- Advertisement -
சமையல் குறிப்புகள்

அவரைக்காயுடன் வேர்க்கடலை சேர்த்து இப்படி ஒரு முறை கூட்டு செய்து பாருங்கள், இதனை அப்படியே சாதத்துடன் பிசைந்து சாப்பிடும் பொழுது மிகவும் அருமையான சுவையில் இருக்கும்

- Advertisement -

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான உணவை யோசித்து சமைத்துக் கொடுப்பது தான் வீட்டில் உள்ள பெண்களின் முதல் வேலையாக இருக்கிறது. அதனால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு கொடுக்க வேண்டி தினமும் ஒரு காய்கறி செய்து, அவற்றை குழந்தைகள் சாப்பிடும் வகையில் அதட்டி அவர்களுக்கு ஊட்டியும் விடுகிறார்கள். இப்படி குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை தேடி தேடி சமைத்துக் கொடுக்கும் தாய்மார்களுக்கு இந்த அவரைகாய் வேர்க்கடலை கூட்டும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேர்க்கடலையில் புரதச் சத்து அதிகமாக இருக்கிறது, இதனை அவரை காயுடன் சேர்த்துக் கூட்டாகச் செய்யும் பொழுது இதன் சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும். வாருங்கள் இந்த சுவையான அவரைக்காய் வேர்க்கடலை கூட்டை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
அவரைக்காய் – 250 கிராம், பச்சை வேர்க்கடலை – 100 கிராம், உப்பு – ஒரு ஸ்பூன், தக்காளி – 2, தேங்காய் – அரை மூடி, சோம்பு – ஒரு ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 8, கடுகு – அரை ஸ்பூன், பூண்டு – 2 பல், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் 100 கிராம் பச்சை வேர்க்கடலை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அதனுடன் முக்கால் பங்கு தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு இந்த பாத்திரத்தை அடுப்பின் மீது வைத்து, வேர்க்கடலையை நன்றாக வேகவைக்க வேண்டும்.

பின்னர் அவரைக்காயை சுத்தமாக தண்ணீரில் அலசி கொண்டு, அவற்றுள் இருக்கும் நார் பகுதியை நீக்கிவிட்டு, அவரைக்காயை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் 8 காய்ந்தமிளகாய், இரண்டு பல் பூண்டு மற்றும் ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இவற்றுடன் அரை மூடி தேங்காயைத் துருவி சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் இவை அனைத்தையும் விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் நறுக்கிய அவரைக்காய் சேர்த்து இவற்றுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விட்டு, அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக விட வேண்டும். பிறகு இவற்றில் இருக்கும் தண்ணீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து, நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு இவற்றுடன் 2 தக்காளியை நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். அதன் பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, வேகவைத்த வேர்க்கடலை மற்றும் அவரைக்காய் சேர்த்து அனைத்தையும் நன்றாக கொதிக்க விடவேண்டும். பின்னர் ஒரு கொத்து கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை அனைத்துவிட வேண்டும்

- Advertisement -