் தங்களுடைய இல்லங்களில் பலகார வகைகளை செய்யும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். அதில் இனிப்பு பலகாரம், காரப்பலகாரம் என்று இரண்டு வகைகளில் செய்வார்கள். இனிப்பு பலகாரங்களில் பலரும் எளிதில் செய்யக்கூடிய ஒரு பலகாரமாக திகழ்வதுதான் குலோப் ஜாமுன். அனைத்து கடைகளிலும் மிகவும் எளிதில் கிடைக்கக்கூடியது மாவை தண்ணீர் ஊற்றி பிணைந்து உருட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தாலே சுவையான குலோப் ஜாமுன் தயாராகிவிடும். இந்த குலோப் ஜாமுனை சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட குலோப்ஜாமுனை ஆரோக்கியமான முறையில் செய்வது எப்படி என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

தேவையான பொருட்கள்

சர்க்கரைவள்ளி கிழங்கு – 1/2 கிலோ
பால் பவுடர் – 1/4 கப்
கோதுமை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
நாட்டு சக்கரை – 1 1/2 கப்
தண்ணீர் – 1 1/2 கப்
ஏலக்காய் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – பொறிப்பதற்கு தேவையான அளவு

- Advertisement -

செய்முறை

முதலில் சர்க்கரை வள்ளி கிழங்கின் முனைகளை நறுக்கி சிறு துண்டுகளாக்கி இட்லி சட்டியில் வைத்து இட்லியை வேக வைப்பது போல் பத்து நிமிடம் வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். சர்க்கரை வள்ளி கிழங்கு ஆறியதும் அதன் தோலை நீக்கி நன்றாக மசித்துக்கொள்ள வேண்டும். மற்றொரு புறத்தில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நாட்டு சர்க்கரை தண்ணீர் ஊற்றி சர்க்கரை நன்றாக கரையும் வரை அடுப்பில் வைத்திருக்க வேண்டும். நன்றாக கரைந்த பிறகு அதை வடிகட்டி வேறொரு பாத்திரத்தில் மாற்றி அதனுடன் ஏலக்காய் துளை போட்டு தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது மசித்த சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பால் பவுடர் மற்றும் கோதுமை மாவையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிணைந்து கொள்ளுங்கள். பிணைந்த உடனேயே இதை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் குலோப் ஜாமினை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு அடுப்பை குறைந்த தீயில் வைத்து உருட்டிய உருண்டைகளை அதில் போட்டு ஒரு நிமிடம் அப்படியே விட்டு விட வேண்டும்.

- Advertisement -

பிறகு அதை கரண்டியை பயன்படுத்தி நன்றாக கலந்து பொன்னிறமாகும் வரை வேக விட வேண்டும். பொன்னிறமான பிறகு அதை எடுத்து அப்படியே தயார் செய்து வைத்திருக்கும் ஜீராவில் போட்டு விட வேண்டும். இரண்டு மணி நேரம் குலோப்ஜாமூன் சீராவில் ஊறிய பிறகு விருப்பத்திற்கு ஏற்றவாறு பருப்பு வகைகளை தூவி சாப்பிட கொடுக்கலாம். மிகவும் சுவையான அதே சமயம் சத்தான குலோப் ஜாமுன் தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: சுவையான தேங்காய் சாதம்

எப்பொழுதும் போல் கடையில் இருந்து குலோப் ஜாமுன் மாவு வாங்கி வந்து தயார் செய்வதை தவிர்த்துவிட்டு இப்படி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சத்து நிறைந்த சர்க்கரைவள்ளிக்கிழங்கை பயன்படுத்தி ஒருமுறை குலோப் ஜாமுன் செய்து பாருங்கள். ஆரோக்கியமான தீபாவளியை கொண்டாடுங்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -