
நாளைய தினம் 29-1-2025 ஆம் தேதி தை அமாவாசை, புதன்கிழமையோடு சேர்ந்து திருவோண நட்சத்திரமும் இருக்கிறது. அதி சக்தி வாய்ந்த இந்த நாளில் வரக்கூடிய சோடச கலை நேரத்தை நாம் சரியாக பயன்படுத்தி, வேண்டுதல் வைத்தோம் என்றால் நம்முடைய பண கஷ்டத்திலிருந்து, கடன் சுமையிலிருந்து சுலபமாக வெளிவரலாம்.
வாழ்க்கையில் பொருளாதாரத்தில் எவ்வளவு சீக்கிரம் முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு இருக்கிறது, அந்த ஆர்வத்தை எல்லாம் நிறைவேற்றிக்கொள்ள இந்த சோடச கலை நேரத்தில், பிரபஞ்சத்திடம் வேண்டுதல் வைத்து பாருங்கள். நீங்கள் கேட்ட செல்வ வளம் எல்லாம் உடனே உங்களுக்கு கிடைக்கும்.
வாழ்வில் முன்னேறக்கூடிய வாய்ப்புகள் உங்கள் வீடு தேடி வர துவங்கிவிடும். அப்பேற்பட்ட ஒரு சக்தி வாய்ந்த சோடசக்கலை நேரமானது நாளைய தினம் எப்போது வருகிறது, அந்த சோடசக்கலை நேரத்தில் நாம் செய்ய வேண்டிய வழிபாடு என்ன, இது பற்றிய தகவல்களை எல்லாம் விரிவாக இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
29ஆம் தேதி தை அமாவாசை வந்தாலும், 28ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 8:10 மணிக்கு அமாவாசை திதியானது பிறந்து விடுகிறது. மறுநாள் 29ஆம் தேதி புதன்கிழமை, இரவு 7:21 மணிக்கு அமாவாசை திதியானது நிறைவடைகிறது. அமாவாசை திதி தர்ப்பண காரியங்களை எல்லாம் 29ஆம் தேதி புதன்கிழமை காலையில் தான் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.
29-1- 2025 புதன்கிழமை மாலை 6:21 மணியிலிருந்து 8:21 மணி வரை சோடசக்கலை நேரமானது நமக்கு இருக்கிறது. இந்த நாளில் திருவோணம் நட்சத்திரம் இருப்பதால், அதுவும் புதன்கிழமையோடு சேர்ந்த இந்த நாள் வந்திருப்பதால், பெருமாளுக்கு ரொம்ப ரொம்ப சிறப்பு. கடன் சுமையை குறைப்பதிலும், புத்தி கூர்மையை கொடுப்பதிலும், செல்வ வளத்தை வாரி வாரி கொடுப்பதிலும், பெருமாளுக்கு நிகர் வேறு யாரும் கிடையாது.
அந்த மகாலட்சுமியும் பெருமாளுடைய மார்பில் தான் அமர்ந்திருக்கிறார்கள். ஆகவே பெருமாளையும் மகாலட்சுமியும் நினைத்துதான் பூஜை அறையில் நம்முடைய வேண்டுதலை வைக்கப் போகின்றோம். மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த சோடசக்கலை நேரத்தில் பூஜையறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள்.
உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்பதை ஒரு பிரியாணி இலையில் முதலில் எழுதுங்கள். கடன் பிரச்சனையை தீர்ப்பதற்கு பணம் தேவைப்படலாம், வீடு கட்ட பணம் தேவைப்படலாம், சேமிப்பிற்கு பணம் தேவைப்படலாம், நகை வாங்க பெண்ணிற்கு திருமணம் செய்ய பிள்ளைகளைப் படிக்க வைக்க, எந்த தேவையாக இருந்தாலும் 2 லட்சம், பணம் தேவை, 5 லட்சம் பணம் தேவை என்று உங்களுடைய தகுதிக்கு ஏற்ப அந்த பிரியாணி இலையில் எழுதி விடுங்கள். இது அப்படியே தனியாக இருக்கட்டும்.
கோடி கோடியாக சில பேருக்கு கடன் இருக்கும். லட்ச லட்சமாக கடன் இருக்கும். சில பேருக்கு சில்லறை கடன் கூட இருக்கும். அந்த கடன் சுமை தீர வேண்டும் என்று ஒரு பிரியாணி இலையில் தனியாக எழுதி விட வேண்டும். ஆக மொத்தத்தில் 2 பிரியாணி இலை.
இந்த இரண்டு பிரியாணி இலைகளையும் ஒரு தட்டில் வைத்து விட்டு பூஜையறையில் வைத்து விடுங்கள். பூஜையறையில் ஒரு விளக்கம் ஏற்றப்பட வேண்டும். பிறகு. பிரபஞ்சத்திடம் உங்களுடைய வேண்டுதலை சொல்ல வேண்டும். எனக்கு இவ்வளவு பிரச்சனை இருக்கிறது, இந்த கடன் தீர வேண்டும். இவ்வளவு பணத்தை எனக்கு சீக்கிரம் இந்த பிரபஞ்சம் கொடுக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இரண்டு மணி நேரம் இருக்கக்கூடிய இந்த சோடசக்கலை நேரத்தில் உங்களால் எவ்வளவு மணி நேரம் முடியுமோ, அவ்வளவு மணி நேரம் தியான நிலையில் அமர்ந்து வேண்டுதலை வைக்கலாம்.
பத்து நிமிடம் மட்டும்தான் பிரார்த்தனை செய்ய முடியும் என்றாலும், பிரார்த்தனை செய்து விடுங்கள். கடன் பிரச்சனையை எழுதி வைத்திருக்கும் பிரியாணி இலையை எடுத்து நெருப்பில் பொசிக்கி விட வேண்டும். ஒரு தீக்குச்சியை பொருத்தி அந்த நெருப்பில் இந்த பிரியாணி இலையை சாம்பலாக்கி விடுங்கள். பண வரவு வேண்டும் என்று எழுதி வைத்திருக்கிறீர்கள் அல்லவா, அந்த பிரியாணியிலையை எடுத்து பீரோவில் வைத்து விட வேண்டும்.
இந்த சோடச கலை நேரத்தில் பண வசியத்திற்காக 108 முறை சொல்ல வேண்டிய மந்திரமும் இருக்கிறது. வேண்டுதலோடு சேர்த்து பெருமாளை நினைத்து மகாலட்சுமியை நினைத்து இந்த மந்திரத்தை சொன்னால் உங்களுக்கான பண வசிய அதிகரிக்கும். பணத்தை நீங்கள் அதிகமாக ஈர்க்கக் கூடிய நபராக மாறுவீர்கள். உச்சரிக்க வேண்டிய பண வசிய மந்திரம் இதோ.
ஓம் ரீங் வசி வசி தனம் பணம் தினம் தினம்
மேலே சொன்ன பரிகாரத்தோடு சேர்த்து இந்த மந்திரத்தையும் உச்சரியுங்கள். பரிகாரத்தை செய்வதற்கு நேரம் இல்லை என்றாலும் சரி, நின்ற இடத்தில் இருந்தே இந்த பண வசிய மந்திரத்தை 27 முறை குறைந்த பட்சம் சொன்னாலும் உங்களுக்கான பண பிரச்சனை கூடிய விரைவில் தீர்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணப் பிரச்சினையைத் தவிர சில பேருக்கு வாழ்க்கையில் இன்னும் தீர்க்க முடியாத நிறைய பிரச்சனைகள் இருக்கும்.
இதையும் படிக்கலாமே: செவ்வாய்க்கிழமையில் பிறக்கும் அமாவாசை திதி பரிகாரம்
அந்த பிரச்சனைகள் தீர வேண்டும் என்பதற்காகவும் இந்த சோடசக்கலை நேரத்தில் பிரபஞ்சத்திடம் வேண்டுதல் வைக்கலாம். உங்களுடைய வேண்டுதல் அப்படியே பளிக்கும். இந்த அற்புதம் வாய்ந்த ஆன்மீகம் சார்ந்த தகவலை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மன மகிழ்ச்சியுடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.