- Advertisement -
சமையல் குறிப்புகள்

துரித உணவுகளுடன் கொடுக்கப்படும் மயோனைஸ் உடலுக்கு நல்லதா? இயற்கையான முறையில் வீட்டிலேயே ரொம்ப எளிதாக மயோனைஸ் தயாரிப்பது எப்படி?

- Advertisement -

நவநாகரீக உலகில் வீட்டில் ஆரோக்கியமாக சமைத்து உண்ணாமல் அடிக்கடி துரித உணவுகளை விரும்பி தேடி செல்வோர் அதிகரித்து வருகின்றனர். இதனால் துரித உணவகங்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. பீசா, பர்கர், நான் ரொட்டி, கிரில் சிக்கன் போன்றவற்றுடன் சேர்த்துக் கொடுக்கப்படும் இந்த மயோனைஸ் சுவைக்கு, பெரும்பாலான இளம் வயதினர் அடிமையாகி போவது உண்டு. இந்த மயோனைஸ் எதில் தயாரிக்கப்படுகிறது? இது உடலுக்கு ஆரோக்கியம் தருமா? இயற்கையாக நம் வீட்டிலேயே ரொம்ப எளிதாக எப்படி தயாரிக்கலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

பச்சை முட்டை, எலுமிச்சைச்சாறு, உப்பு, எண்ணெய் போன்றவற்றை கொண்டு தயாரிக்கப்படும் இந்த மயோனைஸ் அடுப்பை பயன்படுத்தாமல் செய்வதால் சரியாக பராமரிக்காவிட்டால் எளிதாகவே கெட்ட பாக்டீரியாக்கள் உருவாகிவிடும். இது செய்வது ரொம்ப எளிதானது என்பதால் தேவைப்படுவோர் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் செய்து கொள்வது நல்லது.

- Advertisement -

கடைகளில் கெட்டுப் போகாமல் பதப்படுத்துவதற்கு தேவையற்ற மூலக்கூறுகளை சேர்கின்றனர். இதனால் மேலும் நம் உடல்நலம் பாதிக்கப்படும் என்பதால் வெளியில் இதை வாங்கி உண்பவர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஒரு ஸ்பூன் மயோனஸில் 94 கலோரிகள் இருப்பதால் விரைவாக உடல் எடை கூடும் மேலும் கல்லீரல் பாதிப்புகள், புற்று நோய், இதய நோய் போன்றவையும் ஏற்படும் அபாயம் உண்டு. உங்கள் கைகளால் வீட்டிலேயே தயாரித்து ஓரிரு நாட்கள் மட்டும் ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்த வேண்டும்.

மயோனைஸ் செய்ய தேவையான பொருட்கள்:
முட்டை – 2, வெள்ளை மிளகு – ஒரு டீஸ்பூன், பூண்டு – 3, உப்பு – கால் டீஸ்பூன், சர்க்கரை – அரை டீஸ்பூன், எலுமிச்சை பழச் சாறு – 2 டேபிள் ஸ்பூன், ரீபைண்ட் எண்ணெய் – கால் கப்,

- Advertisement -

மயோனைஸ் செய்முறை விளக்கம்:
முதலில் மிக்ஸி ஜார் ஒன்றை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 2 பச்சை முட்டையை அப்படியே உடைத்து சேர்த்துக் கொள்ளுங்கள். சிலர் முட்டை பச்சை வாடை அடிக்காமல் இருக்க வெள்ளைக்கருவை மட்டும் பயன்படுத்துவார்கள். மிளகு, பூண்டு சேர்ப்பதால் இதில் பச்சை வாடை அடிக்காது. வெள்ளை மிளகு இல்லாதவர்கள் கருப்பு மிளகு சேர்த்துக் கொள்ளலாம். தோல் உரித்த பூண்டு பற்கள், மிளகை முட்டையுடன் சேர்த்து இதற்கு தேவையான அளவிற்கு உப்பு மற்றும் அரை ஸ்பூன் சர்க்கரை மட்டும் கலந்து மிக்ஸியை இயக்குங்கள். குறைந்த ஓட்டத்திலிருந்து ஆரம்பித்து மெதுமெதுவாக அதிக ஓட்டத்தை வைத்து சுற்றி எடுங்கள். பின் மிதமான ஓட்டத்தில் வைத்து அனைத்தும் ஒன்றாக அரைபட்டதும் மிக்ஸி ஜாரின் மூடியை திறந்து அரை கப் அளவிற்கு ரீபைண்ட் ஆயில் சேர்த்துக் கொள்ளுங்கள். நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்றவற்றை உபயோகிக்க கூடாது.

ரீஃபைண்ட் ஆயில் சேர்த்து மீண்டும் ஒரு முறை சுற்றுகள் சுற்றி எடுங்கள். ஓரிரு வினாடிகள் சுற்றி எடுத்தால் போதும், அதிகம் சுற்றினால் கூல் போல ஆகிவிடும். மீண்டும் ஒரு முறை திக்கான பதத்திற்கு வருவதற்கு 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு ஒருமுறை சுற்றி எடுத்துக் கொள்ளலாம். ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய இந்த மயோனைஸ் பச்சை முட்டை மற்றும் எண்ணெய் கலந்து தயாரிப்பதால் விரைவில் பாக்டீரியாக்கள் இனப்பெருக்கம் செய்ய ஆரம்பித்துவிடும். எனவே நீங்கள் செய்ததும் ஃப்ரிட்ஜில் வைத்து அதிகபட்சம் நான்கு நாள் வரை பயன்படுத்தலாம். அதற்கு மேல் பயன்படுத்தக் கூடாது. நீங்களும் இதே முறையில் செய்து வீட்டிலேயே ஆரோக்கியம் மிகுந்த சுவையான மயோனைஸ் சாப்பிட்டு பாருங்கள்.

- Advertisement -