- Advertisement -
சமையல் குறிப்புகள்

10 நிமிடத்தில் காரசாரமான பச்சை மிளகாய் காரச்சட்னி இப்படி செஞ்சி பாருங்க இன்னும் ரெண்டு இட்லி கூடுதலா சாப்பிடுவாங்க!

- Advertisement -

காலையில் எழுந்தவுடன் இட்லி, தோசைக்கு என்னடா சட்னி செய்வது? என்று யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு காரசாரமான நாக்கிற்கு இதமான இந்த பச்சை மிளகாய் சட்னி வித்தியாசமான ஒரு சுவையை கொடுக்கும். தக்காளி, தேங்காய் போன்ற எந்த பொருட்களையும் சேர்க்காமல் செய்யப்படும் இந்த சட்னி ரொம்பவே விஷேஷமானது. இந்த ஸ்பெஷல் பச்சை மிளகாய் காரசார சட்னி எப்படி எளிதாக செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பச்சை மிளகாய் காரச் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
உளுந்து – ஒரு டேபிள் ஸ்பூன், சின்ன வெங்காயம் – 15, பச்சை மிளகாய் – 10, பூண்டு பல் – ஆறு, புளி – சிறு நெல்லிக்காய் அளவு, உப்பு – தேவையான அளவு, சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன். தாளிக்க: கடுகு – அறை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

பச்சை மிளகாய் கார சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பச்சை மிளகாய் அதிக காரம் இல்லாததாக 10 மிளகாய்களை காம்பு நீக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 15 சின்ன வெங்காயத்தை தோலுரித்து முழுதாக அப்படியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள்.

எண்ணெய் காய்ந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். உளுந்து பொன்னிறமாக வறுபட்டதும் தோல் உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். சின்ன வெங்காயத்திற்கு பதிலாக நீங்கள் விருப்பப்பட்டால் பெரிய வெங்காயத்தையும் நீங்கள் சேர்க்கலாம். வெங்காயம் லேசாக வதங்கி வரும் பொழுது பச்சை மிளகாய்களை ஒன்றிரண்டாக நறுக்கி சேருங்கள். பின்னர் இதனுடன் தோலுரித்த 6 பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.

- Advertisement -

பின்னர் புளிப்பு தன்மைக்கு சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளியை விதைகள், நார் எல்லாம் நீக்கி உருட்டி எடுத்து சேர்த்துக் கொண்டு வதக்க வேண்டும். இவை நன்றாக வறுபட கொஞ்சம் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை அணைத்து ஆற விட்டுவிட்டு தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து கெட்டியாக மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் இன்னொரு வாணலியில் கொஞ்சம் போல் எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள்.

எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் அரைத்து வைத்துள்ள இந்த சட்னியையும் இதனுடன் சேர்த்து லேசாக வதக்க வேண்டும். பச்சை மிளகாய் பச்சையாக அரைத்துள்ளதால் நீங்கள் எந்த அளவிற்கு வதக்க வேண்டுமோ, அந்த அளவிற்கு வதக்கினால் தான் காரம் தெரியாது. எனவே அடுப்பை குறைந்த தீயில் வைத்துக் கொண்டு எண்ணெயிலேயே நன்கு வதக்கி விடுங்கள். பிறகு சுடச் சுட இட்லி, தோசை உடன் பரிமாறி பாருங்கள், அவ்வளவு அருமையாக இருக்கும்.

- Advertisement -